Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Bajaj

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்

By MR.DuraiUpdated:2,February 2025
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

சிஎன்ஜி (Compressed Natural Gas) மற்றும் பெட்ரோல் என இரண்டு பயன்முறையிலும் இலகுவாக மாற்றிக் கொண்டு இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் டேங்க் 2 லிட்டர் கொள்ளளவுடன், சிஎன்ஜி டேங்க் 2 கிலோ கிராம் கொண்டுள்ளது.

Bajaj Freedom 125 cng

Bajaj Freedom 125 CNG

125சிசி சந்தையில் உள்ள மற்ற மாடல்களுக்கும் சவால் விடுக்கும் வகையிலான டிசைனை பெற்றுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட் லேம்ப் அல்லது வட்ட வடிவ ஹாலோஜன் பல்பு பொருத்தப்பட்ட மாடல்கள் என மூன்று விதமான வெரைட்டிகளில் கிடைக்கின்ற இந்த மாடலில் மிக அகலமான மற்றும் நீளமான இருக்கையானது கொடுக்கப்பட்டு அதன் அடிப்பகுதியில் சிஎன்ஜி டேங்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

125 சிசி என்ஜின் ஆனது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 9.5 hp பவர் மற்றும் 9.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேகத்தில் கியர் பாக்ஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டு லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணைந்து தோராயமாக 330 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் லிங்க்டு மோனோஷாக் சஸ்பென்ஷன் பெற்றிருக்கின்ற இந்த மாடல் ஆனது 125சிசி சந்தையில் லிங்க்டூ மோனோஷாக் சஸ்பென்ஷன் பெரும் முதல் மாடலாகவும் விளங்குகின்றது.

இரு பக்க டயர்களிலும் 130மிமீ ட்ரம் பிரேக் அல்லது முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் என இரு விதமான ப்ரேக்கிங் ஆப்ஷன் உடன் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது சிறப்பான பிரேக்கிங் பெரும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

NG04 டிஸ்க் எல்இடி, NG04 டிரம் எல்இடி மற்றும் NG04 டிரம் என மூன்று விதமான வேரியண்டுகளை பெற்று முன்புறத்தில் 80/90 -17 (TL) மற்றும் பின்புறத்தில் 80/100 -16 (TL) அல்லது டாப் வேரியண்டில் முன்புறத்தில் 90/80 -17 (TL) மற்றும் பின்புறத்தில் 120/70 -16 (TL) பெற்றுள்ளது. டிஜிட்டல் கிளஸ்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி சார்ந்த வசதிகள் பெற்று கிரே, வெள்ளை, சிவப்பு நீலம், கிரே மற்றும் பிளாக் உள்ளது.

  • NG04 Drum – ₹ 89,997
  • NG04 Drum LED – ₹ 95,002
  • NG04 Disc LED – ₹ 1,09,997

(ex-showroom)

2025 Bajaj Freedom 125 CNG on-Road price in Tamil Nadu

2025 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • NG04 Drum – ₹ 1,05,890
  • NG04 Drum LED – ₹ 1,11,986
  • NG04 Disc LED – ₹ 1,30,654

பஜாஜ் ஃப்ரீடம் 125 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகைஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke–
Displacement (cc)124.58 cc
Compression ratio–
அதிகபட்ச பவர்9.5  PS at 8,000 rpm
அதிகபட்ச டார்க்9.7 Nm  at 5000 rpm
எரிபொருள் அமைப்புFuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்டெர்லிஸ் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன்கான்ஸ்டென்ட் மெஸ், 5 ஸ்பீடு
கிளட்ச்வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்டெலிஸ்கோபிக்
பின்பக்கம்லிங்க்டூ மோனோஷாக்
பிரேக்
முன்புறம்டிஸ்க் 240 mm/130mm டிரம்
பின்புறம்டிரம் 130 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகைஅலாய்
முன்புற டயர்90/80 -17 ட்யூப்லெஸ்/ 80/90 -17
பின்புற டயர்120/70-16 ட்யூப்லெஸ்/ 80/100-16
எலக்ட்ரிக்கல்
பேட்டரி12V-8Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகைஎலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம்–
அகலம்–
உயரம்–
வீல்பேஸ்1340 mm
இருக்கை உயரம்825 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்170 mm
எரிபொருள் கொள்ளளவு2KG சிஎன்ஜி மற்றும் 2 லிட்டர் பெட்ரோல்
எடை (Kerb)149 kg

பஜாஜ் ஃப்ரீடம் நிறங்கள்

ஃப்ரீடம் 125 மோட்டார்சைக்கிளில் கிரே, வெள்ளை, சிவப்பு நீலம், கிரே மற்றும் பிளாக் உள்ளது.

Bajaj Freedom 125 CNG bike NG04 Drum
MV Black
TV Pewter Grey 1
TV Racing Red
Bajaj Freedom 125 CNG bike NG04 Disc LED
Bajaj Freedom 125 CNG bike NG04 Drum LED

 

Bajaj Freedom 125 CNG Rivals

சிஎன்ஜி பைக்கிற்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை என்றாலும் மற்றும் 125சிசி போட்டியாளர்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்கிறது. குறிப்பாக ஹோண்டா ஷைன் 125, ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், மற்றும் கிளாமர் உள்ளிட்ட மாடல்களுடன் பல்சர் 125 உள்ளது

Faq Bajaj Freedom 125 CNG

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி என்ஜின் விபரம் ?

125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி போட்டியாளர்கள் யார்?

சிஎன்ஜி பைக்கிற்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை என்றாலும் மற்றும் 125சிசி போட்டியாளர்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்கிறது.

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் மைலேஜ் விபரம் ?

இரண்டு லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணைந்து தோராயமாக 330 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும்

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி டாப் ஸ்பீடு?

ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 91கிமீ ஆகும்.

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி ஆன்ரோடு விலை எவ்வளவு?

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ₹1.05 லட்சம் முதல் ரூ.1.31 லட்சம் வரை உள்ளது.

Bajaj Freedom 125 CNG image gallery

Bajaj Freedom 125 cng
freedom 125 cng
Bajaj Freedom 125 CNG bike NG04 Drum LED
Bajaj Freedom 125 CNG bike NG04 Disc LED
Bajaj Freedom 125 CNG bike NG04 Drum
Bajaj Freedom 125 CNG bike is available in 3 variants: NG04 Drum, NG04 Drum LED and NG04 Disc LED
Freedom cng tank

 

Last Updated – 02-02-2025

125cc Bikes Bajaj Freedom Bajaj Freedom 125
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Articleஅறிமுகத்திற்கு முன்னர் டாடா கர்வ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
Next Article மஹிந்திராவின் தார் அர்மடா பற்றி சில முக்கிய தகவல்கள்

Related Posts

honda cb 125 hornet

ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

பல்சர் 125 பைக்

பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

Auto News
honda cb 125 hornet

ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

23,July 2025
2025 tvs apache rtr 310

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

19,July 2025
vida vx2 electric scooter

ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

1,July 2025
2025 tvs jupiter ivory brown

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

10,June 2025
suzuki e access on road

சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

28,May 2025
Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.