Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

கவாஸாகி நின்ஜா ZX-10R சூப்பர் பைக் அறிமுகம்

By MR.Durai
Last updated: 12,October 2015
Share
SHARE
புதிய கவாஸாகி நின்ஜா ZX-10R சூப்பர் பைக் உருவாக்கியதில் கவாஸாகி ரேசிங் குழுவின் பங்கு அதிகமாக உள்ளது.  2016 கவாஸாகி ZX-10R சூப்பர் பைக் உலக சூப்பர் பைக் போட்டியில் பங்குபெறும் சூப்பர் பைக்குகளுக்கு இணையான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கவாஸாகி நின்ஜா ZX-10R சூப்பர் பைக்

கவாஸாகி ரேசிங் டீம் கூட்டணியில் பைக் பந்தய வீரர்களான ஜானதன் ரியா மற்றும் டாம் ஸ்கெய்ஸ் போன்ற பிரபலமான வீரர்களின் வழிகாட்டுதலில் பல புதிய வசதிகளை கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் சூப்பர் பைக் பெற்றுள்ளது.

புதிய கவாஸாகி நின்ஜா ZX-10R சூப்பர் பைக் தோற்ற அமைப்பு முதல் என்ஜின் வரை பல மாற்றங்களை கண்டுள்ளது. பவர் முந்தைய மாடலை விட அதிகமாக இருக்கும்.  தோற்றத்தில் சிறப்பான ஏரோடைனமிக் நுட்பங்கள் , வாகனத்தின் நிலைப்பு தன்மை  போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

கவாஸாகி நின்ஜா ZX-10R

சூப்பர் பைக் பிரிவில் ZX-10R சூப்பர் பைக்கில் உள்ள என்ஜின்தான் முதன்முறையாக யூரோ4 மாசு கட்டுபாடு விதிகளுக்கு ஏற்ற என்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

210 குதிரைதிறன் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் . மேலும் புதிய என்ஜின் சிலிண்டர் ஹெட் முந்தைய தலைமுறை என்ஜினை விட 20  சதவீதம் வரை எடை குறைவாகும்.

கவாஸாகி ZX-10R  பைக்கில் புதிய எலக்ட்ரானிக் திராட்டில் மற்றும் டைட்டானியம் புகைப்போக்கி பெறுள்ளதால் சிறப்பான செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். நம் தேவைக்கேற்ப பல விதமான டிரைவ் மோட் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் சிறப்பான ரைடிங் அனுபவத்தினை பெற இயலும்.

புதிய ZX-10R பைக்கில் பிரெம்போ M50 மோனோபிளாக் 330மிமீ இரட்டை டிஸ்க் பிரேக்குகளை முன்பக்கத்தில் பெற்றுள்ளது. பின்புறத்தில் 220மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக்கில் அலுமினிய சிங்கிள் பிஸ்டன் கேலிபர் பொருத்தியுள்ளனர்.

கவாஸாகி நின்ஜா ZX-10R

கவாஸாகி நின்ஜா ZX-10R

WSBK  வடிவ முன்புற ஃபோர்க்குள் மிக சிறப்பான நவீன நுடபத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. கவாஸாகி ZX-10R சூப்பர் பைக் உச்சகட்ட நவீன அம்சமாக இணைக்கப்பட்டுள்ள போஸ் இனர்ஷில் மெஸ்ர்மெண்ட் யூனிட் (Bosch Inertial Measurement Unit -IMU ) 5 விதமான அச்சு அளவுகளில் பைக்கினை கட்டுபடுத்த இசியூ புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பார்ட் – கவாஸாகி டிராக்சன் கன்ட்ரோல் , லேஞ்ச் கன்ட்ரோல் மோட் , பவர் செல்க்‌ஷன் ,  இன்டிலிஜியண்ட் ஏபிஎஸ் , கவாஸாகி என்ஜின் பிரேக் கன்ட்ரோல் மற்றும் கவாஸாகி குயீக் ஷிஃப்டர்    என பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

2016 கவாஸாகி ZX-10R சூப்பர் பைக் இத்தாலியில் நடக்க உள்ள  2016 EICMA ஷோவில் காட்சிக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து இந்தய சந்தைக்கு வரவுள்ளது. புதிய கவாஸாகி நின்ஜா ZX-10R சூப்பர் பைக் முந்தைய மாடலை விட சற்று கூடுதலாக இருக்கும்.

2016 Kawasaki ZX-10R
2016 Kawasaki ZX-10R

கவாஸாகி நின்ஜா இசட் எக்ஸ் 10 ஆர் மொத்தம் 4 விதமான வேரியண்டில் வந்துள்ளது.  அவை ஸ்டான்டர்டு (ஏபிஎஸ் இல்லை) , ஏபிஎஸ் வேரியண்ட் , சிறப்பு KRT பதிப்பு ஏபிஎஸ் இல்லை மற்றும்  சிறப்பு KRT பதிப்பு ஏபிஎஸ்  ஆகும்.

கவாஸாகி நின்ஜா ZX-10R சூப்பர் பைக்கின் அமெரிக்கா விலை ரூ. 9.71 லட்சத்தில் தொடங்கி ரூ.10.55 லட்சம் வரை ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு வரும்பொழுது விலை இரு மடங்காகும்.
2016 Kawasaki ZX-10R

2016 Kawasaki ZX-10R

2016 Kawasaki ZX-10R

2016 Kawasaki ZX-10R

2016 Kawasaki ZX-10R

2016 Kawasaki ZX-10R Revealed

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
TAGGED:Kawasaki
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சுசூகி ஜிக்ஸர் sf 155
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 yamaha rayzr 125 fi hybrid
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம்,
2025 honda shine 100 obd-2b
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms