மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 புரோ எலக்ட்ரிக் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ரூ.15.49 லட்சம் முதல் ரூ.17.49 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட புதப்பிக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலான அம்சங்களை பெற்றுள்ளது.
XUV400 புரோ காரில் தற்பொழுது 34.5 kWh பேட்டரி பெற்ற ஆரம்பநிலையிலும் பல்வேறு கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர டாப் வேரியண்டில் 39.4 kWh பேட்டரி உள்ளது.
2024 Mahindra XUV400 Pro
புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் கருப்பு மற்றும் பீஜ் நிறத்தை பெற்ற டாஷ்போர்டு முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இரட்டை-மண்டல ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோலுக்கு புதிய பட்டன்கள் மற்றும் கைப்பிடிகளுக்கு இடமளிக்கும் வகையில் மாற்றியமைக்கபட்டுள்ளது.
காரின் சென்டர் கன்சோலின் மேற்புறத்தில் புதிதாக உள்ள 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 50 க்கும் மேற்பட்ட AdrenoX இணைக்கப்பட்ட கார் என பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் புதிய 10.25-இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே ஆனது பல்வேறு தனிபயனாக்கும் வகையிலான வசதியை பெற்றுள்ளது. மூன்று-ஸ்போக் பெற்ற பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் பெற்றுள்ளது.
148 hp பவர் மற்றும் 310 Nm டார்க் உடன் 375 கிமீ என சான்றிதழ் வழங்கப்பட்டு 34 kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் உண்மையான ரேஞ்ச் 250 கிமீ ரேஞ்ச், கூடுதலாக வரவுள்ள 456 கிமீ என சான்றிதழ் வழங்கப்பட்டு 39.4 kwh பேட்டரி மூலம் சிங்கிள் சார்ஜ் மூலம் 290 கிமீ வெளிப்படுத்துகின்றது. டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் மட்டும் பெறுகின்றது. 7.2kW சார்ஜரை பயன்படுத்தினால் 0-100% சார்ஜ் செய்ய 6 மணிநேரம் எடுக்கும்.
- XUV400 EC Pro 34.5kwh (3.3kwh charger) ₹ 15.49 லட்சம்
- XUV400 EC Pro 34.5kwh (7.2kwh charger) ₹ 16.74 லட்சம்
- XUV400 EC Pro 39.5kwh (7.2kwh charger) ₹ 17.49 லட்சம்
அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக சலுகை விலை மே 31, 2024 வரை மட்டுமே பொருந்தும். XUV400 Pro எஸ்யூவி காருக்கு முன்பதிவுகள் ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு துவங்கும் நிலையில் கட்டணமாக ரூ.21,000 வசூலிக்கப்பட உள்ளது.