இந்தியாவின் வாகனவியல் துறை தினமும் பல்வேறு மாற்றங்களுடன் பெரிதும் வளர்ந்து வருகின்றது. ஆனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளை ஒப்பீடுகையில் நம் வளர்ச்சி வேகம் சற்று குறைவே ஆகும்.

வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாடு மற்றும்  பாதுகாப்பு வசதிகளில் நாம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இன்னும் பின் தங்கிதான் உள்ளோம். மாசு கட்டுபாடுகளில் யூரோ 5 விதிகளை கடந்து அடுத்த கட்டத்திற்க்கு மேலை நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.
bs 5
யூரோ 5 விதிகளை அடிப்படையாக கொண்ட பாரத் ஸ்டேஜ் 5  வருகிற 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. பாரத் ஸ்டேஜ் 5 விதிகள் அமலுக்கு வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்.
பாரத் ஸ்டேஜ்-5 மாசு கட்டுப்பாடு விதிகளில் கார்பன் வாயு குறைப்பு பாதுகாப்பு வசதிகள், எரிபொருள் சேமிப்பு, எரிபொருள் தரம் மற்றும் மைலேஜ் போன்றவற்றிற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

பாரத் ஸ்டேஜ் 5 அம்சங்கள்

எஞ்சின் மாற்றங்கள்
கார் எஞ்சின்கள் மிக குறைவான கார்பன் வாயு மிக குறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்படும்.
பாதுகாப்பு வசதிகள்
காரின் கட்டமைப்பு மிக தரமானதாகவும், விபத்துகளின் போது பயணிப்பவர்களுக்கு பாதிப்புகள் மிகவும் குறைவாகவும் இருத்தல் அவசியமாகின்றது. மேலும் விபத்தின்பொழுது கார்களின் கதவுகள் தானாகவே திறக்கும் வகை மற்றும் எரிபொருள் கசிவினை தடுத்தல் போன்றவற்றை கட்டயாமக்க உள்ளனர்.
க்ராஸ் சோதனைகளுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
மைலேஜ் விவரம்
காரின் மைலேஜ் விவரத்தினை மிக தெளிவாக குறிப்பிடுதல் அவசியமாகின்றது.  மைலேஜ் விவரங்கள் தெளிவாக்கப்படுவதால் காரினை தேர்வு செய்வது எளிதாகும்.
குழந்தைகள் இருக்கை
சைல்டு சீட் என சொல்லப்படுகிற குழந்தைகளுக்கான இருக்கைகள் கட்டாயாமக்கப்படும்.
எரிபொருள் தரம் உயர்வு
விற்பனையில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல்களின் தரம் உயர்வு பெறும். எரிபொருளில் உள்ள சல்பர் அளவு 10PPM க்குள் இருப்பது அவசியமாகும். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரும்.
எரிபொருள் ஆவியாதல் தடுக்கப்படும்
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எரிபொருள் ஆவியாதல் மூலம் சூற்றுசூழல் பெரும் பாதிப்புக்குள்ளாவாதாக ஆய்வில் தெரிவந்துள்ளது. ஆவியாதலை தடுக்கும் வகையில் கட்டமைப்பு மற்றும் அதற்க்கு உண்டான கருவிகள் சேர்க்கப்படுதல் அவசியம்.
பாரத் ஸ்டேஜ் 5 விதிகள் அமலுக்கு வரும்பொழுது கார்களில் விலை 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை உயரும்.
பாரத் ஸ்டேஜ் 5  மாசு விதிகள் 2015 முதல் அமலுக்கு வரும். தற்பொழுது இந்தியாவின் முன்னணி நகரங்களில் பாரத் ஸ்டேஜ் 4 மற்ற நகரங்களில் பாரத் ஸ்டேஜ் 3 அமலில் உள்ளது.