ஹோண்டா ட்ரீம் நியோ 110சிசி பைக்கினை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. ட்ரீம் நியோ பைக் ஸ்பிளென்டர் மற்றும் குறைந்த விலை பைக்களுக்கு சவாலினை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ட்ரீம் நியோ பைக்கில் ட்ரீம் யுகா 109சிசி எஞ்சினே பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பான செயல்திறன் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.4 பிஎஸ் ஆகும். டார்க் 8.46என்எம் ஆகும். இந்த பைக்கினை ஹோண்டா ஈக்கோ நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளது.ஹோண்டா ட்ரீம் நியோ மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ ஆகும்.ட்ரீம் நியோ பைக் மிக நீளமான இருக்கைகள் கொண்டாதாகுவும், நெடுந்தொலைவு பயணத்தின் பொழுதும் சிறப்பாக பயணிக்கும் வகையில் சஸ்பென்ஷன் விளங்கும். மிக சிறப்பான ஆலாய் வீல், நேர்த்தியான இன்ஸ்டூருமென்டல் பேனல் என ட்ரீம் நியோ விளங்கும்.முன் மற்றும் பின்புறங்களில் ட்ரம் பிரேக் பயன்படுத்தியுள்ளனர். கார்புரேட்டர் பொருத்தப்பட்ட எஞ்சின் ஆகும். 6 விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை கருப்பு மற்றும் சிகப்பு ஸ்ட்ரைப், கருப்பு மற்றும் வைலட்…
Author: MR.Durai
ஹோண்டா நிறுவனம் ஸ்பிளென்டர் பைக்கினை குறி வைத்து ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கினை இன்று அறிமுகம் செய்கின்றது. ட்ரீம் நியோ பைக் ட்ரீம் யுகா பைக்கினை அடிப்படையாக கொண்டதாகும்.தனது இணையத்தில் வெளியிட்டுள்ள டீசரில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற வாசகத்துடன் டீசர் வெளியிட்டுள்ளது. இந்த ட்ரீம் நியோ பைக் 100 சிசி மார்கெட்டினை குறிவைத்து அறிமுகம் செய்யப்படுகின்றது.ஹோண்டா ட்ரீம் நியோ 3 வேரியண்டில் கிடைக்கும். அவை1. கிக் ஸ்டார்ட், ஸ்போக் வீல், ட்ஃப்அப் டயர்2. கிக் ஸ்டார்ட், ஆலாய் வீல், ட்யூப்லெஸ் டயர்3. செல்ஃப் ஸ்டார்ட், ஆலாய் வீல், ட்யூப்லெஸ் டயர்ஹோண்டா ட்ரிம் நியோ முழு விவரம் அறிய கீழே சொடுக்கவும்..ஹோண்டா ட்ரீம் நியோ
யமாஹா நிறுவனத்தின் மிக பிரபலமான ஸ்கூட்டர் ரே இந்தியன் டிசைன் மார்க் 2013 விருதினை வென்றுள்ளது. சிறப்பான டிசைன்களுக்கு இந்தியா டிசைன் கவுன்சில் மூலம் வழங்கப்படுகின்றது.இந்த விருதிற்க்கான தேர்வுமுறை ஆனது வடிவமைப்பு, நிலைப்பு தன்மை, தரம்,செயல்பாடு, தோற்றம், சிறப்பான உருவாக்கம் போன்ற காரானிகளை மையமாக வைத்து இந்தியா டிசைன் கவுன்சில் வழங்குகின்றது. இந்தியா டிசைன் மார்க் விருது இந்தியாவின் டிசைன் கவுன்சில் மற்றும் ஜப்பான் இன்ஷடியூட் ஆஃப் டிசைன் பிரோமோஷன் கூட்டனியில் வழங்கப்பட்டுள்ளது.மிக அழகான நேர்த்தியான வடிவமைப்பினை கொண்ட யமாஹா ரே ஸ்கூட்டர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இதனால் விற்பனை மிக சிறப்பாகவே உள்ளது. இந்தியன் டிசைன் மார்க் விருதினை இரண்டாம் முறையாக யமாஹா வென்றுள்ளது. கடந்த ஆண்டு YZF-R15 பைக்கிற்க்காக வென்றதுயமாஹா ரே ஸ்கூட்டர் பற்றி படிக்க
ராயல் என்பீல்டு புல்லட் 500 பைக்கின் முழு விவரங்களை சமீபத்தில் ராயல் என்பீல்டு வெளியிட்டது. தற்பொழுது விலை மற்றும் முதல் கட்டமாக விற்பனை செய்யப்படும் பகுதிகளை வெளியிட்டுள்ளது.புல்லட் 500 யில் 499 சிசி சிங்கிள் சிலிண்டர் டிவின் ஸ்பார்க் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 26.1 பிஎச்பி வெளிப்படுத்தும். இதன் டார்க் 40.9 என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.முதல் கட்டமாக புல்லட்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ள பகுதிகளான பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் கேரளா போன்ற பகுதியில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.ராயல் என்பீல்டு புல்லட் 500 விலை ரூ 1.53 லட்சம் (ஆன்ரோடு விலை)ராயல் என்பீல்டு புல்லட் 500 முழு விவரங்கள் அறிய கீழே சொடுக்கவும்.ராயல் என்பீல்டு புல்லட் 500
இந்தியாவின் வாகனவியல் துறை தினமும் பல்வேறு மாற்றங்களுடன் பெரிதும் வளர்ந்து வருகின்றது. ஆனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளை ஒப்பீடுகையில் நம் வளர்ச்சி வேகம் சற்று குறைவே ஆகும்.வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வசதிகளில் நாம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இன்னும் பின் தங்கிதான் உள்ளோம். மாசு கட்டுபாடுகளில் யூரோ 5 விதிகளை கடந்து அடுத்த கட்டத்திற்க்கு மேலை நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.யூரோ 5 விதிகளை அடிப்படையாக கொண்ட பாரத் ஸ்டேஜ் 5 வருகிற 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. பாரத் ஸ்டேஜ் 5 விதிகள் அமலுக்கு வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்.பாரத் ஸ்டேஜ்-5 மாசு கட்டுப்பாடு விதிகளில் கார்பன் வாயு குறைப்பு பாதுகாப்பு வசதிகள், எரிபொருள் சேமிப்பு, எரிபொருள் தரம் மற்றும் மைலேஜ் போன்றவற்றிற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.பாரத் ஸ்டேஜ் 5 அம்சங்கள்எஞ்சின் மாற்றங்கள்கார் எஞ்சின்கள் மிக குறைவான கார்பன் வாயு மிக…
ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் லிமிடெட் எடிசனை வென்டோ ஸ்டைல் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. வென்டோ ஸ்டைல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும்.வென்டோ ஸ்டைல் காரில் குரோம் பூச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வென்டோ ஸ்டைல் காரில் உள்ள மாறுதல்கள் குரோம் பூச்சு செய்யப்பட்ட டேஷ்போர்டு, முகப்பு கிரில் குரோம் பூச்சூடன் இருக்கும், புதிய ஆலாய் வீல், டோர்ஸ்ட்ரெப் கார்னிஸ், மிக சொகுசு தன்மை தரக்கூடிய சீட் கவர்கள் என சேர்க்கப்பட்டுள்ளன.வென்டோ ஸ்டைல் எடிசனில் குரோம் பூச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை.ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தபட்டிருக்கும். இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 105 பிஎச்பி ஆகும். இதன் டார்க் 153 என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.வென்டோ காரில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தபட்டிருக்கும். இந்த எஞ்சின் வெளிப்படுத்தும்…