Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2023 ஹூண்டாய் ஆரா கார் அறிமுகம்., முன்பதிவு துவங்கியது

புதிய ஆரா செடான் காரில் 6 ஏர்பேக்குகள், 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

by MR.Durai
9 January 2023, 4:50 pm
in Car News
0
ShareTweetSend

Hyundai Aura Facelift

ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ள புதிய ஹூண்டாய் ஆரா செடானின் முன்பக்க தோற்றம், நவீனத்துவமான வசதிகளை பெற உள்ளது. முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணம் ரூ.11,000 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2020-ல் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஆரா காரின் முதல் மேம்படுத்தப்பட்ட மாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்த டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட்டுள்ளது.

2023 Hyundai Aura

புதிய ஆரா செடான் காரில் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113.8 என்எம் டார்க்கை வழங்குகின்றது. இதில் 5 வேக MT மற்றும் AMT ஆகிய இரண்டு விருப்பங்களிலும் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் 69 PS மற்றும் 95.2 Nm டார்க்கை வெளிப்படுத்துகின்றது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கிறது.

ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரில் முன்பக்க வடிவமைப்பில் காம்பாக்ட் செடான் மிகவும் நேர்த்தியான மற்றும் இரு பிரிவான கிரிலை பெறுகிறது. கிரில் மத்தியில் ஹூண்டாய் லோகோவை மற்றும் பானட்டுக்கு இடையில் மெலிதாக அமைந்துள்ளது.

L-வடிவ எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் பம்பரின் விளிம்புகளில் வைக்கப்பட்டுள்ளது இருப்பினும் ஃபோக் லேம்ப் ஃபேஸ்லிஃப்ட்  மாடலில் நீக்கப்பட்டுள்ளது. மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

Hyundai Aura Facelift Interior

கேபின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் இல்லாமல் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, தோல் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் ஃபுட்வெல் பகுதியில் புதிய விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆரா ஃபேஸ்லிஃப்ட்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பின்புற ஏசி வென்ட்கள், தானியங்கி ஏசி கட்டுப்பாடு மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றுடன் 8.0 இன்ச் தொடுதிரையை பெற்றுள்ளது.  புதிய டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் புதிய 3.5-இன்ச் உள்ளிட்ட கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களையும் பெறுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே பெற்றுள்ளது.

இப்போது நான்கு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி ஆகியவற்றுடன் ஆப்ஷனல் வேரியண்டில் ஆறு ஏர்பேக்குகள், இஎஸ்சி மற்றும் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகியவை விருப்பமான பாதுகாப்பு அம்சங்களாகும். இது சென்ட்ரல் லாக்கிங் மற்றும் கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஐஎஸ்ஓஃபிக்ஸ்  மற்றும் பகல்/இரவு நேர ரியர் வியூ மிரர் ஆகியவற்றை பெறுகிறது.

Hyundai Aura Facelift Side

அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் விலை விரைவில் வெளியிடப்படும்.

new Hyundai Aura Facelift Rear

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்

Related Motor News

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி நுட்பத்தை கொண்டு வரும் ஹூண்டாய்

ரூ.6.29 லட்சத்தில் 2023 ஹூண்டாய் ஆரா விற்பனைக்கு வந்தது

ரூ.5.79 லட்சம் விலையில் ஹூண்டாய் ஆரா கார் விற்பனைக்கு அறிமுகம்..!

ஆரா செடான் காருக்கு முன்பதிவை துவங்கிய ஹூண்டாய்

Tags: Hyundai Aura
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

maruti suzuki victoris launched

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

2026 பிஎம்டபிள்யூ iX3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 805 கிமீ..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan