வரும் செப்டம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு Meteor 350 க்ரூஸர் ரக பைக்கின் பல்வேறு விபரங்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றது. அந்த வரிசையில் தற்போது சஸ்பென்ஷன் விபரம் வெளியாகியுள்ளது.
முன்பாக புதிய மீட்டியோர் 350 பைக்கில் இடம்பெற உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட 349சிசி இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி மற்றும் 27 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என கிடைத்த தகவலை தொடர்ந்து, வேரியண்ட், நிறங்கள், வசதிகள், டிரிப்பர் நேவிகேஷன் போன்றவற்றின் விபரங்கள் வெளியாகியது.
முந்தைய தண்ட்ர்பேர்டு 350எக்ஸ் மாடலை போலவே முன்புறத்தில் 130 மிமீ பயணிக்கும் திறனுடன் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் இடம்பெற்றுள்ளது. ஆனால் பின்புறத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட 6 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ட்வீன் ஸ்பிரிங்ஸ் (முந்தைய தண்டர்பேர்டில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன்) கொடுக்கப்பட்டுள்ளது.
மீட்டியோரின் பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டு முன்புறத்தில் 100/90-19 மற்றும் பின்புறத்தில் 140/70-17 டயர் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 15 லிட்டராக (முன்பு 20 லிட்டர்) குறைக்கப்பட்டுள்ளது.
மீட்டியோரில் ஃபயர்பால், ஸ்டெல்லர், மற்றும் சூப்பர் நோவா (Fireball, Stellar & Supernova) என மூன்று விதமான வேரியண்டில் உள்ள வசதிகள் மற்றும் 7 விதமான நிறங்களின் விபரம் தற்போது இணையத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக மீட்டியோரில் இடம்பெற உள்ள டிரிப்பர் நேவிகேஷன் ப்ளூடூத் ஆதரவுடன் செயல்படக்கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷனாக விளங்கும்.
வரும் செப்டம்பர் இறுதியில் RE Meteor 350 விற்பனைக்கு ரூ.1.65 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் விலைக்குள் அமையலாம்.
விபரம் |
Royal Enfield Meteor 350 |
Royal Enfield Thunderbird 350X |
என்ஜின் |
349cc air-cooled fuel-injected engine |
346cc air-cooled carburetted engine |
பவர் |
20.4PS at 6100rpm |
20.07PS at 5250rpm |
டார்க் |
27Nm at 4000rpm |
28Nm at 4000rpm |
முன்புற சஸ்பென்ஷன் |
41mm telescopic fork, 130mm travel |
41mm telescopic fork, 130mm travel |
பின்புற சஸ்பென்ஷன் |
6-step preload adjustable shock absorbers |
5-step preload-adjustable gas-charged shock absorbers |
முன் பிரேக் |
300mm disc, ABS |
280mm disc, ABS |
பின் பிரேக் |
270mm disc, ABS |
240mm disc, ABS |
முன் டயர் |
100/90- 19, tubeless tyre |
90/90 – 19, tubeless tyre |
பின்டயர் |
140/70- 17, tubeless tyre |
120/80- 18, tubeless tyre |
டேங்க் |
15 லிட்டர் |
20 லிட்டர் |