ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய பிரிமியா (Hero Premia) ஷோரூம் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரில் 3000 சதுர அடியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் ஹீரோ பிரிமியம் பைக்குகள்,விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஹார்லி பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
தற்பொழுது துவங்கப்பட்டுள்ள பிரிமியா ஷோரூமில் கரீஸ்மா எக்எஸ்எம்ஆர், விடா வி1 மற்றும் ஹார்லி-டேவிட்சன் X440 என மூன்று மாடல்கள் உள்ளது.
Hero Premia
Premia டீலர்ஷிப் ஆனது தனித்துவமான பிரீமியமான கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. இந்த நவீனத்துவமான 3000 சதுர அடி டீலர்ஷிப், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொறுத்து தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற விற்பனைக் குழுவுடன் சிறந்த பிரீமியம் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் இந்திய வணிகப் பிரிவின் தலைமை வணிக அதிகாரி திரு ரஞ்சிவ்ஜித் சிங் கூறுகையில், “இந்தியாவில் எங்களது முதல் பிரீமியம் டீலர்ஷிப் திறந்துள்ளோம் , நாங்கள் எங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் பன்முக மாடல் காட்சிக்கு மட்டும் வழங்கவில்லை, எதிர்காலத்தைக் காட்சிப்படுத்துகிறோம். பிரீமியம், புதுமையான மற்றும் நிலையான அனுபவத்தை வழங்கும். FY’24 இந்தியா முழுவதும் அதன் பிரிமியா டீலர்கள் அதிகம் துவங்க எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் பல்வேறு புதிய பிரீமியம் பைக்குகள் தொடர்ந்து அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.