Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல்

By MR.Durai
Last updated: 20,May 2023
Share
SHARE

KTM 390 Adventure with spoked wheels

இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற 390 அட்வென்ச்சர் பைக்கில் நான்கு விதமான வேரியண்டுகளை வழங்கி ₹ 2.81 லட்சம் முதல் துவங்கி ₹ 3.60 லட்சம் வரை மாறுபட்ட விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

Contents
  • 2023 KTM 390 Adventure X
  • 2023 KTM 390 Adventure STD
  • 2023 KTM 390 Adventure V
  • 2023 KTM 390 Adventure SW

குறிப்பாக, விற்பனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 மற்றும் வரவிருக்கும் லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற சக்திவாய்ந்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மாற்றத்தை கேடிஎம் கொண்டு வந்துள்ளது.

பொதுவாக நான்கு வேரியண்டிலும் தொடர்ந்து கேடிஎம் 390 அட்வென்ச்சரில் 373.2cc லிக்யூடு-கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டு 43.5 hp குதிரைத்திறன் மற்றும் 37 Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.

2023 KTM 390 Adventure X

2023 KTM 390 Adventure X

மிக குறைந்த விலையில் கிடைக்கின்ற KTM 390 Adventure X வேரியண்டில் பல்வேறு வசதிகள் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடலில் TFT டிஸ்பிளே நீக்கப்பட்டு, எல்சிடி கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றபடி, டிராக்‌ஷன் கன்ட்ரோல் , க்விக் ஷிஃப்ட் போன்ற வசதிகள் நீக்கப்பட்டுள்ளது. கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் ஆஃப் ரோடு மோடு உள்ளது.

2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விலை ₹ 2.81 லட்சம் ஆகும்.

ktm-390-ADVENTURE x

2023 KTM 390 Adventure STD

முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த அதே மாடல் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் கிடைக்கின்றது. கார்னரிங் ஏபிஎஸ், ஏபிஎஸ் மோடு, க்விக் ஷிஃப்ட் வசதி, டிராக்‌ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களுடன் TFT டிஸ்பிளே உடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் விலை ₹ 3.39 லட்சம் ஆகும்.

ktm-390-ADVENTURE v

2023 KTM 390 Adventure V

குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் 20 mm வரை இருக்கை உயரம் குறைக்கப்பட்டுள்ள இந்த 390 அட்வென்ச்சர் வி வேரியண்டின் இருக்கை உயரம் 830 மற்றபடி எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கின் விலை அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் டீலர்களை வந்தடைந்துள்ள பைக்கின் விலை STD மாடலை போலவே இருக்கலாம்.

2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் V விலை ₹ 3.39 லட்சம் ஆகும்.

2023 KTM 390 Adventure SW

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்தியேக ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்கும் வகையில் ட்யூப் பயர் வழங்கப்பட்டு ஸ்போக்டு வீல் மற்றும் அட்ஜெஸ்ட்மென்ட கொண்ட இருபக்க சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

19-இன்ச் முன்புற ஸ்போக் வீல் மற்றும் 17-இன்ச் பின்புற ஸ்போக் வீல், முன்புறத்தில் WP அபெக்ஸ் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்டுக்கு ஒவ்வொன்றும் 30 கிளிக்குகள் உள்ளது.  பின்புறத்தில் WP அபெக்ஸ் மோனோ-ஷாக் ஆனது 10 ஸ்டெப் முறையில் ரைடருக்கு ஏற்ப சரிசெய்யக்கூடியதாக விளங்குகின்றது.

ktm-390-ADVENTURE-SPOKED-WHEELS

3D IMU (Inertial Measurement Unit), க்விக்‌ஷிஃப்டர்+, கார்னரிங் ABS, ரைடிங் மோடுகள் (ஸ்ட்ரீட் & ஆஃப்ரோட்), ஆஃப்ரோடு ABS, ரைடு-பை-வயர் டெக், எல்இடி ஹெட்லேம்ப், இழுவைக் கட்டுப்பாடு. , சைட் மவுண்டட் எக்ஸாஸ்ட் சிஸ்டம், 46 மிமீ த்ரோட்டில் பாடி, ஸ்லிப்பர் கிளட்ச், ஐந்து இன்ச் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஆகியவற்றை பெற்றுள்ளது.

2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் SW விலை ₹ 3.60 லட்சம் ஆகும்.

 KTM 390 Adventure Engine Specs
Engine Displacement (CC) 373.2 cc Fi, Single Cylinder Liquid cooled
Power 43 bhp
Torque 37 Nm
Gear Box 6 Speed
  • 2023 KTM 390 Adventure X – ₹ 3.26 லட்சம்
  • 2023 KTM 390 Adventure STD – – ₹ 3.92 லட்சம்
  • 2023 KTM 390 Adventure V – ₹ 3.93 லட்சம்
  • 2023 KTM 390 Adventure Spoke- ₹ 4.05 லட்சம்

(All price on-road Tamil Nadu )

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:KTM 390 Adventure
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
mat orange
Hero Motocorp
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved