Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி பெறுமா..? ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

by ராஜா
1 June 2024, 9:31 am
in Bike Reviews, Bike News
0
ShareTweetSend

ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டாவது மாடலாக வெளியிடப்பட்டுள்ள ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது குடும்பம் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

ஏதெர் முதல்முறையாக வெளியிடப்பட்ட 450 சீரியஸ் ஆனது நிறுவனத்திற்கு மிக சிறப்பான பெயரை பெற்று மேலும் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தும் மாடல் என்ற பெயரை பெற்று இருக்கின்றது. குறிப்பாக 450X மாடல் ஆனது சிறப்பான ரைடிங் அனுபவம் மற்றும் மிக விரைவான ஆசிலரேஷன், ஸ்போர்ட்டிவ் சவாரிக்கு ஏற்றதாகவும், பேட்டரியின் திறன் மிகச் சிறப்பாக இருந்தது. இது போன்ற காரணங்களால் 450X வெற்றி பெற மிக முக்கிய காரணமாக இருந்தது.

ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர் இருக்கை

Ather Rizta escooter

புதிதாக வந்துள்ள ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின்  மாற்றியமைக்கப்பட்ட சேஸ், சஸ்பென்ஷன் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட அடிப்படையான அம்சங்கள் 450 பைக்கில் இருந்து தான் பெறப்பட்டிருக்கின்றது. அதனால் நம்முடைய முக்கியமான கவனமான பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான எந்த ஒரு குறைபாடுகளும் இருக்காது.

இது மட்டுமல்லாமல் சில முக்கிய வசதிகளான ஆட்டோ ஹோல்ட், ரிவர்ஸ் மோடு, ஃபால் சேஃப், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் மற்றும் ஆட்டோ இண்டிகேட்டர் கட்-ஆஃப்.மற்றும் மேஜிக் ட்விஸ்ட் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

ரிஸ்டாவிற்கும் 450 சீரியஸ் மாடல்களுக்கு மிக முக்கியமான வித்தியாசமே, 450X, 450S மிக சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஸ்போர்டிவ் தன்மையை கொண்டிருக்கின்ற நிலையில் புதிய ரிஸ்ட்டா மாடலானது மிகக் குறைவான பெர்ஃபாமென்ஸ் மற்றும் சிறப்பான ரேஞ்ச் அதிகப்படியான பயன்பாடுகளை வழங்கும் வகையிலான இடவசதியை கொண்டிருக்கின்றது.

ஏதெர் ரிஸ்டா கிளஸ்ட்டர்

ரிஸ்டாவில் விலை குறைப்பிற்காக  டச் ஸ்கிரீன் சார்ந்த அம்சம் இல்லாமல் 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை இணைக்கும் பொழுது ஏதெர் ஆப்ஸ் மற்றும்  மியூசிக் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தவும், அழைப்புகளை ஏற்க/நிராகரிக்க நேவிகேஷன், அறிவிப்புகள் பெறவும் மற்றும் உங்களின் 5 சமீபத்திய வாட்ஸ்ஆப் செய்திகளைச் பார்க்கவும் அனுமதிக்கிறது. மேலும் புரோ பேக் வசதிகள் மூலம் கூடுதலான கட்டணத்தில் வசதிகள் வழங்கப்படுகின்றது.

குறிப்பாக, தற்பொழுது இந்திய சந்தையில் கிடைக்கின்ற எந்தவொரு ஸ்கூட்டரிலும் இல்லாத வகையில் மிக அகலமான மற்றும் நீளமான இருக்கை மூலம் இருவர் மிகவும் தாராளமாக அமர்ந்து கொள்ள ஏதுவாக உள்ளது.

இடவசதியை வழங்குவதுற்கு ஏதெர் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கைக்கு அடிப்பகுதியில் இரு விதமான பூட்டை பிரித்து முன்புறத்தில் சிறிய இடத்தை கொடுத்து ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சிறிய பொருட்களை வைப்பதற்கும், அடுத்து மிகவும் அகலமான இடவசதி என 34 லிட்டர் கொள்ளளவு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஃபுளோர் போர்டின் பக்கம் அப்ரானில் 22 லிட்டர் Frunk உள்ளது.

ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர் பூட்

ரைடிங் அனுபவம்

ஏதெரின் 450X, 450S என இரு மாடலின் பெர்ஃபாமென்ஸை விட சற்று குறைவாக வெளிப்படுத்தும் நிலையில் சிறப்பான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைந்துருக்கின்றது. மணிக்கு அதிகபட்ச வேகம் 80 கிமீ ஆக உள்ள நிலையில் ஸ்மார்ட்ஈக்கோ மற்றும் ஜிப் மோடு என இரண்டு மோடுகளை கொண்டுள்ளது.

மிகவும் போக்குவரத்து மிக்க சாலைகளிலும் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் 780மிமீ இருக்கை உயரம் பெற்று 119 கிலோ எடை கொண்டுள்ள ரிஸ்டாவினை இருபாலரும் இலகுவாக கையாளும் வகையில் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு கடும் சவாலினை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்த கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று கூடுதலாக ஸ்கிட் கண்ட்ரோல் என இந்நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளதால் இ-ஸ்கூட்டர் நிலை தடுமாறுவனை தடுக்கும் வகையில் உள்ளது.

4.3kW பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் 22 Nm டார்க் வழங்குவதுடன் இரு விதமான  2.9kwh, மற்றும் 3.7kwh பேட்டரி ஆப்ஷனை பெறுகின்றது. இதில் 2.9kwh முதற்கட்டமாக டெலிவரி துவங்கப்பட உள்ளதால் 123 கிமீ ரேஞ்ச் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 90 கிமீ முதல் 100 கிமீ வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டர்

ரிஸ்டா நிறைகள்

  • இருக்கைக்கு அடிப்பகுதி மற்றும் முன்புறத்தில் Frunk என தாராளமான இடவசதி
  • மிக நீளமான மற்றும் அகலமான இருக்கை மூலம் இரு வயதுவந்தோர் இடவசதியுடன் அமரலாம்.
  • மேஜிக் ட்வீஸ்ட், ஸ்கிட் கண்ட்ரோல் உட்பட பல்வேறு நவீன தலைமுறை சார்ந்த வசதிகள்
  • குடும்பத்திற்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பணத்திற்கு ஏற்ற மதிப்பு வழங்குகின்றது
  • சிறப்பான அன்றாட பயணங்களுக்கு Rizta Z 2.9 Kwh மாடல் 90 கிமீ – 100 கிமீ ரேஞ்ச் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ரிஸ்டா இ-ஸ்கூட்டர் குறைகள்

  • டாப் வேரியண்டில் கூட தொடுதிரை கிளஸ்ட்டர் இல்லை.
  • ஏதெரின் 450 இ-ஸ்கூட்டரின் பெர்ஃபாமென்ஸை எதிர்பார்க்காதீர்கள்
  • 6 அடி உயரம் உள்ளவர்களுக்கு வளைவுகளில் ஹேண்டில்பார் கால்களில் மோதுகின்றது. (இந்த குறைபாடு பொதுமக்களுக்கு டெலிவரி வழங்கப்படும் பொழுது இருக்காது என இந்நிறுவனம் கூறுகின்றது )
  • விலை குறைப்பிற்கு சில இடங்களில் மிலிவான பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Ather Rizta on road price

e-Scooter ex-showroom Price on-road Price
Ather Rizta S 2.9 Kwh ₹  1,09,000 ₹ 1,17,312
Ather Rizta Z 2.9 Kwh ₹  1,29,999 ₹ 1,32,561
Ather Rizta Z 3.7 Kwh ₹ 1,49,999 ₹ 1,52,837

(All price on Road Tamil Nadu)

ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப்படங்கள்

ather rizta electric scooter seat 1
ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர் பூட்
ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர் இருக்கை
ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்
ஏதெர் ரிஸ்டா கிளஸ்ட்டர்
ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டர்
ather rizta
ஏத்தர் Rizta
ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Related Motor News

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

அமோக ஆதரவுடன் 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ஏதெர் ரிஸ்டா

ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஏதெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயருகின்றது..!

ஹீரோ விடா V2 பிளஸ், V2 புரோ, V2 லைட் ஸ்கூட்டர்களின் பேட்டரி, ரேஞ்ச் விபரம்.!

Tags: Ather EnergyElectric Scooterஏதெர் ரிஸ்டா
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

அடுத்த செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan