Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹69,990 விலையில் கைனெட்டிக் இ-லூனா விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
7 February 2024, 6:17 pm
in Auto News
0
ShareTweetSend

kinetic e-luna

கைனெட்டிக் கீரின் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள இ-லூனா (Kinetic E-Luna) எலக்ட்ரிக் மொபெட்டினை அறிமுக விலை ரூ.69,990 துவங்குகின்ற மாடலின் பயணிக்கும் வரம்பு 110 கிமீ ஆக உள்ள நிலையில், 10 பைசா செலவில் ஒரு கிமீ பயணிக்கிலாம் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

1970களில் வெளியிடப்பட்ட லூனா தோற்ற வடிவமைப்பு முந்தைய ICE மாடலை போலவே அமைந்திருந்தாலும் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் நவீனத்துவத்தை கைனெட்டிக் நிறுவனம் எலக்ட்ரிக் லூனா  மாடலுக்கு கொண்டு வந்துள்ளது.

Kinetic E-Luna Electric Moped

கைனெட்டிக் நிறுவனம் வெளியிட்டுள்ள பேட்டரி எலக்ட்ரிக் இ-லூனா மொபெட்டில் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு என 5 நிறங்களை கொண்டுள்ள மாடலில் 2.50 -16 அங்குல ஸ்போக்டூ வீல் பெற்று லக்கேஜ் எடுத்துச் செல்ல ஏதுவாக  பின்புற இருக்கை நீக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மேலும் பைக்கின் எடை வெறும் 96 கிலோ எடை கொண்டது. இருக்கை உயரம் வெறும் 760 மிமீ ஆகவும், வீல்பேஸ் 1,335 மிமீ மற்றும் 170 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் உள்ளது.

 இ-லூனா எலக்ட்ரிக் மாடலில் இடம்பெற்றுள்ள 2kWh Li Ion NMC பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 110km ரேஞ்ச் கிடைக்கும் என இந்நிறுனம் குறிப்பிட்டுள்ளது. கைனெட்டிக் E-Luna மாடலின் BLDC மோட்டார் பவர் 1.2kW மற்றும் அதிகபட்சமாக 50kmph வேகத்தில் செல்லும் திறனை பெற்றுள்ளது.

220V, 15A, 3 பின் போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்படுகின்ற நிலையில் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜிங் செய்ய 4 மணிநேரம் என்று கூறப்பட்டுள்ளது. இ-லூனாவுக்கு 40,000 கிமீ அல்லது 36 மாதங்கள் வாரண்டி வழங்கப்படுகின்றது.

இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் யூஎஸ்பி சார்ஜர் போர்ட், சைடு ஸ்டாண்டு சென்சார், டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை கொண்டுள்ளது.

Kinetic E-Luna prices list

  • E-Luna X1 – ₹ 69,990
  • E-Luna X2 – ₹ 74,990

கருப்பு கலர் மட்டுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலை, மற்ற 4 நிறங்களும் ரூ.1,500 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் எனவே கைனெட்டிக்கின் இ லூனா விலை ரூ.71,490 முதல் ரூ.76,490 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகின்றது. முன்னணி இ-காமர்ஸ் வலைதளங்களின் மூலமாகவும் இந்த மாடலை வாங்கலாம்.

(ex-showroom)

Related Motor News

ஹீரோ விடா V2 பிளஸ், V2 புரோ, V2 லைட் ஸ்கூட்டர்களின் பேட்டரி, ரேஞ்ச் விபரம்.!

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஓலா S1X 2Kwh எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.49,999 மட்டுமே..!

பிஎம் இ-டிரைவ் மூலம் எலெக்ட்ரிக் டூ வீலர் விலை அதிகரிக்குமா..!

கார்களுக்கு பிஎம் இ-ட்ரைவ் (PM E-DRIVE) மானியம் இல்லை..!

பஜாஜ் சேத்தக் ப்ளூ 3202 ஸ்கூட்டரின் சிறப்புகள்

Tags: Electric ScooterKinetic E-luna
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

அடுத்த செய்திகள்

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan