Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

5-டோர் தார் அர்மாடவின் அறிமுகத்தை உறுதி செய்த மஹிந்திரா

by நிவின் கார்த்தி
27 February 2024, 6:32 am
in Car News
0
ShareTweetSend

mahindra 5-door thar launch soon

மஹிந்திராவின் தார் எஸ்யூவி மாடலில் கூடுதலாக 5-டோர் பெற்ற தார் அர்மடா அறிமுகம் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ ராஜேஷ் ஜெஜூரிகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து நாடு முழுவதும் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற தார் எஸ்யூவி 5 கதவுகளை பெற்ற மாடல் மீதான எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய விபரங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

5 டோர் தார் எஸ்யூவி பற்றி சில முக்கிய விவரங்கள்

  • 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் mStallion என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் mHawk என்ஜின் என இருவிதமான ஆப்ஷனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.
  •  5-டோர் மஹிந்திரா Thar எஸ்யூவி இண்டிரியரில் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் Adrenox கனெக்ட்டிவ் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
  •  4X4 ஆல் வீல் டிரைவ் உடன் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும்.
  • தோற்ற அமைப்பில் மாறுபட்ட கிரில் பெற்ற வட்ட வடிவ எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் உடன் இணைந்த பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் உள்ளன.
  • டேஸ்கேம், சன்ரூஃப், பின்புற இருக்கைகளுக்கு ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் பெற உள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள 3 கதவுகளை பெற்ற தார் எஸ்யூவி மாடலுக்கு அமோகமான வரவேற்பு உள்ளதால் முன்பதிவு எண்ணிக்கை 71,000க்கு மேல் உள்ளதால் டெலிவரி தொடர்ந்து காலதாமதமாகி வருகின்றது. தற்பொழுது காத்திருப்பு காலம் 4×2 டீசல் மாடல்களுக்கு 6 மாதங்கள் வரை உள்ளது. குறைவான காத்திருப்பு காலம் 4×4 மாடலுக்கு 2-3 மாதங்களாகவும் உள்ளது.

புதிதாக வரவுள்ள 5-டோர் மஹிந்திராவின் தார் எஸ்யூவிக்கு பிரத்தியேகமாக அசெம்பிளி லைனில் தயாரிக்கப்பட உள்ளது.

Related Motor News

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திராவின் Vision T கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

மஹிந்திரா Vision SXT பிக்கப் கான்செப்ட் அறிமுகம்

மஹிந்திரா Vision X எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

Tags: MahindraMahindra TharMahindra Thar Armada
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Maruti Suzuki suv teased victoris

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

kwid cng

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா

2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!

ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan