Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டாடா நிறுவனம் புதிய போல்ட் ஹைட்ச்பேக் மற்றும் செஸ்ட் செடான் காரினை பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. விஸ்டா பிளாட்பாரத்தின் மேம்படுத்தப்பட்ட கார்களாக வெளிவரவுள்ள போல்ட் மற்றும் செஸ்ட் இந்திய சாலைகளில் டாடா கார்களின் ஆதிக்கத்தினை அதிகரிக்க செய்யும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.விஸ்டாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவத்தினை கொண்டுள்ளது. முகப்பு பம்பர் , கிரில் சிறப்பான தோற்றத்தினை கொண்டுள்ளது. மேலும் புராஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. செஸ்ட் காரில் பகல் நேரத்தில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன ஆனால் போல்ட் காரில் அவை இல்லை.செஸ்ட் காரின் சிறப்பு என்னவென்றால் கிளட்ச் பெடல் இல்லாத மேனுவல் மூலம் கியர் லிவரினை மாற்றி இயக்கி கொள்ளமுடியும். இதனை டாடா ஃஎப்-ட்ரானிக் நுட்பம் என பெயரிட்டுள்ளது.செஸ்ட் மற்றும் போல்ட் காரில் புதிய ரெவர்டான் 1.2 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.செஸ்ட் மற்றும் போல்டில் 1.3 லிட்டர்…

Read More

அசோக் லேலண்ட் நிறுவனம் புதிய இலகுரக பாட்னர் டிரக் மற்றும் மிட்ர் பஸ்யினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 3.5 முதல் 7 டன் வரையிலான பிரிவில் தோஸ்த் டிரக்கினை தொடர்ந்து இலகுரக எடை பிரிவில் புதிய பாட்னர் டிரக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது.பாட்னர் இருக்கை அமைப்பானது கார்களுக்கு நிகரான இன்டிரியரை கொண்டிருக்கும். மேலும் ஏசி வசதியினை ஆப்ஷனலாக டாப் மாடலலில் இருக்கும். மேலும் பவர் ஸ்டீயரிங் நிரந்தர அம்சமாக இருக்கும்.4 லோடு எடையினை தாங்கும் வகையில் பாட்னர் விளங்கும் மொத்த எடை 6.6 டன் ஆகும். இரண்டு விதமான வீல்பேஸ்களில் கிடைக்கும் அவை 2850மிமீ மற்றும் 3350 மிமீ ஆகும். பாட்னர் டிரக் ஆனது நிசான் ஃஎப்24 பிளாட்ஃபாரத்தில் உருவாக்கியுள்ளனர்.பாட்னர் டிரக் விலை 8.19 லட்சம் மற்றும் 9.19 லட்சம் ஆகும்.மிட்ர் பஸ்மிட்ர் பஸ் (MITR BUS)ஆனது பள்ளி குழந்தைகளுக்கும் மற்றும் அலுவலக பயன்பாடிற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.குறிப்பாக மிட்ர் ஸ்டாஃப் பயன்பாட்டினை குறிவைத்தே விற்பனைக்கு…

Read More

இந்தியாவில் நடைபெற உள்ள மாபெரும் ஆட்டோமொபைல் கண்காட்சி வருகின்ற பிப்ரவரி 7 முதல் 11வரை கிரேட் நொய்டாவில் நடைபெற உள்ளது. 12வது ஆட்டோ எக்ஸ்போவில் உலகின் ஆட்டோமொபைல் ஜாம்புவான்களின் வாகனங்களின் புதிய கான்செப்ட்கள் காட்சிக்கு வரவுள்ளது. அனைத்து கான்செப்ட் விவரங்களை முழுமையாக பதிவு செய்ய முடியம் என நம்புகிறேன் இனைந்திருங்கள்…. மேலும் உடனுக்குடன் பல தகவல்களை உங்கள் மொபைல் வழியே பெறும் வழியினை ஆட்டோ எக்ஸ்போ குழுமம் உருவாக்கியுள்ளது. ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு; https://play.google.com/store/apps/details?id=com.siam.autoexpo2014&hl=en ஆப்பிள் பயனர்களுக்கு; https://itunes.apple.com/ca/app/auto-expo14/id797538459?mt=8 பிளாக்பரி பயனர்களுக்கு; https://www.appworld.blackberry.com/webstore/content/45844887/?lang=en&countrycode=IN வின்டோஸ் பயனர்களுக்கு; https://www.www.windowsphone.com/en-in/store/app/auto-expo-14/7c68f261-a5ab-4674-a321-251aed2d4502 இனி தொடர்ந்து எழுத முயல்கிறேன் நண்பர்கள்……

Read More

டாடா நிறுவனம் தன்னுடைய முயற்சியில் புதிய 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தொடரினை உருவாக்கியுள்ளது. இந்த புதிய பெட்ரோல் என்ஜின் தொடரின் பெயர் ரெவர்டோன் தொடர் ஆகும்.ரெவர்டோன் 1.2டி லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட டர்போசார்ஜ்டு மல்டிபாயின்ட் ஃப்யூல் இன்ஜெக்ட என்ஜின் ஆகும். இந்த என்ஜின் 83.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாகும். இதன் முறுக்கு விசை 140என்எம் ஆகும்.1.2டி என்ஜின் மிக குறைவான கார்பன் வெளிப்படுத்தும். மேலும் அதிர்வுகள் மற்றும் சப்தம் போன்றவை மிக குறைவாகவே இருக்கும் என டாடா தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு விதமான மோட்களை கொண்ட டிரைவினை பெறமுடியும் என கூறப்படுகின்றது.ரெவர்டோன் என்ஜின் வகை முழுமையாக இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும். இதனை வருகிற ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்க உள்ளது. மேலும் டாடாவி ஃபால்கான் காரில் பொருத்தப்பட உள்ளது.

Read More

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி வருகிற ஜனவரி 7ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி 5 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரவுள்ளதால் டீசல் மாடல் அமேஸ் காரை விட பரபரப்பினை ஏற்ப்படுத்த உள்ளது. அதற்க்கு காரணம் அதன் மைலேஜ் தான்..1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் வெளிவரும். அமேஸ் காரில் உள்ள டீசல் என்ஜினே சிட்டி காரிலும் இருக்கும்.ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் டீசல் காரில் நிரந்தரமாக இருக்கும். பெட்ரோல் காரில் இ வேரியண்டில் மட்டும் இவை இருக்காது.இ, எஸ், எஸ்வி, வி, விஎஸ் என 5 விதமான மாறுபட்டவைகளில் புதிய சிட்டி கார் கிடைக்கும். டாப் மாடலான விஎஸ் வேரியண்டில் பல்வேறு விதமான நவீன வசதிகளை கொண்டிருக்கும்.இ மற்றும் எஸ் வேரியண்டில் டிரைவர் காற்றுப்பைகள் மட்டும் இருக்கும் மற்ற வகைகளில் இரண்டு…

Read More

எஸ்யூவி கார்களின் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் வரவும் அதிகரித்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரப்போகும் எஸ்யூவி கார்களை பற்றி பார்ப்போம்.மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் எக்ஸ்ஏ ஆல்ஃபா புதுவிதமான வடிவமைப்பில் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாருதி சுசூகி வடிவமைத்து வருகின்றது.பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரவுள்ளது. பெட்ரோல் காரில் 1.2 லிட்டர் கே சீரிஸ் என்ஜினும் டீசல் காரில் 1.3 லிட்டர் மல்டிஜெட் ஃபியட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.எக்ஸ்ஏ ஆல்ஃபா காரின் விலை ரூ.7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கலாம்.மஹிந்திரா ஸ்கார்பியோ 2014மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ கார் தற்பொழுது சோதனையில் உள்ளது. 11 வருடங்களாக இந்திய எஸ்யூவி சந்தையினை தன் வசம் வைத்துள்ள ஸ்கார்பியோ காரின் மேம்படுத்தப்பட்ட மாடலில் முகப்பு மற்றும் பின்புறத்தில் சில மாற்றங்களை…

Read More