Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

₹ 82,911 விலையில் ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 விற்பனைக்கு வெளியானது

By MR.Durai
Last updated: 30,May 2024
Share
SHARE

ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 சிறப்பு மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. என்ஜின் உட்பட மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.

விற்பனையில் கிடைக்கின்ற XTEC மாடலை விட ரூபாய் 3000 வரை கூடுதலாக அமைந்திருந்தாலும் அதற்கேற்ற வசதிகளை இந்நிறுவனம் கொடுத்திருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் மிகவும் நம்பகமான 100சிசி Commuter செக்மெண்ட் மாடலாக விளங்குகின்ற ஸ்பிளெண்டர் பிளஸ் ஆனது 4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

ஐ3எஸ் நுட்பத்துடன் கூடிய 97.2cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpmல் 8.02 PS பவர், 6000rpmல் 8.05Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடல் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிளெண்டரின் மைலேஜ் லிட்டருக்கு 73 கிமீ வரை வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.

புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட் ஆனது ஹை இன்டென்சிட்டி பொசிஷன் லேம்ப் (High Intensity Position Lamp – HIPL ) தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான H-வடிவ சிக்னேச்சர் டெயில் லேம்ப் மற்றும் மாறுபட்ட டர்ன் இன்டிகேட்டர் கொண்டுள்ளது.

குறிப்பாக புதிய டூயல் நிறத்திலான மேட் கிரே, கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை பெறுகின்ற மாடலில் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெறுகின்ற ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் வேரியண்டில் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், நிகழ் நேர மைலேஜ் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

ஹீரோவின் புதிய Splendor+ XTEC 2.0 ரூ.82,911 (எக்ஸ்-ஷோரூம், தமிழ்நாடு) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0

ஹீரோ மோட்டோகார்ப் இந்திய பிரிவின் தலைமை வணிக அதிகாரி ரஞ்சிவ்ஜித் சிங் கூறுகையில், “ஸ்பிளெண்டர் பைக் 30 வருடங்கள் நீடித்திருக்கும் ஈடு இணையற்ற தலைமைத்துவத்துடன் உள்ள பிராண்டாகும். மோட்டார் சைக்கிள் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளது மற்றும்ளியல்பாக அணுகக்கூடியதாக உள்ளதன் மூலம் மக்களை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

ஹீரோவின் தொடர்ச்சியான கண்டுபிடிப்பு, பிராண்ட் நம்பிக்கை மற்றும் தயாரிப்பு நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு Splendor மாடல் நீடித்த வெற்றிக்கு ஒரு சான்றாகும்.

ஐகானிக் வடிவமைப்பு, சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற வசதிகள் ஆகியவற்றின் சரியான கலவையான ஸ்பிளெண்டர் முன்னேற்றத்தின் சின்னம் மற்றும் 4 கோடி மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத மாடலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:100cc BikesHero BikeHero SplendorHero Splendor Xtec
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Bajaj Freedom 125 cng
Bajaj
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
xtreme 125r
Hero Motocorp
2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved