Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹூண்டாய் கிரெட்டா N-line பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

by நிவின் கார்த்தி
23 February 2024, 9:48 am
in Car News
0
ShareTweetSend

 Hyundai Creta N-line patent

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி மாடலின் அடிப்படையில் பெர்ஃபாமென்ஸ் ரக கிரெட்டா N-line விற்பனைக்கு மார்ச் மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.50,000-ரூ.80,000 வரை விலை கூடுதலாக ரூ.21 லட்சத்துக்குள் துவங்கலாம்.

சந்தையில் 10,00,000க்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள கிரெட்டா இந்தியாவின் முதன்மையான நடுத்தர எஸ்யூவி மாடலாக விளங்கி வருகின்றது. சமீபத்தில் வெளியான நியூ கிரெட்டா முன்பதிவு எண்ணிக்கை 60,000 கடந்துள்ளதை தொடர்ந்து புதியதாக வரவுள்ள கிரெட்டா என்-லைன் மாடலின் விளம்பரப் படப்பிடிப்பு படங்கள் சில வாரங்களுக்கு முன்பாக வெளியானது

கிரெட்டா என்-லைன் பற்றி எதிர்பார்ப்புகள் என்ன:

  • டாப் கிரெட்டா வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு 253 Nm டார்க் மற்றும் 160 hp பவரை வழங்குவதுடன் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற உள்ளது.
  • ப்ளூ மற்றும் கிரே நிறத்திலான கார்பன் ஸ்டீல் என இரு நிறங்கள் பெற உள்ளது.
  • முற்றிலும் மாறுபட்ட கிரில் மற்றும் பம்பரினை முன்புறத்ததில் கொண்டுள்ளது.
  • பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் புதிய N பேட்ஜ் பெற்ற 18 அங்குல அலாய் வீல் உள்ளது.
  • இன்டிரியரின் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் கருமை நிறத்துக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • கூடுதலாக இருக்கைகளின் தையல் நூல், கியர் செலக்டர், கதவு இன்ஷர்ட்டுகள் என பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்தை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
  • பின்புற பம்பர் அமைப்பு புதுப்பிக்கப்பட்ட N-line பேட்ஜ் ஆனது பெறக்கூடும்.

அடுத்த சில நாட்களுக்குள் முன்பதிவு துவங்கப்பட உள்ள கிரெட்டா என்-லைன் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Related Motor News

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய்

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

Tags: HyundaiHyundai CretaHyundai Creta N-line
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan