Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ரெனோ டஸ்டர் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மிக சிறப்பான வளர்ச்சியடைந்து வரும் ரெனோ டஸ்டர் மேம்படுத்தப்பட்ட வகையும் வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது.முகப்பு கிரில் பெரிதாக மாற்றமடைந்துள்ளது மேலும் உட்டப்புற கட்டமைப்பிலும் பல மாற்றங்களை தந்துள்ளது. டேஸ்போர்டிலும் மாற்றத்தினை தந்துள்ளது.4 வீல் டிரைவீலும் கிடைக்கும். மேலும் என்ஜின் மாற்றங்கள் இருப்பதற்க்கான உறுதியான தகவல்கள் இல்லை.

Read More

டட்சன் பிராண்டின் கோ ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்ட கோ+ என்ற பெயரில் பல பயன் வாகனத்தை இந்தோனோசியாவில் நிசான் பார்வைக்கு வைத்துள்ளது.7 இருக்கைகளை கொண்ட காம்பெக்ட் எம்பிவி கோ+ மிக சிறப்பான வடிவமைப்பினை கொண்டுள்ளது. மேலும் மிகவும் நேர்த்தியான வடிவம் சிறப்பான இடவசதியினை கொண்டிருக்கும்.3995மிமீ நீளம் மட்டுமே உள்ள இந்த எம்பிவி இந்திய சந்தையிலும் சிறப்பான வரவேற்பினை பெறும் என எதுர்பார்க்கப்படுகின்றது. 4 மீட்டருக்குள் இருப்பதனால் வரி உயர்வினை தவிர்க்க முடியும்.டட்சன் கோ காரில் பயன்படுத்தப்பட்ட உள்ள அதே 1.2லிட்டர் என்ஜினே இதிலும் பொருத்தப்பட உள்ளதாம்.இந்த காரின் விலையும் ரூ 4 முதல் 7 லட்சத்திலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ள கோ ஹேட்ச்பேக்கினை தொடர்ந்து கோ+ எம்பிவி விற்பனைக்கு வரவுள்ளது.

Read More

ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ மற்றும் கிளாசிக் காரில் உள்ள சஸ்பென்ஷன் மற்றும் பவர் ஸ்டீயரீங் ஹோஸ் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்க்காக திரும்ப அழைத்துள்ளது.கடந்த 2011 ஜனவரி முதல் 2012 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட ஃபிகோ மற்றும் கிளாசிக் கார்களில் இந்த பிரச்சனை உள்ளதை ஃபோர்டு உறுதி செய்துள்ளது. சஸ்பென்ஷன் மற்றும் பவர் ஸ்டீயரிங் ஹோஸ் மாற்றுவதற்க்காக 1.66 லட்சம் கார்களை திரும்ப பெறுகின்றதாம்.சஸ்பென்ஷன் பிரச்சனைக்காக ஃபிகோ வகையில் 1,09,469 கார்களையும், கிளாசிக் வகையில் 22453 கார்களையும் அழைக்கின்றது. மேலும் பவர் ஸ்டீயரிங் ஹோஸ் குறைக்காக ஃபிகோ வகையில் 30,681 கார்களையும், கிளாசிக் வகையில் 3418 கார்களையும் திரும்ப அழைக்கின்றது.இந்த பாகங்கள் அனைத்தும் இலவசமாக மாற்றி தருவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு ஃபோர்டு தெரிவித்துள்ளது.

Read More

மஹிந்திரா நிறுவனத்தின் மிக பிரபலமான எஸ்யூவி காரான ஸ்கார்பியோ விற்பனையில் 400,000 கார்களை கடந்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ஸ்கார்பியோ மாதம் 3000 கார்களை வரை தொடர்ந்து விற்பனை ஆகின்றது.கடும் போட்டியை சில மாதங்களாகவே ஸ்கார்பியோ சந்தித்து வருகின்றது. ஈக்கோஸ்போர்ட் மற்றும் டஸ்ட்டர் போன்ற கார்களின் வரவால் சற்று சரிவினை சந்தித்தாலும் தொடர்ந்து விற்பனையில் சிறப்பான வளர்ச்சியினை எட்டி வருகின்றது.11 வருடங்களாக விற்பனையில் உள்ள ஸ்கார்பியோ இதுவரை இரண்டு முறை மட்டுமே பெரிதான மாற்றங்களை சந்தித்துள்ளது.அடுத்த வருடத்தில் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ வெளிவரவுள்ளதை மஹிந்திரா உறுதி செய்துள்ளது.

Read More

டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 110சிசி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஜூபிடர் ஸ்கூட்டர் குறிப்பாக ரே, ஏக்டிவா போன்ற மாடல்களுக்கு கடும் சவாலை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.டிவிஎஸ் நிறுவனத்தின் வீகோ ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 110சிசி என்ஜினே ஜுபிடர் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8பிஎச்பி மற்றும் டார்க் 8 என்எம் ஆகும்.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருக்கைக்கு கீழே மொபைல் சார்ஜர் மற்றும் 17லிட்டர் அளவுக்கு இடவசதியினை கொண்டுள்ளது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.4 விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் கிரே ஆகும். முதற்கட்டமாக வடமாநிலங்களில் விற்பனைக்கு வருகின்றது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் தென் மாநிலங்களில் விற்பனைக்கு வரும்.1 லிட்டருக்கு 62கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.டிவிஎஸ் ஜூபிட்ர் ஸ்கூட்டர் விலை ரூ.44200(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Read More

டொயோட்டா எடியாஸ் மற்றும் லிவா என இரண்டின் ஜி வேரியண்டிலும் கூடுதலான வசதிகளை கொண்ட எஸ்குளூசிவ் பதிப்பினை டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.ஒரு வண்ணத்தில் மட்டும் உள்ள ஜி வேரியண்டின் உட்ப்புறத்தினை டூவல் டோன் வண்ணங்களை கொடுத்துள்ளது. இண்டிரியர் வண்ணத்தில் பியோஜீயோ மற்றும் க்ரீயோ வண்ணத்தில் இருக்கும்.பூளூடுத் மூலம் இணைக்கும் ஆடியோ அமைப்பு, ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகளை தந்துள்ளது. எஸ்குளூசிவ் என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்ட்டிருக்கும்.

Read More