Skip to content

இந்தியா வரவிருக்கும் ஸ்கோடா சூப்பர்ப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

Skoda Superb

இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஸ்கோடா ஆட்டோவின் சூப்பர்ப் செடான் ரக மாடல் முழுதாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கிடைக்க உள்ளது.

சூப்பர்ப் காரின் ஆடம்பரமான வசதிகளை பெற்ற டாப் L&K வேரியண்டில் 2.0 லிட்டர் பொருத்தப்பட்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 188 BHP பவர் மற்றும் 320 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.8 விணாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது.

குறிப்பாக  Laurin & Klement வேரியண்டில் இடம்பெற்றுள்ள மற்ற வசதிகளில் குறிப்பாக பின்வருபவை கவனிக்க வேண்டிய அம்சங்களாகும்.

  • ADAS பாதுகாப்பு தொகுப்பில் அதிகபட்சமாக மணிக்கு 210 கிமீ வரை செயல்படும் அடாப்ட்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்
  • பார்க்கிங் உதவிக்கு 360 டிகிரி கோணத்தில் காட்சிகளை பெற உதவும் கேமரா
  • 9 ஏர்பேக்குகள், அவரசகால பிரேக்கிங் அமைப்பு, டைனமிக் சேஸ் கண்ட்ரோல், ஏக்டிவ் டயர் பிரஷர் மானிட்டர் மற்றும் எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக் பெற்றுள்ளது.
  • அடாப்ட்டிவ் ஆட்டோ எல்இடி ஹெட்லைட், எல்இடி பனி விளக்குகள் மற்றும் எல்இடி டையில் லைட் பெற்றுள்ளது.
  • மற்ற வசதிகளில் வயர்லெஸ் சார்ஜிங், டிஜிட்டல் கிளஸ்ட்டர்,11 ஸ்பீக்கர்களுடன் Canton சவுண்ட் சிஸ்டம் மற்றும் பல்வேறு வசதிகள் பெற உள்ளது.

Skoda Superb car

இந்தியாவில் விற்பனைக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக 100 யூனிட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்திய சந்தையில் CBU ( Completely Built-Up) முறையில் கொண்டு வருவதால் ஸ்கோடா சூப்பர்ப் விலை ரூ.55 லட்சத்தில் அமையலாம். இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா கேம்ரிக்கு கடும் சவாலினை வழங்க உள்ளது.