Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.6.29 லட்சத்தில் 2023 ஹூண்டாய் ஆரா விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
ஜனவரி 23, 2023
in கார் செய்திகள்

புதிய ஹூண்டாய் ஆரா காரின் தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. சிஎன்ஜி ஆப்ஷன் கூடுதலாக இடம் பெற்றுள்ள நிலையில் டர்போ பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட்டுள்ளது.

2023 Hyundai Aura

புதிய ஆரா செடான் காரில் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113.8 என்எம் டார்க்கை வழங்குகின்றது. இதில் 5 வேக MT மற்றும் AMT ஆகிய இரண்டு விருப்பங்களிலும் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் 69 PS மற்றும் 95.2 Nm டார்க்கை வெளிப்படுத்துகின்றது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கிறது.

ஆரா காரில் புதிய பானெட் வடிவமைப்பை கொண்டு மிக நேர்த்தியான இரண்டு பிரிவு கிரில்லை கொண்டுள்ளது. காம்பாக்ட் செடான் புதிய எல்-வடிவ எல்இடி ரன்னிங் விளக்கினை பம்பரின் விளிம்புகளில் பெற்றுள்ளது. 15-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் எல்இடி டெயில்-லைட்டுகளுக்கான முந்தைய வடிவமைப்பில் தொடர்வதால், பக்கவாட்டிலும் பின்புறத்திலும் எந்த மாற்றத்தையும் காணவில்லை. ஃபேஸ்லிஃப்ட்  ஆரா அடிப்படை டிரிம் தவிர மற்ற அனைத்திலும் பூட் லிட் ஸ்பாய்லரைக் கொண்டுள்ளது.

கேபின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் இல்லாமல் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, தோல் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் ஃபுட்வெல் பகுதியில் புதிய விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆரா ஃபேஸ்லிஃப்ட்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பின்புற ஏசி வென்ட்கள், தானியங்கி ஏசி கட்டுப்பாடு மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றுடன் 8.0 இன்ச் தொடுதிரையை பெற்றுள்ளது.  புதிய டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் புதிய 3.5-இன்ச் உள்ளிட்ட கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களையும் பெறுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே பெற்றுள்ளது.

இப்போது நான்கு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி ஆகியவற்றுடன் ஆப்ஷனல் வேரியண்டில் ஆறு ஏர்பேக்குகள், இஎஸ்சி மற்றும் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகியவை விருப்பமான பாதுகாப்பு அம்சங்களாகும். இது சென்ட்ரல் லாக்கிங் மற்றும் கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஐஎஸ்ஓஃபிக்ஸ்  மற்றும் பகல்/இரவு நேர ரியர் வியூ மிரர் ஆகியவற்றை பெறுகிறது.

Hyundai Aura Facelift Price list:

Variant Price
E 1.2 Petrol MT Rs. 6.29 Lakhs
S 1.2 Petrol MT Rs. 7.15 Lakhs
S 1.2 Petrol+CNG MT Rs. 8.10 Lakhs
SX 1.2 Petrol MT Rs. 7.92 Lakhs
SX 1.2 Petrol+CNG MT Rs. 8.87 Lakhs
SX+ 1.2 Petrol AMT Rs. 8.72 Lakhs
SX(O) 1.2 Petrol MT Rs. 8.11 Lakhs

All prices, ex-showroom

Tags: Hyundai Aura
Previous Post

ஹோண்டா ஆக்டிவா H-Smart ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version