Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா XUV 3XO சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

by MR.Durai
21 February 2025, 12:58 pm
in Car News
1
ShareTweetSend

Mahindra XUV 3XO suv

முந்தைய XUV 300 காரின் புதுப்பிக்கப்பட்ட புதிய மஹிந்திரா XUV 3XO எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் முதல் துவங்கி ரூ.15.56 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது. புதிய காரின் என்ஜின், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் சந்தையில் உள்ள போட்டியாளர்களை விட மிக குறைவான விலையில் துவங்குவதுடன் ரெனோ கிகர் மற்றும் நிசான் மேக்னைட் மாடல்களுக்கு எதிராகவும், மற்ற எஸ்யூவிகளான டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், மாருதி பிரெஸ்ஸா, மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டைசோர் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Mahindra XUV 3XO on Road price list

மஹிந்திரா XUV3XO எஸ்யூவி காரின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ. 9.78 லட்சம் முதல் ரூ.19.64 லட்சம் வரை கிடைக்கின்றது.

Mahindra XUV 3XO Variant ex-showroom Prices on-road Prices
1.2 l TCMPFi MT – MX1 ₹ 7,98,999 ₹ 9,78,324
1.2 l TCMPFi MT – MX2 Pro ₹ 9,38,999 ₹ 11,42,378
1.2 l TCMPFi AT – MX2 Pro ₹ 10,38,999 ₹ 13,12,978
1.2 l TCMPFi MT – MX3 ₹ 9,74,000 ₹ 11,85,945
1.2 l TCMPFi AT – MX3 ₹ 11,39,000 ₹ 14,48,641
1.2 l TCMPFi MT – MX3 Pro ₹ 9,99,000 ₹ 11,41,952
1.2 l TCMPFi AT – MX3 Pro ₹ 11,68,999 ₹ 14,86,021
1.2 l TCMPFi MT – AX5 ₹ 11,18,999 ₹ 14,23,626
1.2 l TCMPFi AT – AX5 ₹ 11,60,790 ₹ 14,96,871
1.2 l TGDi MT – AX5 L ₹ 12,43,999 ₹ 15,76,098
1.2 l TGDi AT – AX5 L ₹ 13,93,999 ₹ 17,60,642
1.2 l TGDi MT – AX7 ₹ 12,56,499 ₹ 15,93,876
1.2 l TGDi AT – AX7 ₹ 13,99,000 ₹ 17,65,324
1.2 l TGDi MT – AX7 L ₹ 13,99,000 ₹ 17,65,320
1.2 l TGDi AT – AX7 L ₹ 15,56,499 ₹ 19,63,652
1.5 l CRDe MT – MX2 ₹ 9,98,999 ₹ 11,95,542
1.5 l CRDe MT – MX2 Pro ₹ 10,48,999 ₹ 13,23,543
1.5 l CRDe MT – MX3 ₹ 10,98,999 ₹ 13,78,652
1.5 l CRDe MT –MX3 Pro ₹ 11,39,000 ₹ 14,28,671
1.5 l CRDe AS+ –MX3 ₹ 11,69,999 ₹ 14,82,071
1.5 l CRDe MT – AX5 ₹ 12,18,999 ₹ 15,27,765
1.5 l CRDe AS+ – AX5 ₹ 12,98,999 ₹ 16,25,910
1.5 l CRDe MT – AX7 ₹ 13,68,999 ₹ 17,11,675
1.5 l CRDe AS+ – AX7 ₹ 14,49,000 ₹ 18,11,543
1.5 l CRDe MT – AX7 L ₹ 14,99,000 ₹ 18,74,876

(all price on road Tamilnadu)

கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ டிசைன்

மஹிந்திராவின் பிரீமியம் XUV700 எஸ்யூவி டிசைனில் இருந்து பெறப்பட்ட அடிப்படையான அம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள XUV 3XO  காரில் உள்ள எல்இடி ரன்னிங் விளக்குடன் மேற்பகுதியில் எல்இடி புராஜெக்டர் விளக்கு மற்றும் கீழ் பகுதியில் எல்இடி பனி விளக்குகள் என ஒருங்கே பெற்றுள்ளது.

பளபளப்பான கருப்பு நிறத்துக்கு மத்தியில் மஹிந்திராவின் லோகோ மற்றும் பாரம்பரிய கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டு கீழே பம்பர் கிரில் மற்றும் பதிவெண் பிளேட் அமைந்துள்ளது.

பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் (குறைந்த விலை வேரியண்டுகளில் 16 அங்குல ஸ்டீல் வீல்) பெறுகின்ற இந்த காரில் மிக நேர்த்தியான கோடுகள் இடம்பெற்றுள்ளது. மிக அகலமான பனரோமிக் சன்ரூஃப் பெற்றுள்ளது. பின்புறத்தில் எல்இடி பார் லைட்டுடன் டெயில் லைட் பகுதியில் பளபளப்பான பாகங்கள் கொடுக்கப்பட்டு சற்று மாறுபட்ட பம்பரினை கொண்டதாக அமைந்துள்ளது.

xuv 3xo interior

XUV 3XO இன்டிரியர்

விற்பனையில் கிடைக்கின்ற XUV400 EV காரில் இருந்து பெறப்பட்டுள்ள டேஸ்போர்டில் சிறிய மாற்றங்களை மட்டும் கொண்டு மிதிக்கும் வகையிலான 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டுள்ளது. டாப் வேரியண்டுகளில் Adrenox connect வசதிகள் மூலம் பல்வேறு கனெக்ட்டிவ் அம்சங்களை பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட கூடுதலாக பூட் ஸ்பேஸ் பெற்று தற்பொழுது 364 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அமைந்திருந்தாலும், போதுமான அளவு பூட்ஸ்பேஸ் அதிகரிக்கவில்லை.

பாதுகாப்பு அம்சங்கள்

அடிப்படையான பாதுகாப்பு வசதிகளில் GNCAP மற்றும் BNCAP கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்ட  உறுதியான கட்டுமானம் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், அனைத்து இருக்கைகளுக்கும் மூன்று-புள்ளி இருக்கை பெல்ட்கள் மற்றும் Isofix குழந்தை இருக்கை அமைப்பு பெற்றுள்ளது.

டாப் வேரியண்டுகளில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களில் முதன்முறையாக இந்த பிரிவில் இரண்டாம் கட்ட ADAS நுட்பத்தை பெற்றுள்ளது. கேமரா மற்றும் ரேடார் அடிப்படையிலான மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்பு அல்லது ADAS எனப்படுவதன் மூலம் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (மிதிவண்டி, பாதசாரிகள், மற்றும் வாகனங்கள்), ஹை பீம் அசிஸ்ட் மற்றும் போக்குவரத்து குறியீடுகளை அறிந்து செயல்படும் அம்சம், மற்றும் ஸ்மார்ட் பைலட் வசதியும் உள்ளது.

xuv 3xo side view

XUV 3XO என்ஜின் விபரம்

இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் பெற்று மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடன் MX1, MX2, MX2 PRO, MX3, MX3 PRO, AX5, AX5 L, AX7 மற்றும் AX7 L என 9 வகைகளில் மொத்தமாக 18 விதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் TCMPFi அதிகபட்சமாக 111 hp , 200Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது. இந்த மாடலின் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 18.89kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மைலேஜ் 17.96kmpl ஆகும்.

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் TGDi என்ஜின் அதிகபட்சமாக 131 hp , 230Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது. இந்த மாடலின் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 18.2kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மைலேஜ் 20.1kmpl ஆகும்.

1.5 லிட்டர் டர்போ டீசல் CRDe என்ஜின் அதிகபட்சமாக 111 hp , 200Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெறுகின்றது. இந்த மாடலின் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 20.6kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் மைலேஜ் 21.2kmpl ஆகும்.

mahindra xuv3xo rear

Related Motor News

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

2025 கியா காரன்ஸ் காரின் ஆன் ரோடு விலை மற்றும் சிறப்புகள்

2025 மாருதி சுசூகி வேகன் ஆர் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை விவரம்.!

டாடா டியாகோ இவி முக்கிய சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை பட்டியல்.!

2025 மாருதி சுசூகி ஆல்டோ K10 காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை விவரம்.!

2025 மாருதி சுசூகி செலிரியோ ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.!

last price updated – 21/02/2025

Tags: Car on-road priceMahindra XUV 3XOMahindra XUV300
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

அடுத்த செய்திகள்

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan