Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Bike News

ராயல் என்ஃபீல்டு Meteor 350 பைக்கின் புதிய தகவல்கள் கசிந்தது

By MR.Durai
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

2f68a re meteor 350 leaked pic

வரும் செப்டம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு Meteor 350 க்ரூஸர் ரக பைக்கின் பல்வேறு விபரங்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றது. அந்த வரிசையில் தற்போது சஸ்பென்ஷன் விபரம் வெளியாகியுள்ளது.

முன்பாக புதிய மீட்டியோர் 350 பைக்கில் இடம்பெற உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட 349சிசி இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி மற்றும் 27 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என கிடைத்த தகவலை தொடர்ந்து, வேரியண்ட், நிறங்கள், வசதிகள், டிரிப்பர் நேவிகேஷன் போன்றவற்றின் விபரங்கள் வெளியாகியது.

முந்தைய தண்ட்ர்பேர்டு 350எக்ஸ் மாடலை போலவே முன்புறத்தில் 130 மிமீ பயணிக்கும் திறனுடன் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் இடம்பெற்றுள்ளது. ஆனால் பின்புறத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட 6 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ட்வீன் ஸ்பிரிங்ஸ் (முந்தைய தண்டர்பேர்டில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன்) கொடுக்கப்பட்டுள்ளது.

மீட்டியோரின் பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டு முன்புறத்தில் 100/90-19 மற்றும் பின்புறத்தில் 140/70-17 டயர் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 15 லிட்டராக (முன்பு 20 லிட்டர்) குறைக்கப்பட்டுள்ளது.

64b70 royal enfield meteor technical specs leaked1

மீட்டியோரில் ஃபயர்பால், ஸ்டெல்லர், மற்றும் சூப்பர் நோவா (Fireball, Stellar & Supernova) என மூன்று விதமான வேரியண்டில் உள்ள வசதிகள் மற்றும் 7 விதமான நிறங்களின் விபரம் தற்போது இணையத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக மீட்டியோரில் இடம்பெற உள்ள டிரிப்பர் நேவிகேஷன் ப்ளூடூத் ஆதரவுடன் செயல்படக்கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷனாக விளங்கும்.

வரும் செப்டம்பர் இறுதியில் RE Meteor 350 விற்பனைக்கு ரூ.1.65 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் விலைக்குள் அமையலாம்.

விபரம்

Royal Enfield Meteor 350

Royal Enfield Thunderbird 350X

என்ஜின்

349cc air-cooled fuel-injected engine

346cc air-cooled carburetted engine

பவர்

20.4PS at 6100rpm

20.07PS at 5250rpm

டார்க்

27Nm at 4000rpm

28Nm at 4000rpm

முன்புற

சஸ்பென்ஷன்

41mm telescopic fork, 130mm travel

41mm telescopic fork, 130mm travel

பின்புற

சஸ்பென்ஷன்

6-step preload adjustable shock absorbers

5-step preload-adjustable gas-charged shock absorbers

முன் பிரேக்

300mm disc, ABS

280mm disc, ABS

பின் பிரேக்

270mm disc, ABS

240mm disc, ABS

முன் டயர்

100/90- 19, tubeless tyre

90/90 – 19, tubeless tyre

பின்டயர்

140/70- 17, tubeless tyre

120/80- 18, tubeless tyre

டேங்க்

15 லிட்டர்

20 லிட்டர்

 

image source

Royal Enfield Meteor 350
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Articleபுதிய கியா Sonet எஸ்யூவி காரின் சிறப்பு விமர்சனம்
Next Article அசோக் லேலண்ட் படா தோஸ்த் விற்பனைக்கு வந்தது

Related Posts

Triumph Thruxton 400 spied

ஆகஸ்ட் 6 ஆம் தேதி டிரையம்ப் Thruxton 400 கஃபே ரேசர் விற்பனைக்கு வருகை.!

new bsa bantam 350

இந்தியாவில் பிஎஸ்ஏ பான்டம் 350 விற்பனைக்கு வருமா .?

Auto News
honda cb 125 hornet

ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

23,July 2025
2025 tvs apache rtr 310

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

19,July 2025
vida vx2 electric scooter

ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

1,July 2025
2025 tvs jupiter ivory brown

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

10,June 2025
suzuki e access on road

சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

28,May 2025
Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.