லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் அதிகாராப்பூர்வ படங்களை லம்போர்கினி வெளியிட்டுள்ளது. கல்லார்டோ காரின் இடத்தினை நிரப்ப வரும் சூறாவளி (ஹூராகேன் ) அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.1422கிலோ எடை கொண்ட ஹூராகேன் மிக சிறப்பான ஸ்போர்டீவ் அனுபவத்தினை பெறக்கூடிய வகையில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.டூவல் கிளட்ச் கொண்ட 7 வேக முடுக்கி பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் தற்பொழுது ஆடி ஆர்8 காரிலும் பொருத்தப்பட்டுள்ளது.610பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இதன் முறுக்குவிசை 560என்எம் ஆகும். 0-100கிமீ வேகத்தினை தொடுவதற்க்கு 3.2 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.0-200கிமீ வேகத்தினை தொடுவதற்க்கு 9.9 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 325கிமீ ஆகும்.லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் மைலேஜ் லிட்டருக்கு 8கிமீ கிடைக்கும் என லம்போர்கினி தெரிவித்துள்ளது.மூன்று விதமான டிரைவிங் மோட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக சிறப்பான ஸ்போர்டீவ் காராக லம்போர்கினி ஹூராகேன் வலம் வரும் என்பதில் ஐயமில்லை..ஹூராகேன் காரின் விலை…
Author: MR.Durai
லம்போர்கினி நிறுவனம் கல்லார்டோ காரின் உற்பத்தியை சமீபத்தில் நிறுத்தியது. இதற்க்கு மாற்றான காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இந்த காருக்கான பெயர் கேப்பரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சூப்பர் காருக்கான பெயர் ஹூரோகேன் என பெயரிட்டுள்ளது. ஹூரோகேன் என்றால் சூறாவளி என்று அர்த்தமாகும்.இந்த சூறாவளி காரில் 5.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் இதன் ஆற்றல் 600எச்பி வரை இருக்கும்.லம்போர்கினி ஹூரோகேன் சூப்பர் கார் சோதனை படம்…
லம்போர்கினி நிறுவனத்தின் மிக பிரபலமான சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரான கல்லார்டோ உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட்டது. கல்லார்டோவிற்க்கு மாற்றாக கேப்ர்ரி என்ற பெயரில் காரினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.லம்போர்கினி வரலாற்றிலே அதிகப்படியான கார்கள் விற்ற மாடல் என்ற பெருமையை கல்லார்டோ பெற்றுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த கல்லார்டோ இதுவரை 14022 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.இந்தியாவில் 85 கல்லார்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றில் சில முக்கியமானவர்கள் அனில் அம்பானி, ஜான் ஆப்ரஹாம் போன்றவர்கள் அடங்குவர்.40 வருட கால லம்போர்கினி வரலாற்றில் 30000 கார்கள் விற்க்கப்பட்டுள்ளன. அவற்றில் கல்லார்டோவின் பங்கு பாதிக்கு சற்றுதான் குறைவாகும்.மிகவும் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இதன் ஆற்றல் 562பிஎச்பி ஆகும்.
ஹோண்டா வெசல் எஸ்யூவி கார் மிக அசத்தலான வடிவமைப்பில் உருவாகியுள்ளது. டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்ட உற்பத்தி நிலையிலான வெசல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.கூபே வடிவத்தில் மேற்க்கூரை அமைக்கப்பட்டுள்ளது. புதுவிதமான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வெசல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.அடுத்த மாதம் 20ந்த தேதி ஜப்பானில் விற்பனைக்கு வரவுள்ளது. அப்பொழுது முழுமையான விவரங்களை ஹோண்டா வெளியிட உள்ளது. காம்பெக்ட் எஸ்யூவியாக இருந்தாலும் மிக சிறப்பான இடவசதியை கொண்டிருக்கும்.
நிசான் நிறுவனத்தின் குறைந்த விலை கார்களின் பிராண்டான டட்சன் கார்கள் நிசான் டீலர்ஷிப்புகள் வழியாகவே விற்பனை செய்யப்படும் என டட்சன் தலைவர் வின்சென்ட் கோபி தெரிவித்துள்ளார்.இதற்க்கென தனியான டீலர்களை அமைக்கும் எண்ணம் இல்லை, தற்பொழுது உள்ள டீலர்களை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. நிசான் டட்சன் பிராண்டில் கோ ஹேட்ச்பேக், கோ+ எம்பிவி மற்றும் கோ காரினை அடிப்படையாக கொண்ட செடான் காரும் விற்பனைக்கு வரவுள்ளது.வருகிற 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டட்சன் கோ கார் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
புதிய ஹோண்டா சிட்டி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4வது தலைமுறை ஹோண்டா சிட்டி புதுவிதமான வடிவ மொழியில் சிட்டி கார் வெளிவந்துள்ளது.பெட்ரோல் என்ஜினில் மட்டும் விற்பனையில் இருந்து வந்த சிட்டி கார் அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் சிட்டி காரில் 110பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினாக ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 118பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். பெட்ரோல் வகையில் 5 வேக ஆட்டோ மற்றும் மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.முந்தைய சிட்டி காரை விட மிக சிறப்பான வடிவத்தினை புதிய சிட்டி கார் பெற்றுள்ளது. முந்தைய நீளமான 4440மிமீ நீளத்தினை கொண்டுள்ளது. வீல் பேஸ் 50மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது இதனால் கூடுதலான இடவசதியினை பெற முடியும்.புதுவிதமான வடிவமைப்பில் ஆண்டனா, 8 ஸ்பீக்கர்கள், கண்ணாடி கூரை யூஎஸ்பி போர்ட், ஐபாட் தொடர்பு என…