Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024 ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவுள்ள இரு சக்கர வாகனங்கள்

by MR.Durai
1 January 2024, 9:16 am
in Bike News
0
ShareTweetSendShare

upcoming bike launches jan 2024

2024 ஆம் ஆண்டின் ஜனவரி துவக்க மாதத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உட்பட சில முக்கிய பைக் மாடல்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650, ஹீரோ R , ஏதெர் 450 அபெக்ஸ், பஜாஜ் சேட்டக் ஆகும்.

பெரும்பாலும் கொடுக்கப்பட்டுள்ள மாடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளவை மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது.

Ather 450 Apex

வரும் ஜனவரி 6 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஏதெர் 450 அபெக்ஸ் ஆனது விற்பனையில் உள்ள 450 சீரிஸ் போலவே அமைந்திருந்தாலும் மிக வேகமான ஸ்கூட்டர் மாடலாக இருக்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டாப் ஸ்பீடு 110-125 கிமீ வெளிப்படுத்துவதுடன் மேலும் 0-40 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் எட்டக்கூடும். அபெக்ஸ் மாடலில் பக்கவாட்டு பேனல் தெளிவாக காட்சியளிக்கும் வகையில் பெற்று ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப்+ என நான்கு ரைடிங் மோடுகளில் ரேப்+ புதிதாக பெற உள்ளது.

மற்றபடி, பேட்டரி ஆப்ஷன் ஆனது ஏற்கனவே உள்ள 450X ஸ்கூட்டரின் 3.7 kWh பேட்டரி பொருத்தப்பட்டு நிகழ்நேரத்தில் ரேஞ்ச் 110 கிமீ வரை வழங்கலாம். விற்பனைக்கு ரூ.1.70 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மின்சார ஸ்கூட்டருக்கு முன்பதிவு நடைபெற்று வருவதால் டெலிவரி மார்ச் 2024 முதல் துவங்க உள்ளது.

ather 450 apex new teased

2024 Bajaj Chetak

2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அர்பேன் விலை வெளியான நிலையில், சேட்டக் பிரீமியம் வேரியண்டின் விலையை பிரேத்தியேகமாக நாம் வெளியிட்டிருக்கின்றோம். ஆனால் அதிகாரப்பூர்வ விற்பனை அறிவிப்பு மற்றும் நுட்பவிபரங்கள் ஜனவரி 9 ஆம் தேதி கிடைக்கலாம்.

புதிய டாப் வேரியண்டில் 3.2kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக 126 KM ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றியளிக்கப்பட்டுள்ளது. புதிய மாடலின் அதிகபட்ச வேகம் 73km/hr ஆகும்.  2.88kWh பேட்டரி பெற்ற சேட்டக் அர்பேன் 2024 மாடல் ரேஞ்ச் 113 கிமீ வரை வழங்குகின்றது. இதில் டெக்பேக் பெற்ற வேரியண்ட் வேகம் மணிக்கு 73 கிமீ கொண்டுள்ளது. 2024 பஜாஜ் சேட்டக் புதிய 5 அங்குல TFT டிஸ்பிளே கொண்டிருப்பதுடன் டெக்பேக் மூலம் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற உள்ளது.

2024 பஜாஜ் சேட்டக் விலை ரூ.1.15 லட்சம் முதல் ரூ.1.35 லட்சம் வரை கிடைக்கின்றது. டெக்பேக் பெற்ற வேரியண்ட் விலை ரூ.1.43 லட்சம் ஆக அமையலாம்.

2024 bajaj chetak escooter

Royal Enfield Shotgun 650

கஸ்டமைஸ் செய்யப்படுகின்ற பைக்குகளுக்கு இணையாக ராயல் என்ஃபீல்டு உருவாக்கியுள்ள ஷாட்கன் 650 பைக் முன்பாக சந்தையில் உள்ள 650 ட்வீன் என்ஜினை பகிர்ந்து கொண்டு சூப்பர் மீட்டியோர் 650 அடிப்படையாக கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டின் ஷாட்கன் 650 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 22 கிமீ வரை கிடைக்கலாம்.

ஷாட்கன் 650 பைக்கின் விலை ரூ.3.50 முதல் ரூ. 3.75 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்பு உள்ளது. மோட்டோவெர்ஸ் பதிப்பை விட ரூ.50,000 வரை விலை குறைவாக எதிர்பார்க்கப்படுகின்றது.

re shotgun 650 launch

Hero Hurikan 440

ஜனவரி 22 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய பைக் மாடல் ஒன்றை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பைக் மாடலின் பெயரின் முதல் எழுத்து R என துவங்கலாம் என கூறப்படுகின்றது. அனேகமாக பிரீமியம் சந்தையில் வரகூடியதாக இருக்கலாம். மற்றபடி, ஹூராகேன் பைக் பற்றி தகவல்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

ஹீரோ மோட்டோகார்ப் 150சிசி-450சிசி வரையில் வெளியிட உள்ளதால் எக்ஸ்ட்ரீம் 210R பைக் ஆகவும் அல்லது 440 சிசி என்ஜின் பிரிவா என உறுதி ஆகவில்லை. ஹார்லி 440சிசி  மாடல் ஹூராகேன் 440R பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 15-16 மீடியா டிரைவ் நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது.

hero 2.5r xtunt

Related Motor News

குறைந்த விலையில் 127கிமீ ரேஞ்ச் வழங்கும் பஜாஜ் சேட்டக் 3001 வெளியானது

பஜாஜின் சேட்டக் 3503 ரூ.1.10 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது

ரூ.4.25 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ஐகான் எடிசன் வெளியானது.!

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

பஜாஜின் சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்.!

டிசம்பர் 20ல் பஜாஜ் சேட்டக் 2025 விற்பனைக்கு அறிமுகமாகிறது

Tags: Ather 450 ApexBajaj ChetakHero Hurikan 440Royal Enfield ShotGun 650
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

அடுத்த செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan