புதிய ஆடி க்யூ7 காரின் படங்கள் மற்றும் முழுமையான நுட்ப விவரங்களை ஆடி வெளியிட்டுள்ளது. புதிய ஆடி க்யூ7 காரில் பல புதிய வசதிகளை கொண்டிருக்கும் க்யூ7 வரும் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வர உள்ளது.2015 ஆடி க்யூ7 போக்ஸ்வேகன் குழுமத்தின் எம்எல்பி பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள மாடலை விட 325 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நீளம் மற்றும் அகலத்தினை குறைத்துள்ளது. எடை மற்றும் அளவுகளை குறைத்திருந்தாலும் கட்டமானத்தில் முன்பை விட உறுதியாகவும் உட்ப்புற இடவசதியும் மேம்படுத்தியுள்ளது.இலகுவான அலுமினிய அடிசட்டத்தினை கொண்டு வடிவமைத்துள்ள காரணத்தால் அடிசட்டத்தில் மட்டும் 100கிலோ எடையை குறைத்துள்ளது. மேலும் சஸ்பென்ஷன் அமைப்பில் 71கிலோ மற்றும் கதவுகளில் 24 கிலோவினை குறைத்துள்ளது.புதிய க்யூ7 காரில் நீளம் 5050மிமீ , அகலம் 1970மிமீ மற்றும் உயரம் 1740 ஆகும். மேலும் வீல்பேஸ் 2990மிமீ ஆகும். முந்தூய மாடலைவிட 37மிமீ நீளத்தையும், அகலம் 15 மிமீ குறைத்துள்ளனர்.…
Author: MR.Durai
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக்கள் தற்பொழுது ஸ்நாப்டீல் ஆன்லைன் இனையதளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. எச்ஃஎப் டான் முதல் கரீஷ்மா இச்ட்எம்ஆர் வரை விற்பனை செய்யப்படுகின்றது.ஸ்நாப் டீல் இனையத்தில் பதிவு செய்த பின்னர் மற்ற முழுமையான நடவடிக்கைகள் அனைத்து டீலர் மூலம் எடுக்கப்படும். மீதி தொகையை டீலரிடம் செலுத்தலாம். இங்கு முன்பதிவு செய்வதன் மூலம் 2 முதல் 5 நாட்களுக்குள் மாடலின் இருப்பினை பொருத்து டெலிவரி செய்யப்படும்.ஸ்நாப்டீல் இனையத்தில் முன்பதிவு செய்தால் ரத்துசெய்ய முடியாது. மேலும் 30 நாட்களுக்குள் எக்ஸ்சேஞ்ச் அல்லது திருப்பி அளிக்க வசதியுள்ளது.
டாடா நிறுவனத்தின் சபாரி ஸ்ட்ரோம் எஸ்யூவி காரின் கஸ்டமைஸ் மாடல் ஆட்டோபெர்பார்மன்ஸ் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றமும் இல்லாமல் தோற்றத்தில் மட்டுமே மாற்றம் பெற்றுள்ளது.முகப்பில் புதிய பம்பர் மேலும் இன்ட்கிரேட்ட் எல்இடி மற்றும் பனி விளக்குகள் போன்றவை உள்ளன. பானட்டில் ஹூட் ஸ்கூப் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ரோம் பக்கவாட்டில் கருப்புநிற கிளாடிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூஃபில் இரண்டு ஃபோக் லைட்டுகள் பொருத்தியுள்ளனர். மேலும் ஆஃப் ரோடு அனுபவத்தினை 17 இன்ச் பிளாக் ஆலாய் வீல் பயன்படுத்தியுள்ளனர்.2.2 லிட்டர் சிஆர்டிஐ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர். மேலும் இந்த கஸ்டமைஸ் மாடல் நேரடியான விற்பனைக்கு இல்லை.இதுபோன்ற ஸ்ட்ரோம் எஸ்யூவி கஸ்டமைஸ் செய்ய ரூ3-3.5லட்சம் வரை செலவாகும். இவற்றை பெற உங்க டீலரிடம் அனுகவும்.
வால்வோ எக்ஸ்சி90 டி8 ஹைபிரிட் கார் மிக அதிகப்படியான ஆற்றலாக 400பிஎச்பி வெளிப்படுத்தும் ஆனால் மிக குறைவான கார்பன் அதாவது ஒரு கிலோமீட்டருக்கு 59 கிராம் மட்டுமே வெளிப்படுத்தும்.எக்ஸ்சி90 டி8 காரை மிகவும் சக்திவாய்ந்த மற்றும் தூய்மையான எஸ்யூவி என வால்வோ அழைக்கின்றது. இதன் காரண்ம் என்னவென்றால் இந்த காரின் உச்சகட்ட ஆற்றல் 400பிஎச்பி ஆகும். மேலும் இதன் குறைவான கார்பன் வெளியிடும் தன்மையே ஆகும்.ஹைபிரிட் கார் என்றால் இரண்டு விதமான ஆற்றலை கொண்டு இயங்கூடிய காராகும். இந்த காரில் பெட்ரோல் மற்றும் மின்ஆற்றல் கொண்டு இயங்கும்.என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்2.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு மற்றும் ட்ர்போசார்ஜடு என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 318பிஎச்பி மற்றும் டார்க் 400என்எம் ஆகும். இதன் எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றல் 82பிஎச்பி மற்றும் டார்க் 240என்எம் ஆகும். இவ்விரண்டின் மொத்த ஆற்றல் 400பிஎச்பி ஆகும்.எக்ஸ்சி90 டி8 கார் ஆல்வீல் டிரைவ் அமைப்புடன் கிடைக்கும். 8 வேக தானியங்கி…
இந்தியாவிலே உருவான முதல் ஸ்போர்ட்ஸ் கார் டிசி அவந்தி 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வர உள்ள நிலையில் டிசி அவந்தி காரின் பல விவரங்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ள டிசி அவந்தி பிரபலமான கஸ்டமைஸ் நிறுவனமான டிசியால் தயாரிக்கப்பட்டுள்ளது. டிசி அவந்தி காரின் விலை ரூ.35 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் முதல் பேஸ் தயாரிப்பில் உள்ள 500 கார்களுக்கான முன்பதிவு முடிவடைந்துள்ளதாம். டிசி அவந்தி கார் மொத்தம் 4000 கார்கள் மட்டுமே டிசி தயாரிக்கும் என்பது குறிப்பிடதக்கதாகும்.என்ஜின்டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரில் ஃபோர்டு 2.0 லிட்டர் ட்ர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 250பிஃச்பி மற்றும் டார்க் 366என்எம் ஆகும். 6 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. அவந்தி மணிக்கு 250 கிமீ வேகம் செல்லவல்லது.பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புபாஸ் செக்ஷன் பேஸ் ஃபிரேம் சேஸி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பாடி கார்பன்…
எதர்(Ather) நிறுவனத்துடன் இணைந்து ஃபிளிப்கார்ட் வேகமான எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இணைந்து ரூ.6.19 கோடி முதலீடு எதர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.இந்த வேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டைப் மாடலினை வெளியிட்டுள்ளனர். ஆன்டராய்டு அடிப்படையாக கொண்ட டேஸ்போர்டு, நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தயாரிக்க உள்ளனர்.இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 75கீமி ஆகும். மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்பொழுதுள்ள பெட்ரோல் ஸ்கூட்டரை விட 15கிலோ எடை குறைவாக இருக்கும். இந்த பேட்டரி 15கிலோ எடை இருக்கும். இந்த பேட்டரின் ஆயுட்காலம் 50000கீமி ஆகும்.