Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024ல் டொயோட்டா வெளியிட உள்ள கார்கள் மற்றும் எஸ்யூவி

by MR.Durai
26 December 2023, 10:16 pm
in Car News
0
ShareTweetSend

upcoming Toyota launches 2024

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு புதிய டைசோர், ஃபார்ச்சூனர் ஹைபிரிட், ஹைலக்ஸ் ஹைபிரிட் ஆகியவற்றுடன் டொயோட்டா முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி, 7 இருக்கை ஹைரைடர் மற்றும் கேம்ரி ஹைபிரிட் ஆகியவற்றை வெளியிட உள்ளது.

2024 Toyota Urban Crusier Taisor

மாருதி விற்பனை செய்து வருகின்ற ஃபிரான்க்ஸ் அடிப்படையில் வரவுள்ள அர்பன் க்ரூஸர் டைசோர் காரில் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறலாம்.

இதுதவிர, 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறும்.

2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற அர்பன் க்ரூஸர் டைசோர் விலை ரூ.8 லட்சத்தில் துவங்கலாம்.

toyota taisor

2024 Toyota Fortuner & Hilux Hybrid

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் அறிமுகம் செய்யப்பட்ட 48வி ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற நிலையில் இதே வசதியை ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடலும் பெற உள்ளது. எனவே, 2.8-லிட்டர் டீசல் என்ஜின் DOHC, 16 வால்வு பெற்றது 3,400rpm-ல் 204 hp (150 கிலோவாட்) பவர் மற்றும் 1,600 முதல் 2,800 rpm-ல் 500Nm டார்க் வழங்கலாம்.

புதிய ஃபார்ச்சூனர் 48V மற்றும் ஹைலக்ஸ் 48V என இரு மாடல்களும் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு மத்தியில் வெளியாகலாம்.

toyota hilux hybrid 48v

2024 Toyota Urban SUV concept

மாருதி eVx எஸ்யூவி அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக உள்ள டொயோட்டா அர்பன் எஸ்யூவி எலக்ட்ரிக் கான்செப்ட் ஆனது இந்தியாவில் புதிய அர்பன் எஸ்யூவி கான்செப்ட் சுசூகி நிறுவனத்துடன் பேட்டரி ஆப்ஷனை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதனால்  60kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சுமார் 550கிமீ தொலைவு பயணிக்கும் ரேஞ்சை கொண்டிருக்கும் மற்றும் 48kWh பேட்டரி அதிகபட்சமாக 400கிமீ வரம்பினை வழங்கலாம்.  2WD மற்றும் 4WD என இரு விதமான ஆப்ஷனை பெற வாய்ப்புள்ளது.

2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு துவக்க மாதங்களில் விற்பனைக்கு வரலாம்.

Toyota Urban SUV concept view

2024 Toyota Camry Facelift

சமீபத்தில் வெளியான 2024 டொயோட்டா கேம்ரி செடான் காரில்  2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் இரண்டு மின்சார மோட்டார் பெற்று முன்பக்க வீல் டிரைவ் மாடல் 225hp மற்றும் கேம்ரி AWD ஆனது பின்புற அச்சுக்கு கூடுதல் மோட்டாரைப் பெற்று 232hp பவர் வழங்குகின்றது. இந்த காரில் eCVT கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல உள்ள டொயோட்டா கேம்ரி இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம்.

new toyota camry

7 Seater Toyota Urban Crusier Hyryder

டொயோட்டா மற்றும் மாருதி விற்பனை செய்து வருகின்ற ஹைரைடர் எஸ்யூவி காரில் 7 இருக்கை பெற்ற மாடல் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகலாம்.

1.5-லிட்டர், நான்கு சிலிண்டர், K12C என்ஜினை கொண்டுள்ளது. பெட்ரோல் பயன்முறையில், இன்ஜின் 103hp மற்றும் 136Nm வெளிப்படுத்தும் நிலையில், CNG மாடலில் பவர் 88hp மற்றும் 121.5Nm  டார்க் ஆக குறைந்துள்ளது. பெரும்பாலான சிஎன்ஜி மாடல்களை போல, ஹைரைடர் சிஎன்ஜியும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது, மேலும், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி 26.6 கிமீ ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு வழங்கும் என டொயோட்டா குறிப்பிட்டுள்ளது.

urban cruiser hyryder

Related Motor News

6 ஏர்பேக்குகளுடன் டொயோட்டா டைசர் ரூ.7.89 லட்சம் முதல் அறிமுகம்

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

ரூ.11.34 லட்சத்தில் 2025 டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர் வெளியானது

₹ 37.90 லட்சத்தில் ஹெலக்ஸ் பிளாக் எடிசனை வெளியிட்ட டொயோட்டா

டொயோட்டா டைசோர் லிமிடெட் எடிசன் அறிமுகமானது

நெக்சானை வீழ்த்துமா..? XUV 3XO எஸ்யூவி போட்டியாளர்களுடன் ஒப்பீடு

Tags: Toyota HiluxToyota TaisorToyota Urban Cruiser Hyryder
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

காரன்ஸ் கிளாவிஸ்

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

2025 suzuki gixxer sf 155

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

ரூ.26.78 லட்சத்தில் காம்பஸ் டிராக் எடிசனை வெளியிட்ட ஜீப்

2025 ஃபார்ச்சூனர் லீடர் எடிசனை வெளியிட்ட டொயோட்டா

நிசானின் புதிய எஸ்யூவிக்கு Tekton என பெயர் சூட்டப்பட்டுள்ளது

நவம்பர் 4ல்., ஹூண்டாயின் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்னர் கசிந்தது

2025 மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.7.99 லட்சத்தில் 2025 மஹிந்திரா பொலிரோ அறிமுகமானது

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட்

நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan