50க்கு மேற்பட்ட நாடுகளில் 50,000க்கு அதிகமான டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளின் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் வகையில் ரூ.10,000 வரை சிறப்பு தள்ளுபடியை ஜூலை 31,2024 வரை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 2023ல் விற்பனைக்கு வந்த பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில் உருவான முதல் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X என இரு மாடல்களும் இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட மலேசியா என 50க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 50,000 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரு மாடலிலும் TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ரூ.10,000 வரை விலை சலுகை அறிவித்துள்ளதால் ஸ்பீடு 400 விலை…
Author: BHP Raja
இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி வெளியிட உள்ள முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eVX கான்செப்ட் அடிப்படையிலான மாடல் உற்பத்தி நிலையை எட்டிய நிலையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பேட்டரி, ரேஞ்ச் மற்றும் அறிமுகம் எப்பொழுது போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். Maruti Suzuki eVX 2023 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக கான்செப்ட் நிலை மாடலாக காட்சிக்கு வந்து இவிஎக்ஸ் க்ராஸ்ஓவர் ரக ஸ்டைலை பெற்ற மாடலின் உற்பத்தி நிலை கார் எலக்ட்ரிக் மாடலாக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்திய மட்டுமல்லாமல் பல்வேறு வெளியாடுகளிலும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. குஜராத் மாநிலத்தில் உள்ள சுசூகி ஆலையில் தயாரிக்கப்பட்டு இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது. எனவள, அதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று…
பிகாஸ் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள புதிய RUV350 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 120 கிமீ ஆக உள்ள நிலையில் விலையை ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Bgauss RUV350 Escooter பிகாஸின் RUV350 (Rider Utility Vehicle) என்ற மாடலின் வடிவமைப்பு தென் கிழக்கு அசிய நாடுகளில் பிரபலமான ஒன்றாகும். இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ள 3kWh பேட்டரி பேக் ஆனது இருக்கையில் அடியில் பொருத்தப்பட்டு அலுமினிய கேஸ் உடன், பேட்டரி பேக் ஆனது IP67 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பின்புற சக்கரத்தில் பொருத்தப்பட்ட நிரந்தர காந்த ஒத்திசைவான மோட்டார் அதிகபட்சமாக 3.5 kW பவர், 165 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஈக்கோ, ரைட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்று மணிக்கு அதிகபட்சமாக 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ஈக்கோ மோடில் பயணித்தால் ரேஞ்ச் 135 கிமீ வழங்கும் ARAI சான்றிதழ்…
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் தனது முதல் மோட்டார்சைக்கிளை FY25-26 ஆம் நிதியாண்டின் மத்தியில் அதாவது 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வெளியிடுவதனை தனது ஐபிஓ வெளியிட்டிற்காக தாக்கல் செய்துள்ள DRHP மூலம் தெரியவந்துள்ளது. பொது பங்கு வெளியிட தயாராகி வருகின்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதன் மூலம் ரூ.5,500 கோடியை திரட்ட திட்டமிட்டிருக்கின்றது. ஓலா ஐபிஓ வெளியிடப்படும் பொழுது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஐபிஓ ஆக விளங்கும், சமீபத்தில் நிஃப்டி EV மற்றும் நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ் இண்டெக்ஸ் என்ற இண்டக்ஸை தேசிய பங்கு சந்தை துவங்கியுள்ளது. ஓலா நிறுவனம் முன்பாக M1 டைமண்ட்ஹெட், M1 அட்வென்ச்சர், M1 சைபர்ரேசர் மற்றும் M1 க்ரூஸர் என நான்கு கான்செப்ட் நிலை மாடல்களை காட்சிப்படுத்தியிருந்த நிலையில், இந்த மாடல்களுக்கு தொழில்நுட்ப விபரங்களை வெளியிடவில்லை. இந்த மாடல்களில் ரோட்ஸ்டெர் முதலில் விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில்…
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் ஒன்றான ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் 2040 ஆம் ஆண்டுக்குள் ICE வாகனங்களை முழுமையாக நீக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த துவங்கி உள்ளது. பரவலாக பல்வேறு நாடுகளும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ள நிலையில் ICE பெற்ற வாகனங்கள் பரவலாக விடைபெற தொடங்கி விட்டன இந்த நிலையில் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து மாடல்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கு 2040 ஆம் ஆண்டுக்குள் இலக்கினை இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. முதற்கட்டமாக 2025 ஆம் ஆண்டிற்குள் 10 எலக்ட்ரிக் வாகனங்களை மோட்டார் சைக்கிள் உட்பட விற்பனைக்கு கொண்டு வர இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. படிப்படியாக இந்த எண்ணிக்கை விரிவுபடுத்த உள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டு இருக்கின்றது இதனை 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 35 லட்சம் வாகனங்களாகவும் இது தனது ஒட்டுமொத்த விற்பனையில் 15…
FY30 ஆம் நிதியாண்டுக்குள் ரூ.16,000-ரூ.18,000 கோடி முதலீடு செய்து தனது போர்ட்ஃபோலியோவில் 10 எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் கொண்டிருப்பதுடன், வர்த்தக வாகனங்களுக்கு ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின் என மாறுபட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்களுக்கான கூட்டத்தில் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்சின் எதிர்கால மாடல்கள் பற்றி முக்கிய குறிப்புகள் FY24-25 நடப்பு நிதியாண்டில் ஹாரியர்.ev மற்றும் கர்வ்.ev இரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிட உள்ளது. FY26-ல் பிரத்தியேக பிரீமியம் அவெனியா (Tata Avinya) எலக்ட்ரிக் பிராண்டை வெளியிடும் டாடா மோட்டார்ஸ் இதனை தமிழ்நாட்டில் தயாரிக்கலாம். ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்டின் எலக்ட்ரிக் கார்களையும் தமிழ்நாட்டில் தயாரிக்க வாய்ப்புள்ளது. பிரசத்தி பெற்ற டாடா சியரா காரின் அடிப்படையிலான Sierra EV காரை 2025-2026 ஆம் நிதியாண்டில் வரவுள்ளது. 2030 ஆம் நிதி ஆண்டுக்குள் 10 எலக்ட்ரிக் கார்களை தனது போர்ட்ஃபோலியோவில் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இனி வரவுள்ள டாடா.இவி…
2024 புசான் சர்வதேச மோட்டார் ஷோவில் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள கேஸ்பெர் சிறிய எஸ்யூவி அடிப்படையிலான ஹூண்டாயின் இன்ஸ்டெர் e-SUV மாடலின் ரேஞ்ச் 355 கிமீ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. கேஸ்பெர் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள Inster எலக்ட்ரிக் எஸ்யூவி சிறிய அளவிலான ஸ்டைலிங் மாறுபாடுகளை கொண்டதாகவும், எல்இடி ஹெட்லைட் டிசைன் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டதாகவும், இன்டிரியரில் சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டிருக்கலாம். எவ்விதமான தொழிற்நுட்ப விபரங்களை அறிவிக்கவில்லை என்றாலும் இந்த ரேஞ்ச் 355 கிமீ வரை வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தியுள்ளது. துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற இன்ஸ்டெர் பற்றி முழுமையான விபரங்கள் ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை கொரியாவில் நடைபெறுகின்ற புசான் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட உள்ளது. நிலையில் விற்பனைக்கு தென்கொரியாவில் முதற்கட்டமாக கிடைக்க உள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு…
இந்தியாவில் பரவலாக எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட உள்ளதாக தலைமை செயல் அதிகாரி தருண் கர்க் உறுதிப்படுத்தியுள்ளார். புதிய புதிய கிரெட்டா எலக்ட்ரிக் காரைப் பொறுத்தவரை இந்திய சந்தையில் வரவுள்ள மாருதி சுசூகி முதல் எலக்ட்ரிக் காரான eVX இதைத்தவிர டாடா மோட்டார்ஸ் கர்வ் இவி, எம்ஜி ZS EV, உள்ளிட்ட மாடல்களுடன் விண்fபாஸ்ட் நிறுவனத்தின் புதிய VFe34 போன்ற பல்வேறு மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள ICE கிரெட்டா காரிலிருந்து சிறிய மாறுபட்ட வெளிப்புற ஸ்டைலிங் மற்றும் பல்வேறு டிசைன் மாற்றங்கள் கொண்டதாக அமைந்திருக்க உள்ள மாடலின் இன்டிரியர் தற்பொழுதுள்ள டிசைனில் சிறிய மாற்றங்கள் மட்டும் பெற்றிருக்கலாம். மற்றபடி, கிரெட்டா EV எஸ்யூவி காரில் 48kwh மற்றும் 65kwh…
பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்பொழுது 2901 Blue line, அர்பேன் மற்றும் பிரீமியம் என 3 விதமான வகைகள் கிடைக்கின்ற மாடலின் விலை ரூ.98,558 முதல் துவங்குகின்றது. மூன்று விதமான வகைகளில் மாறுபட்ட வசதிகள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றன குறிப்பாக இந்த மாடல்கள் முழுமையான ஸ்டீல் பாடி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவாக கிடைக்கின்ற மாடலும் கூட ஸ்டீல் பாடி கொண்டதாகவே உள்ளது. மாடல்களை பொறுத்தவரை நாம் சொல்ல வேண்டும் என்றால் நிறங்கள் கூட ரெட்ரோ கிளாசிக் நிறங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக வந்துள்ள 2901 மாடலில் மட்டும் பாடி கிராபிக்ஸ் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக விலையில் கிடைக்கின்ற பஜாஜ் சேட்டக் 2901 மாடல் கூட 123 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் நிலையில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் விலையில் கிடைக்கின்ற அர்பேன் 2024 மாடலானது நமக்கு 113…