இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள சேஸிஸ் பிரிட்ஜ் ட்யூப்பில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து இலவசமாக மாற்றித் தர அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரின் சேஸ் பகுதியில் உள்ள பிரீட்ஜ் ட்யூபில் விரிசல் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்கூட்டர்களில் ஒரே சமயத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து ஆய்வுக்கு உட்ப்படுத்திய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தற்பொழுது திரும்ப அழைத்துள்ளது. ஜூலை 10, 2023 மற்றும் செப்டம்பர் 09, 2023க்கு இடையில் தயாரிக்கப்பட்ட iQube மின்சார ஸ்கூட்டர்களின் பிரிட்ஜ் ட்யூப்பை இந்நிறுவனம் ஆய்வு செய்து, ஏதேனும் விரிசல் அல்லது தயாரிப்பு குறைபாடுகள் இருந்தால், இலவசமாக மாற்றித் தரப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து டிவிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் வாடிக்கையாளர் திருப்திக்கான அதன் உறுதிப்பாட்டிற்கு இணங்க, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொல்லை இல்லாத அனுபவத்தை வழங்குவதற்காக இந்தச் செயலை முன்னெச்சரிக்கையுடன்…
Author: BHP Raja
ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மிக வேகமான மற்றும் பிரீமியம் வசதிகளை பெற்ற 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை ரூ.6,000 வரை உயர்ந்துள்ளதால் புதிய எக்ஸ்ஷோரூம் சென்னை விலை ரூ.1,94,945 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு எடிசனாக இந்நிறுவனத்தின் 10 ஆண்டுகால கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட 450 அபெக்சில் விற்பனையில் இருக்கின்ற 450 சீரியஸ் ஸ்கூட்டர் மாடல்களிலும் இருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும் சில கூடுதல் வசதி அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ உள்ளிட்ட காரணத்தால் கவனத்தை பெற்றுள்ளது. இந்த மாடல் வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், இதனை பெற முன்கூட்டியே முன்பதிவு செய்தால் மட்டும் தயாரிக்கப்படுகின்றது. ஸ்மார்ட் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப்+ ஆகிய ரைடிங் மோடுகள் பெற்றுள்ள மாடலில் குறைந்த வேகம் அதிக ரேஞ்ச் வழங்குகின்ற ஸ்மார்ட் ஈக்கோ மோடில் நிகழ் நேரத்தில் ரேஞ்ச் 110 கிமீ…
ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டாவது மாடலாக வெளியிடப்பட்டுள்ள ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது குடும்பம் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஏதெர் முதல்முறையாக வெளியிடப்பட்ட 450 சீரியஸ் ஆனது நிறுவனத்திற்கு மிக சிறப்பான பெயரை பெற்று மேலும் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தும் மாடல் என்ற பெயரை பெற்று இருக்கின்றது. குறிப்பாக 450X மாடல் ஆனது சிறப்பான ரைடிங் அனுபவம் மற்றும் மிக விரைவான ஆசிலரேஷன், ஸ்போர்ட்டிவ் சவாரிக்கு ஏற்றதாகவும், பேட்டரியின் திறன் மிகச் சிறப்பாக இருந்தது. இது போன்ற காரணங்களால் 450X வெற்றி பெற மிக முக்கிய காரணமாக இருந்தது. Ather Rizta escooter புதிதாக வந்துள்ள ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மாற்றியமைக்கப்பட்ட சேஸ், சஸ்பென்ஷன் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட அடிப்படையான அம்சங்கள் 450 பைக்கில் இருந்து தான் பெறப்பட்டிருக்கின்றது. அதனால் நம்முடைய முக்கியமான கவனமான பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான எந்த ஒரு குறைபாடுகளும் இருக்காது.…
இந்தியாவில் விற்பனை செய்யபடுகின்ற மிகவும் குறைந்த விலையில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்துடன் கூடிய பவுன்ஸ் மொபைலிட்டியின் இன்ஃபினிட்டி E1X இ-ஸ்கூட்டரின் விலை ரூ.55,000 ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மணிக்கு 65 கிமீ வேகத்தை பெற்றுள்ள டாப் இன்ஃபினிட்டி E1+X வேரியண்டின் விலை ரூ.65,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 80 கிமீ பயணிக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் விலை பேட்டரி பேக் இல்லாமல் மட்டும் வழங்கப்படுகின்றது. பேட்டரி பேக்கினை ஸ்வாப்பிங் முறையில் இந்நிறுவனத்தின் ஸ்வாப் மையங்களில் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவதனால் பேட்டரி பேக்கிற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் பேட்டரிக்கான சார்ஜிங் கட்டணத்தை மட்டும் சந்தா முறையில் செலுத்த வேண்டியிருக்கும். முதலில் இன்ஃபினிட்டி E1X மாடலின் நுட்பவிபரங்கள் பின் வருமாறு;- 1.1kW மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கிமீ ஆகும். 90 கிமீ முழுமையான சிங்கிள் சார்ஜில் வெளிப்படுத்தும். இன்ஃபினிட்டி E1+X…
விற்பனையில் உள்ள XUV700 எஸ்யூவி காரின் அடிப்படையில் மஹிந்திராவின் முதல் INGLO பிளாட்ஃபாரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட உள்ள XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் மாதிரி தோற்றத்தை காப்புரிமை பெறப்பட்டுள்ளது. புதிய மாடல் மிக சிறப்பான ரேஞ்ச் மற்றும் அதிகப்படியான வசதிகள் என பல்வேறு நவீனத்துவமான அம்சங்களை பெற்றிருக்கும். குறிப்பாக இன்டீரியரில் மிக அகலமான டேஷ்போர்டு ஆனது கொடுக்கப்பட்டு அதில் முழுமையாக தொடுதிரை சார்ந்த மூன்று விதமான ஸ்கிரீன் அம்சங்கள் மற்றும் பல்வேறு Adrenox கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் கூடிய உயர் தரமான பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கும். இரண்டு ஸ்போக்குகளை கொண்ட பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் மற்றும் அதன் மத்தியில் ஒளிரும் வகையிலான மஹிந்திரா லோகோ பெற்றிருக்கும். XUV.e8 ஆனது XUV700 மாடலை போலவே தோற்றம் மட்டுமல்ல அளவுகளிலும், மூன்று வரிசை இருக்கைகளையும் பகிர்ந்து கொள்ளும். இந்த மாடல் 4,740மிமீ நீளம், 1,900மிமீ அகலம் மற்றும் 1,760மிமீ உயரம் பெற்றுள்ளது.…
இந்தியாவில் BYD Seal எலக்ட்ரிக் செடான் காரின் விநியோகத்தை தொடங்கிய நிலையில் முதற்கட்டமாக 200 கார்களை சென்னை, ஹைதராபாத் பெங்களூரு மற்றும் டெல்லி NCR, கொச்சி உள்ளிட்ட முன்னணி மெட்ரோ நகரங்களில் வழங்கப்பட்டுள்ளது. சீல் எலக்ட்ரிக் ரூபாய் 41 லட்சம் முதல் துவங்குகின்ற இந்த மாடலில் அதிகபட்ச டாப் வேரியண்ட் ரூபாய் 53 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக 1.25 லட்சம் புக்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்பொழுது வரை 1,000க்கு அதிகமான முன்பதிவுகள் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் இந்திய சந்தையில் e6 எம்பிவி மற்றும் Atto 3 என இரு மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் மூன்றாவது மாடலாக சீல் மூன்று விதமான வகைகளில் கிடைக்கின்றது. 61.44kWh பேட்டரி பேக் கொண்டு 204hp மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 510 கிமீ (NEDC cycle) ஆகும். RWD 82.56kWh பேட்டரி பேக்கில் 312hp மற்றும் 360Nm…
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா முதல் 180 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மாலில் துவங்கியுள்ளது. 150kw DC + 30KW DC என இரண்டு சார்ஜிங் ஸ்லாட் பெற்றுள்ள புதிய மையம் தவிர முன்பே ஹூண்டாய் அறிவித்தப்படி, தமிழ்நாட்டில் 100 இடங்களில் 180 kW DC விரைவு சார்ஜிங் மற்றும் 85 ஒற்றை வேகமான சார்ஜிங் நிலையங்கள் (DC 60 KW) மையங்களை திறப்பதாக அறிவித்திருந்த நிலையில் முதல் நிலையத்தினை திறந்துள்ளது. இந்த விரைவு சார்ஜிங் மையத்தில் ஹூண்டாய் மட்டுமல்லாமல் அனைத்து எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை சார்ஜ் செய்ய பொது சார்ஜிங் நிலையத்தைப் பயன்படுத்தலாம். HMIL நிறுவனத்தின் 28வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் ‘மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, எங்களின் முதல் 180 kW…
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வீடா எலக்ட்ரிக் பிராண்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள V1 இ-ஸ்கூட்டரை விட மிக குறைந்த விலையில் ஒரு மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ஹீரோ நிறுவனம் இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், ரூ.1 லட்சம் விலைக்கு குறைவாக வெளியிட உள்ள இ-ஸ்கூட்டர் 80 முதல் 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். மேலும் மற்றொரு மாடல் பிரீமியம் வசதிகளை கொண்டதாக வி1 மாடலை விட கூடுதலான வசதிகள் பிரீமியம் அம்சத்தை பெற்றதாக அமைந்துள்ளது. தற்பொழுது சந்தையில் உள்ள வி1 பிளஸ் மற்றும் வி1 புரோ மாடல்கள் விலை ரூ. 1.20 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கிடைத்து வருகின்றது. 3.44kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
கியா வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி EV3 காரில் 81.4kWh மற்றும் 58.3kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருப்பதுடன் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவிகளை வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் முதன்முறையாக ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட உள்ள EV3 இ-எஸ்யூவி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுகின்றது. Kia EV3 மிக சிறப்பான பாக்ஸ் ஸ்டைல் டிசைனை பெற்றுள்ள இவி3 எலக்ட்ரிக் காரில் தற்பொழுது கியா கார்களில் இடம்பெறுகின்ற ‘star map’ எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்று மிக நேர்த்தியான கோடுகளை பெற்று இந்நிறுவனத்தின் பாரம்பரியமான ‘tiger nose’ கிரில் கொண்டதாக அமைந்துள்ளது. 4,300mm நீளம், 1,850mm அகலம், 1,560mm உயரம் பெற்றுள்ள காரின் அளவுகள் கியா செல்டோஸ் மாடலுக்கு இணையாக பெற்றுள்ள நிலையில் 2,680mm வீல்பேஸ்…