Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
4 April 2025, 10:07 am
in TVS
0
ShareTweetSend

2024 டிவிஎஸ் ஜூபிடர் 110

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2025 TVS Jupiter

113.3சிசி ஜூபிடர் ஸ்கூட்டர் வரிசையில் ஜூபிடர் SMW Drum, Disc Alloy, Drum SmartXonnect, Disc SmartXonnect என மொத்தமாக 4 விதமான வகைகளிலும் OBD-2B மேம்பாடு பெற்ற 113.3cc என்ஜின் அதிகபட்சமாக 6,500rpm-ல் 7.91bhp பவர் மற்றும் 9.8Nm @ 5000rpm (with Assist) 9.2Nm @ 5000rpm (without Assist) டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டிவிஎஸ் iGO அசிஸ்ட் டாப் வேரியண்டில் மட்டும் உள்ளது.

IGo Assist எனப்படுகின்ற மைக்ரோ ஹைபிரிட் டெக்னாலஜியானது கொடுக்கப்பட்டிருக்கின்றது இதன் மூலம் பவர்ஃபுல்லான பேட்டரி கொடுக்கப்பட்டு இண்டெகரேட்டட் ஸ்டார்டிங் ஜெனரேட்டர் ஆனது இணைக்கப்பட்டிருக்கின்றது. இது சற்று மேடான இடங்களில் கூடுதல் பவரை வழங்கி நமக்கு சிறப்பான பயண அனுபவத்தை வழங்கவும் இன்ஜின் மைலேஜ் சிறப்பாக மேம்படுத்தவும் உதவுகின்றது.

குறைந்த விலை SMW அதாவது சீட் மெட்டல் வீல் பெற்றஅனைத்து மாடலில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு மற்ற டாப் மாடல்களில் எல்இடி லைட்பார் ஆனது இடம்பெற்றுள்ளது. பொதுவாக 4 வேரியண்டுகளும் பல்வேறு சிறிய வித்தியாசங்களுடன் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இருவிதமான ஆப்ஷனை கொண்டிருப்பதுடன் கூடுதலாக SmartXonnect வசதி மூலம் ப்ளூடூத் இணைப்பின் மூலம் பல்வேறு அம்சங்களை பெறுகின்றது.

இந்த ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதி மூலம் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறும் ஜூபிடர் புளூடூத் வாயிலாக இயக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இது TVS Connect மொபைல் செயலி வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது.

டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், குரல் உதவி, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு எச்சரிக்கைகள். மேலும், டிவிஎஸ் இந்த வேரியண்டில் USB மொபைல் சார்ஜிங் போர்ட் பொருத்தியுள்ளது.

முன்புறத்தில் 130மிமீ டிரம் அல்லது 220 மிமீ டிஸ்க் பெற்ற ஒரு சில வேரியண்டுகள் உட்பட பின்புறத்தில் பொதுவாக 130 மிமீ டிரம் வழங்கப்பட்டு (SBT) கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.

5.1 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 33 லிட்டர் ஸ்டோரேஜ் பெற்ற டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் பரிமாணங்கள் 1,848 மிமீ நீளம், 665 மிமீ அகலம் மற்றும் 1,158 mm உயரம் பெற்று, 1,275 மிமீ வீல்பேஸ் கொண்டதாக உள்ளது. 163 மிமீ வீல்பேஸ் மற்றும் 105 முதல் 106 கிலோ வரை எடை வேரியண்டை பொறுத்து மாறுபடுகின்றது. டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள ஸ்கூட்டரில் இரண்டு பக்கமும் 90/90-12 54J டயர் உள்ளது.

  • Drum Sheet Metal Wheel – Rs 81,891
  • Drum Alloy – Rs 86,741
  • Drum SmartXconnect – Rs 90,291
  • Disc SmartXconnect -Rs 94,196

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

2025 TVS Jupiter 110 on-Road Price Tamil Nadu

டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிடர் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Jupiter SMW ₹ 97,856
  • Disc ₹ 1,04,798
  • Drum SmartXonnect ₹ 1,08,781
  •  Disc SmartXonnect ₹ 1,13,765

(All Price On-road Tamil Nadu)

  • Jupiter SMW ₹ 91,213
  • Disc ₹ 95,772
  • Drum SmartXonnect ₹ 99,967
  •  Disc SmartXonnect ₹ 1,03,958

(All Price on-road Pondicherry)

All new TVS Jupiter 110 3 1

Related Motor News

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் OBD-2B மேம்பாட்டை வழங்கிய டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது.?

ரூபாய் 85,222 விலையில் 2025 ஹோண்டா ஆக்டிவா 110 விற்பனைக்கு வெளியானது.!

110cc ஹோண்டா டியோ விற்பனைக்கு அறிமுகமானது

புதிய சஸ்பென்ஷன் பெற்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி அறிமுகமானது

டிவிஎஸ் ஜூபிடர் 110 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 53.5 x 48.8 mm
Displacement (cc) 113.3 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 7.9 hp (5.9 Kw) at 6,500 rpm
அதிகபட்ச டார்க்

9.8Nm @ 5000rpm (with Assist)

9.2Nm @ 5000rpm (without Assist)

எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் அட்ஜெஸ்டபிள் காயில் ஸ்பிரிங்
பிரேக்
முன்புறம் டிரம் 130 mm/220mm டிஸ்க்
பின்புறம் டிரம் 130 mm (with SBT)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்/SMW
முன்புற டயர்  90/90-12 54J ட்யூப்லெஸ்
பின்புற டயர் 90/90-12 54J ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-4Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 1848 mm
அகலம் 665 mm
உயரம் 1158 mm
வீல்பேஸ் 1275 mm
இருக்கை உயரம் 770 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 163 mm
எரிபொருள் கொள்ளளவு 5.1 litres
எடை (Kerb) 105 kg (Drum) – 106 kg (Disc)

டிவிஎஸ் ஜூபிடர் 110 நிறங்கள்

ஜூபிடர் 110ல் வெள்ளை, நீலம், கிரே, சிவப்பு, ஸ்டார்லைட் ப்ளூ, மற்றும் காப்பர் மேட் என 6 நிறங்கள் உள்ளன.

2024 tvs jupiter 110 colours

2025 TVS Jupiter rivals

2025 டிவிஎஸ் ஜூபிடருக்கு போட்டியாக ஆக்டிவா, பிளெஷர் பிளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 110, டியோ 110 உட்பட இதுன் டாப் வேரியண்ட் விலை 125சிசி ஸ்கூட்டர் மாடல்களுக்கு இணையாக உள்ளது.

 Faqs About TVS Jupiter

டிவிஎஸ் ஜூபிடர் என்ஜின் விபரம் ?

ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் 113.3cc என்ஜின் அதிகபட்சமாக 6,500rpm-ல் 7.91bhp பவர் மற்றும் 9.8Nm @ 5000rpm (with Assist) 9.2Nm @ 5000rpm (without Assist) டார்க் வெளிப்படுத்தும்.

டிவிஎஸ் ஜூபிடர் 110 மைலேஜ் எவ்வளவு ?

டிவிஎஸ் ஜூபிடர் மைலேஜ் லிட்டருக்கு 48-50 கிமீ வரை வழங்கும்.

2024 TVS Jupiter 110 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

டிவிஎஸ் ஜூபிடர் ஆன்-ரோடு விலை ரூ.97,513 முதல் ரூ.1.13 லட்சம் வரை ஆகும்.

டிவிஎஸ் ஜூபிடர் 110 போட்டியாளர்கள் ?

டிவிஎஸ் ஜூபிடர் மாடலுக்கு போட்டியாக ஆக்டிவா, பிளெஷர் பிளஸ், டியோ 110 போன்றவை உள்ளன.

2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 கிளாசிக் வருமா..?

ரெட்ரோ ஸ்டைலை நினைவுப்படுத்தும் கிளாசிக் பற்றி எந்த உறுதியான தகவலையும் டிவிஎஸ் மோட்டார் குறிப்பிடவில்லை

2025 TVS Jupiter 110 Scooter Image Gallery

All new TVS Jupiter 110 2 1
2024 டிவிஎஸ் ஜூபிடர் 110
All new TVS Jupiter 110 3 1
All new TVS Jupiter 110 4 1
2024 tvs jupiter under seat
2024 tvs jupiter fuel filler
2024 tvs jupiter 110 colours
2024 tvs jupiter cluster

Last Updated – 03/03/2025

 

Tags: 110cc ScootersTVSTVS Jupiter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

TVS-X scooter-price

டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்

tvs raider 125 iron man

2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan