உலகின் அதிவேகமான காராக இருந்து வந்த புகாட்டி வேயரான் காரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஹேன்னிஸி வேனோம் கார் படைத்துள்ளது.புகாட்டி வேயரான் கார் 2010 ஆம் ஆண்டில் மணிக்கு 434.4கிமீ வேகத்தினை பதிவு செய்திருந்தது. இதன் சாதனையை ஹேன்னிஸி வேனோம் கார் 435.31 கிமீ வேகத்தினை பதிவு செய்துள்ளது.7 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 1244 எச்பி வரை வெளிப்படுத்தும். குறைந்தபட்சம் 30 கார்களையாவது விற்றால்தான் இந்த சாதனையை தக்கவைத்துக் கொள்ளமுடியும். இதுவரை 11 கார்களை ஹேன்னிஸி வேனோம் ஜிடி விற்றுள்ளது.ஹேன்னிஸி வேனோம் ஜிடி காரின் வீடியோ[youtube https://www.youtube.com/watch?v=gWAavCjVQvM]
Author: MR.Durai
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களுக்கும் இலவச சர்வீஸ் முகாமை வரும் மார்ச் 3 முதல் 9 வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.எம்- ப்ளஸ் இலவச முகாமில் 75 விதமான செக் பாயின்ட்களை சோதனை செய்ய உள்ளனர். குறிப்பாக என்ஜின் செயல்திறன், ஏசி, வாகனத்தின் அனைத்து பாகங்களும், எலெக்ட்ரிக் உபகரணங்கள். மேலும் உதிரிபாகங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கவும் உள்ளனர்.இதுகுறித்து மேலும் விவரங்கள் அறியவும் உங்கள் மஹிந்திரா வாகனத்தினை பரிசோதிக்கவும் உங்கள் அருகாமையில் உள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.மஹிந்திரா எம்-ப்ளஸ் கேம்ப் பற்றி மேலும் அறிய தொடர்பு கொள்ள; 1800-209-6006
மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் புதிய மஹிந்திரா SLE 4×4 வகையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வகையில் சில பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துள்ளது. இதன் விலை 10.72 இலட்சம் ஆகும்.LX, VLX மற்றும் VLX AT 4×4 போன்ற வேரியன்ட்களில் புதிதாக இதனையும் இனைத்துள்ளது. LX 4×4(Rs 9.66 இலட்சம்) மற்றும் VLX AT 4×4(Rs 11.81 இலட்சம்) என இரண்டு வகைகளுக்கு மத்தியில் இந்த புதிய SLE 4×4 (Rs 10.72 இலட்சம்) வகையை வெளியிட்டுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ SLE 4x4SLE 4×4 காரில் சில பாதுகாப்பு வசதிகளை அதிகரித்துள்ளது.அவை ABS, வாய்ஸ் அசிஸ்ட் அமைப்பு, எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் ORVMs, ஃப்ரென்ட் ஃபோக் விளக்குகள், கலர் க்ளாடீங், ரியர் வாஸ் வைப்பர், இன்னும் பல வசதிகளை கொடுத்துள்ளது.என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 2.2 லிட்டர் 4 சிலிண்டர் எம்-ஹவாக் டீசல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 120 HP. மஹிந்திரா ஸ்கார்பியோ SLE 4×4 `விலை 10.72…
மேம்படுத்தப்பட்ட ஃபியட் லீனியா காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் விற்பனைக்கு வரவுள்ள லீனியா 2014 காருக்கு ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.முகப்பு கிரில் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதுவிதமான பனி விளக்குகள், மேம்படுத்தப்பட்ட இண்டிரியர், புது வடிவத்தில் ஆலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் ட்ர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 117 பிஎஸ் மற்றும் டார்க் 207 என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 93பிஎஸ் மற்றும் டார்க் 209என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.ஃபியட் லீனியா 2014 விலை விபரம்..(டெல்லி எக்ஸ்ஷோரூம்) 2014 ஃபியட் லீனியா பெட்ரோல் என்ஜின் 2014 ஃபியட் லீனியா ஏக்டிவ்–ரூ7.64 லட்சம் 2014 ஃபியட் லீனியா டைனமிக்–ரூ8.56 லட்சம் 2014 ஃபியட் லீனியா எமோஷன்–ரூ9.22 லட்சம்2014 ஃபியட் லீனியா டீசல் என்ஜின் 2014 ஃபியட் லீனியா…
டொயோட்டா நிறுவனத்தின் லிவா காரின் கிராஸ்ஒவர் மாடலாக எட்டியோஸ் கிராஸ் என்ற பெயரில் லிவா காரினை மெருகேற்றி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.8 விதமான வண்ணங்களில் அசத்தப்போகும் எட்டியோஸ் கிராஸ் காரில் பல சிறப்பு அம்சங்களை புகுத்தியுள்ளது. முகப்பு கிரில் சிறப்பான தோற்றத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் சைட் கிளாடிங், ரூஃபில் ரெயில்கள், பின்புற ஸ்பாய்லர்கள், டைமன்ட் ஃபினிஷிங் கொண்ட 15 இன்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.பனி விளக்குகள், ரியர் டிஃபோக்கர் போன்ற வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரியங்கில் ஆடியோ கண்ட்ரோல் அமைப்பினை பெற்றுள்ளது. பியோனோ கருப்பு வண்ணத்தில் இண்டிரியர் பெற்றுள்ளது.எட்டியோஸ் லிவா காரில் பொருத்தப்பட்டிருந்தே அதே என்ஜினே கிராஸ் காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ், டூவல் காற்றுப்பைகள் மற்றும் இபிடி போன்ற வசதிகள் பெற்றுள்ளன. பெட்ரோல் மாடலில் இரண்டு விதமான என்ஜினை கொண்டுள்ளது. மேலும் டீசல் மாடலும் கிடைக்கும். 80 பிஎஸ் சக்தி வாயந்த 1.2 லிட்டர் என்ஜின் மற்றும் 90 பிஎஸ் சக்தி வாய்ந்த…
இடைக்கால பட்ஜெட்டின் காராணமாக ஃபோர்டு, மாருதி, மஹிந்திரா, செவர்லே, ஹோண்டா, ஹூண்டாய் , ஃபோக்ஸ்வேகன், நிசான் , ஆடி மற்றும் மெர்சிடிஸ் போன்ற கார் நிறுவனங்களின் மாடல்களில் விலை குறைக்கப்பட்டுள்ளது.சிறிய ரக கார்களின் வரி 12 சதவீதமாக இருந்த வரி தற்பொழுது 8 சதவீதமாக குறைந்துள்ளது.எஸ்யூவி கார்களின் வரி 30 சதவீதமாக இருந்த வரி தற்பொழுது 24 சதவீதமாக குறைந்துள்ளது.செடான் கார்களின் வரி 24-27 சதவீதமாக இருந்த வரி தற்பொழுது 20-24 சதவீதமாக குறைந்துள்ளது.மாருதிமாருதி நிறுவனத்தின் அனைத்து வகை கார்களுக்கும் ரூ.8100 முதல் 31000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட செலிரியோ காருக்கும் பொருந்தும்.ஸ்விஃப்ட் காரின் தற்பொழுதைய ஆரம்ப விலை ரூ.4.42 லட்சம் ஆகும் முந்தைய விலை ரூ.4.58 லட்சமாகும்.டிசையர் காரின் தற்பொழுதைய ஆரம்ப விலை ரூ.4.58 லட்சம் ஆகும் முந்தைய விலை ரூ.5.03 லட்சமாகும்.வேகன்ஆர் தற்பொழுதைய ஆரம்ப விலை ரூ.3.48 லட்சம் ஆகும் முந்தைய விலை ரூ.3.61…