Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.29.15 லட்சம் விலையில் BYD e6 எலக்ட்ரிக் எம்பிவி விற்பனைக்கு வந்தது

by MR.Durai
1 November 2021, 10:08 pm
in Car News
0
ShareTweetSendShare

762ae byd e6

சீனாவை தலைமையிடமாக கொண்ட பிஒய்டி (BYD-Build Your Dreams) நிறுவனத்தின் e6 எலக்ட்ரிக் எம்பிவி காரின் விலை ரூ.29.15 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. 5 இருக்கைகளை பெற்ற இந்த மின்சார காரின் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் வர்த்தகரீதியான (B2B) பயன்பாட்டிற்கு மட்டும் கிடைக்க உள்ளது.

சென்னை, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி என்சிஆர், ஹைதராபாத், கொச்சி, மும்பை மற்றும் விஜயவாடா என மொத்தமாக 8 மாநகரங்களில் e6 கிடைக்கும் என BYD குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது இந்த இடங்களில் டீலர் நெட்வொர்க்கை உறுதிப்படுத்தியுள்ளது.

BYD e6 எலக்ட்ரிக் கார்

e6 எம்பிவி காரில் எல்இடி ரன்னிங் விளக்குடன், பின்பக்க எல்இடி டெயில்-லைட்கள், லெதர் இருக்கைகள், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் மற்றும் முன் பயணிகள் இருக்கைகள், ப்ளூடூத் மற்றும் வைஃபை இணைப்புடன் கூடிய 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.

09fdc byd e6 interior

e6 காரினை BYD இ-பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு ஐந்து இருக்கைகள் கொண்ட மின்சார காரில் 71.7kWh லித்தியம் ஐயன் பாஸ்பேட் பேட்டரி பெற்று அதிகபட்சமாக 95hp பவர், 180Nm டார்க் வழங்குகின்றது. மணிக்கு 130 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.

BYD அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி தோராயமாக 415km வரை பயணிக்கலாம் என WLTC சோதனையில் குறிப்பிட்டுள்ளது. அடுத்தப்படியாக, நகர்ப்புற பயன்பாட்டில் அதிகபட்சமாக 520 கிமீ கிடைக்கும் WLTC மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.  DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்ற இந்த காரில் 30-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் போதுமானதாகும்.

3f83e byd e6 boot space

BYD இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதத்தை மூன்று ஆண்டுகள்/1,25,000 கிமீ, பேட்டரிக்கு வாரண்டி எட்டு ஆண்டுகள்/5,00,000 கிமீ மற்றும் எட்டு ஆண்டுகள்/1,50,000 கிமீ மோட்டார் உத்தரவாதத்தை வழங்க உள்ளது.

c7e28 byd e6 electric mpv

Related Motor News

e6 இனிமேல் BYD eMax 7 என அழைக்கப்படும்..!

டெஸ்லாவை வீழ்த்தும் BYD ஆட்டோ எலக்ட்ரிக் வாகனங்களின் தலைவன்

ரூ.8000 கோடி BYD எலக்ட்ரிக் கார் முதலீட்டை நிராகரித்த மோடி அரசு

Tags: BYD E6
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

டாடா ஹாரியர்.இவி பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள்.!

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan