Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024ல் வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள்

by MR.Durai
30 December 2023, 8:56 pm
in Bike News
0
ShareTweetSendShare

upcoming electric two wheeler launches in 2024

2024 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளில் முக்கியமாக உறுதி செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஏதெர் 450 அபெக்ஸ், பஜாஜ் சேட்டக் பிரீமியம் 2024, குறைந்த விலை டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ST, ஜீரோ மோட்டார்சைக்கிள், ஏதெர் பேம்லி ஸ்கூட்டர், கைனெடிக் இ-லூனா, ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக், கோகோரோ க்ராஸ்ஓவர், ஆம்பியர் NXG மற்றும் ஓலா M1 ரோட்ஸ்டெர் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கூடுதலாக சுசூகி மற்றும் யமஹா உள்ளிட்ட நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடலாம்.

Ather 450 Apex

ஜனவரி 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய ஏதெர் 450 அபெக்ஸ் விலை ரூ.1.80 லட்சத்துக்குள் வரக்கூடும். டாப் ஸ்பீடு 110-125 கிமீக்குள் அமைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் 0-40 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் எட்டக்கூடும். அபெக்ஸ் மாடலில் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப்+ என நான்கு ரைடிங் மோடுகளை பெற உள்ளது.

ather 450 apex bookings open

Bajaj Chetak Premium 2024

பஜாஜ் ஆட்டோ சேட்டக் பிரீமியம் வேரியண்ட் 3.2kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக 126 KM ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றியளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் டாப் ஸ்பீடு 73km/hr ஆகும். மற்றபடி, பவர், டார்க் விபரங்கள் தற்பொழுது வெளியாகவில்லை. ஜனவரி 2024ல் விற்பனைக்கு ரூ.1.50 லட்சத்துக்குள் வெளியாகலாம்.

2024 bajaj chetak escooter

TVS iQube ST

ரூ.1 லட்சம் விலைக்குள் குறைந்த விலை டிவிஎஸ் ஐக்யூப் வரிசையில் வெளியிடப்படலாம். இதுதவிர ஐக்யூப் ST வேரியண்ட் 4.56Kwh பேட்டரி வழங்கப்பட்டு ஈக்கோ மோடில் 145Km/Charge வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. டாப் ஸ்பீடு 82Km/hr ஆகும். இந்த மாடலிலும் பொதுவாக பவர் 3KW மற்றும் டார்க் 33 Nm ஆகவே பெற உள்ளது.

TVS iQube st Electric Scooter

Ather Family Scooter

குடும்பங்களின் பயன்பாடிற்கு ஏற்ற டிசைன் கொண்ட வகையில் ஏதெர் 450 வரிசையில் உள்ள ஸ்கூட்டர்களின் பேட்டரியை பகிர்ந்து கொள்ள உள்ளது. 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். 3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150 கிமீ தொலைவு பயணிக்கலாம் அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.

upcoming ather-electric-scooter-spotted

Kinetic E-luna

ICE சந்தையில் பிரபலமாக இருந்த லூனா அடிப்படையில் கைனெடிக் இ-லூனா விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. குறைந்த வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் மொபெட் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள இ-லூனா மின்சார மொபட்டின் வேகம் அதிகபட்சமாக 40-50kmph வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டிருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 100 கிமீ வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கலாம். பேட்டரி ஸ்வாப் ஆப்ஷனுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

kinetic e luna moped launch

Honda Activa Electric

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆக்டிவா பெயரில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளது. 2024 ஆம் ஆண்டு பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனைக்கு வரவுள்ள மாடலின் ரேஞ்ச் அனேகமாக 100-150km/charge ஆக இருக்கலாம். இதில் நீக்க இயலாத வகையிலான பேட்டரி அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆக்டிவா இ-ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக விளங்கலாம்.

honda activa e scooter concept sc.e

Gogoro Crossover

இந்தியாவில் கோகோரோ நிறுவனம் வரத்தக ரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்ற மாடல்களை வெளியிட்டுள்ள நிலையில் தனிநபர்களுக்கான கிராஸ்ஓவர் 50 மற்றும் கிராஸ்ஓவர் S ஆகியவற்றை மார்ச் 2024ல் வெளியிட உள்ளது.

கிராஸ்ஓவர் 50 மாடலில் 5.0 kW எலக்ட்ரிக் மோட்டாரும், கிராஸ்ஓவர் S மாடலில் 6.4 kW மற்றும் 7.2 Kw என இருவிதமான பவரை வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

gogro crossover

Ampere NXG

மிகவும் ஸ்டைலிஷான மாடலாக விற்பனைக்கு ஆம்பியர் வெளியிட உள்ள NXG எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 150 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துவதுடன் விற்பனைக்கு ரூ.1.60 லட்சத்தில் எதிர்பார்க்கலாம். 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு வரக்கூடும்.

Ampere NXG

Related Motor News

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள் – மே 2025

ரூ.28,000 வரை ஐக்யூப் விலையை குறைத்த டிவிஎஸ் மோட்டார்

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா

தமிழ்நாட்டில் ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் QC1 எலெக்ட்ரிக் விற்பனைக்கு எப்பொழுது வரும்..!

Tork Electric Scooter

டார்க் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம். இந்த மாடலின் எந்த நுட்ப விபரங்களும் எதவும் வெளியாகவில்லை. அனேகமாக இந்த மாடல் 150 கிமீ ரேஞ்ச் மற்றும் டாப் ஸ்பீடு 80 கிமீ வரை எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

விற்பனைக்கு அனேகமாக 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா S1, ஏதெர் 450 சீரிஸ், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் ரூ.1.50 லட்சத்துக்குள் வரக்கூடும்.

Zero Motorcycles

அமெரிக்காவின் ஜீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் நாட்டின் முன்னணி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் பிரீமியம் பைக்குகள் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

இந்நிறுவனம் ஆஃப்-ரோடு பைக்குகள், மின்சார அட்வென்ச்சர் பைக்குகள், மின்சார ஸ்டீரிட் பைக்குகள், சூப்பர்மோட்டோ மற்றும் டூயல் ஸ்போர்ட் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது. எனவே, முதற்கட்டமாக முதல் ஜீரோ எலக்ட்ரிக் பைக் மாடலை 2024 இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடலாம்.

zero fx dual sport electric bike

Ola M1 Cyber Racer

இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பளரான ஓலா தனது மோட்டார்சைக்கிள் M1 வரிசையில் ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற சைபர்ரேசர் பைக்கினை 2024 ஆம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. இதுதவிர, க்ரூஸர் ரக மாடலுக்கு M1 க்ரூஸர், M1 அட்வென்ச்சர் ஆகியவற்றை 2025 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம்.

Ola roadster concept details

Tags: Ather 450 ApexHonda Activa ElectricOla M1 Cyber RacerTVS iQube
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

இந்தியாவில் MY2025 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல் வெளியானது

அடுத்த செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan