Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Car News

புதிய நிறத்துடன் மஹிந்திரா ஸ்கார்பியோ-N அறிமுகமானது

By
ராஜா
Byராஜா
நான் ராஜா (BHP Raja) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக புதிய மின்வாகன செய்திகள் மற்றும் விமர்சனம் பற்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.
Follow:
Last updated: 22,February 2024
Share
1 Min Read
SHARE

mahindra scorpio n

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 2024 ஆண்டிற்கான ஸ்கார்பியோ-N எஸ்யூவி மாடலில் Z8 செலக்ட் என்ற வேரியண்ட் ரூ.16.99 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன் கூடுதலாக மிட்நைட் பிளாக் என்ற நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது.

Z6 + வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக Z8 Select வேரியண்டில்  R17 டயமண்ட் கட் அலாய் வீல், காபி பிளாக் லெதேரெட் இன்டிரியர், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி புரொஜெக்டர் ஃபோக்லாம்ப்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல் ஆகியவற்றுடன்  அலெக்ஸா பில்ட்-இன் உடன் 60 க்கு மேற்பட்ட அட்ரெனாக்ஸ் கனெக்ட்டிவிட்டி அம்சம்,  டிரைவ் மோடு ஜிப், ஜாப், ஜூம் ஆகியவற்றையும் இந்த வேரியண்ட் கொண்டுள்ளது.  அடிப்படையான நான்கு டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ், ஈஎஸ்பி, ஆறு ஏர்பேக்குகளை கொண்டுள்ளது.

7 இருக்கை பெற்ற மஹிந்திரா Scorpio-N Z8 Select வேரியண்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கின்றது. 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் 197 bhp மற்றும் 380 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. அடுத்து, 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 173 bhp மற்றும் 400 Nm டார்க்கை உருவாக்குகிறது. இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டருடன் கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்கார்ப்பியோ-N Z8 Select வேரியண்டுகள் மார்ச் 1 முதல் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சமீபத்தில் 1,00,000 உற்பத்தி இலக்கை கடந்த ஸ்கார்ப்பியோ-என் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த மாடலும் ஸ்கார்ப்பியோ கிளாசிக் என இரண்டும் ஜனவரி 2024 முடிவில் சுமார் 1,00,000க்கு மேற்பட்ட புக்கிங் டெலிவரி வழங்கப்படாமல் உள்ளது.

மஹிந்திரா குவோன்டு கார் வாங்கலாமா
2024 மஹிந்திரா XUV300 எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன ?
ஜனவரி 23.., எம்ஜி ZS EV மின்சார காரின் விலை வெளியீடு
மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் விற்பனைக்கு வந்தது
ஆகஸ்ட் 15.., மஹிந்திரா தார் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமாகிறதா ?
TAGGED:MahindraMahindra Scorpio-N
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
hero xoom 125 on road price
Hero Motocorp
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved