Skip to content

ஹீரோ மோட்டோகார்ப் பைக் விலையை ரூ.2,000 வரை உயருகின்றது.

dba2f hero xpulse 200 4v

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விலையை அதிகபட்சமாக ரூ.2000 வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஏப்ரல் 5 முதல் 2,000 ரூபாய் வரை உயர்த்தப் போவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் விலைகளின் பாதிப்பை ஓரளவு ஈடுகட்ட இந்த விலைத் திருத்தம் அவசியம் என்று நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் அதன் முழு தயாரிப்பு வரிசையின் எக்ஸ்-ஷோரூம் விலையில் மேல்நோக்கி திருத்தம் செய்யும். விலை திருத்தம் ரூ. 2,000 வரை இருக்கும், மேலும் சரியான அளவு அதிகரிப்பு குறிப்பிட்ட மாடல்கள் மற்றும் சந்தைக்கு உட்பட்டது.