மஹிந்திரா நிறுவனத்தின் மிக பிரபலமான எஸ்யூவி காரான ஸ்கார்பியோ விற்பனையில் 400,000 கார்களை கடந்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ஸ்கார்பியோ மாதம் 3000 கார்களை வரை தொடர்ந்து விற்பனை ஆகின்றது.கடும் போட்டியை சில மாதங்களாகவே ஸ்கார்பியோ சந்தித்து வருகின்றது. ஈக்கோஸ்போர்ட் மற்றும் டஸ்ட்டர் போன்ற கார்களின் வரவால் சற்று சரிவினை சந்தித்தாலும் தொடர்ந்து விற்பனையில் சிறப்பான வளர்ச்சியினை எட்டி வருகின்றது.11 வருடங்களாக விற்பனையில் உள்ள ஸ்கார்பியோ இதுவரை இரண்டு முறை மட்டுமே பெரிதான மாற்றங்களை சந்தித்துள்ளது.அடுத்த வருடத்தில் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ வெளிவரவுள்ளதை மஹிந்திரா உறுதி செய்துள்ளது.
Author: MR.Durai
டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 110சிசி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஜூபிடர் ஸ்கூட்டர் குறிப்பாக ரே, ஏக்டிவா போன்ற மாடல்களுக்கு கடும் சவாலை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.டிவிஎஸ் நிறுவனத்தின் வீகோ ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 110சிசி என்ஜினே ஜுபிடர் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8பிஎச்பி மற்றும் டார்க் 8 என்எம் ஆகும்.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருக்கைக்கு கீழே மொபைல் சார்ஜர் மற்றும் 17லிட்டர் அளவுக்கு இடவசதியினை கொண்டுள்ளது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.4 விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் கிரே ஆகும். முதற்கட்டமாக வடமாநிலங்களில் விற்பனைக்கு வருகின்றது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் தென் மாநிலங்களில் விற்பனைக்கு வரும்.1 லிட்டருக்கு 62கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.டிவிஎஸ் ஜூபிட்ர் ஸ்கூட்டர் விலை ரூ.44200(டெல்லி எக்ஸ்ஷோரூம்)
டொயோட்டா எடியாஸ் மற்றும் லிவா என இரண்டின் ஜி வேரியண்டிலும் கூடுதலான வசதிகளை கொண்ட எஸ்குளூசிவ் பதிப்பினை டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.ஒரு வண்ணத்தில் மட்டும் உள்ள ஜி வேரியண்டின் உட்ப்புறத்தினை டூவல் டோன் வண்ணங்களை கொடுத்துள்ளது. இண்டிரியர் வண்ணத்தில் பியோஜீயோ மற்றும் க்ரீயோ வண்ணத்தில் இருக்கும்.பூளூடுத் மூலம் இணைக்கும் ஆடியோ அமைப்பு, ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகளை தந்துள்ளது. எஸ்குளூசிவ் என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்ட்டிருக்கும்.
சுசூகி ஐவி-4 கான்செப்ட் எஸ்யூவி ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிராண்ட் விட்டாரா எஸ்யூவி காரை விட அடிப்படையின் கீழ் ஐவி-4 உருவாக்கப்பட்டுள்ளது.சுசூகி ஐவி-4 எஸ்யூவி காரின் நீளம் 4215மிமீ , 1850மிமீ அகலமும் மற்றும் 1655மிமீ உயரத்தினை கொண்டிருக்கும். கூரையில் பனி விளக்குகள் மேலும் இவற்றுடன் லேசர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் பிளாக்என்ட் மோல்டிங், குரோம்பூச்சூடன் கூடிய டிஃப்யூசர், இரட்டை புகைபோக்கி பொருத்தப்பட்டிருக்கும்.அடுத்த வருடத்தி மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிசான் எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவி காரை ஃபிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய தலைமுறை காரை விட எக்ஸ்ட்ரெயில் பல வசதிகளை பெற்றுள்ளது.4 வீல் டிரைவ் நிரந்தர அம்சமாக தேவைப்படும் பொழுது மாற்றிக் கொள்ளலாம். மேலும் தற்பொழுது உள்ள 2.0 லிட்டர் என்ஜின் மேம்படுத்தப்பட்டிருக்கும். மேலும் புதிய சிவிடி எக்ஸ்ட்ரானிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.எல்இடி முகப்பு விளக்குகள், 7 நபர்கள் அமர்ந்து இலகுவாக பயணிக்க முடியும், உட்ப்புற கட்டமைப்பு மற்றும் இருக்கைகள் என பலவற்றை முந்தைய மாடலை விட பல மடங்கு உயர்த்தியுள்ளது. நேவிகேஷன் அமைப்பு, ஆடியோ மற்றும் வீடியோ, 19 இன்ச் ஆலாய் வீல் போன்ற வசதிகளை கொண்டிருக்கும்.முந்தைய மாடலைவிட எரிபொருள் சிக்கனத்திலும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் உலகம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
ஃபோர்டு அதிரடியாக அறிமுகம் செய்த சில மாதங்களிலே ரூ30000 முதல் ரூ.50000 வரை ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விலையை உயர்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்தான் முன்பதிவினை தற்காலிகமாக நிறுத்தியது.9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை வந்ததால் தற்காலிகமாக பெட்ரோல் வேரியண்ட்கள் மற்றும் டாப் டீசல் வேரியண்ட்களுக்கான முன்பதிவினை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விலை உயர்வினை அறிவித்துள்ளது.ஈக்கோஸ்போர்ட் விலை உயர்த்தப்பட்ட விபரம் (அடைப்புக்குள் இருப்பது முந்தைய விலை)1.5 ஆம்பின்ட் பெட்ரோல்— 5.85 லட்சம் (ரூ5.59 லட்சம்)1.5 டிரென்ட் பெட்ரோல்—–6.80 லட்சம் (ரூ6.49 லட்சம்)1.5 டைட்டானியம் பெட்ரோல்–7.91 லட்சம் (ரூ7.50 லட்சம்)1.5 டைட்டானியம் பெட்ரோல்(ஆட்டோமேட்டிக்)–8.70 லட்சம் (ரூ8.44 லட்சம்)1.5 ஆம்பின்ட் டீசல்—7.04 லட்சம் (ரூ6.69 லட்சம்)1.5 டிரென்ட் டீசல்—–7.91 லட்சம் (ரூ7.60 லட்சம்)1.5 டைட்டானியம் டீசல்–9.02 லட்சம் (ரூ8.61 லட்சம்)1.5 டைட்டானியம் டீசல்(O)–9.40 லட்சம் (ரூ8.99 லட்சம்)1.0 டைட்டானியம் பெட்ரோல்–8.31 லட்சம் (ரூ7.89 லட்சம்)1.0 டைட்டானியம் பெட்ரோல்(O)-8.69 லட்சம் (ரூ8.28 லட்சம்)டெல்லி எக்ஸ்ஷோரூம்…