மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய பைக்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.முந்தைய பதிவில் மஹிந்திரா பேன்டேரா 110 பற்றி பார்த்தோம்.மஹிந்திரா பேன்டேரா 110 பைக்கின் அதே என்ஜின்தான் சேஞ்சுரா 110 பைக்கிற்க்கும் ஆனால் வடிவமைப்பில் சில மாற்றங்களை தந்துள்ளது. மேலும் கார்களில் உள்ளது போல கீ போப் ரீமோட் கன்ட்ரோல் உள்ளது. என்ஜின் இம்மொபைல்சர், எல்ஈடி லைட் போன்றவை இருக்கும்.மேலும் மஹிந்திரா சேஞ்சுரா 110(mahindra centuro 110) டேங்கின் அடிப்பகுதியில் சற்று ஸ்டைலான வளைவினை கொடுத்துள்ளது. என்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள்…மஹிந்திரா பேன்டேரா 110 பைக்கினை தொடர்ந்து இந்த பைக் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் என்ஜின் MCi-5, 110cc,சிங்கிள் சிலிண்டர் என்ஜின் ஆகும். சக்தி 8.6ps @ 7500rpm. 60km வேகத்தை 8.85 விநாடியில் நெருங்கும்.மைலேஜ் 79.4kmpl(ARAI Certified)
Author: MR.Durai
மஹிந்திரா நிறுவனம் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் தன் சேவையை தொடங்கியது. ஆனால் சிறப்பான வளர்ச்சினை அடையவில்லை. தற்பொழுது மீண்டும் மஹிந்திரா புதிய ஆரம்பத்தை தொடங்க உள்ளது.மஹிந்திரா பேண்டீரோ 110 பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றி கான்போம். மஹிந்திரா PANTERO 110 பைக் 100 முதல் 110சிசி பைக்களுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பல புதிய அம்சங்களுடன் பென்ட்ரோ வெளிவரும். இதன் என்ஜின் MCi-5, 110cc, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் ஆகும். சக்தி 8.6ps @ 7500rpm. 60km வேகத்தை 8.85 விநாடியில் நெருங்கும்..4 வகைகளில் பெனட்ரோ பைக் கிடைக்கும்.T1- Self Start, Alloys, Digital speedoT2- Self Start, Alloys, Analogue speedoT3- Kick Start, Alloys, Analogue speedoT4- Kick Start, Spoke wheels, Analogue speedoவிலை விபரங்கள் வெளியிடப்படவில்லை.. மைலேஜ் 79.4kmpl(ARAI Certified)
செவர்லே சேயல் சேடான் கார் வருகிற பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வெளிவர உள்ளது. மாருதி டிசையர் , டாடா மான்ஸா போன்ற கார்களுக்கு சேயல் கார் சவாலாக விளங்கும்.செவர்லே சேயல் தன்னுடைய இணையத்தில் சில தினங்களுக்கு முன் டீசரினை வெளியிட்டுள்ளது.செவர்லே சேயல் டீசல் என்ஜின் 1.3 லிட்டர் ஸ்மார்ட்டெக் ட்ர்போ-சார்ஜ்டு ஆகும்.மேலும் பெட்ரோல் 1.2 லிட்டர் ஸ்மார்ட்டெக் பொருத்தப்பட்டதாகும்.விலை 6 முதல் 7 இலட்சம் வரை இருக்கலாம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகளவில் முதன்மையான இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். கடந்த 2012 டிசம்பர் மாதத்தில் மட்டும் 5,41,615 பைக்களை விற்றுள்ளது.மொத்தம் 5 இலட்சம் வாகனங்களை டிசம்பர் மாதத்தில் டெலிவரி செய்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5,40,276 விற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும். அதைவிட 1 % 2012 டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.கடந்த 2012 விழாக்கால மாதங்களில்(அக்டோபர்&) 11 இலட்சம் வாகனங்களை விற்றுள்ளது.பைக் வாங்குவதை பலரும் தள்ளிபோட்டிருக்கலாம் புது வருடத்திற்க்கு பின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என அனில் துவா(Senior VP -marketing & sales) கூறியுள்ளார்.ஸ்பிளன்டர்,பேஸ்சன் மற்றும் மேஸ்ட்ரோ போன்றவை அதிக விற்பனையான வாகனங்களாகும்.
யமாஹா பைக் நிறுவனம் இந்தியாவில் தனக்கென தனியான முத்திரையுடன் செயல்பட்டு வருவதை அறிவோம். கடந்த 2012 ஆம் ஆண்டின் யமாஹா 6% வளர்ச்சியும் பெற்றுள்ளது.யமாஹா R15 பைக் 4 புதிய கலர்களில் களமிறக்கயுள்ளது. இந்த வண்ணங்கள் யமாஹா ஆர்15 பைக்கின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இதனை யமாஹா ஆர்15 வெர்சன் 2.0 என அறிவித்துள்ளது. இந்த வெர்சனில் உள்ள புதிய வண்ணங்களை கீழுள்ள படங்களை பாருங்கள்.யமாஹா ஆர்15 என்ஜின் 150சிசி liquid cooling. `ஆர்15 என்ஜின் சக்தி 17PS மற்றும் டார்க் 15NM ஆகும்.
மஸ்தா சிஎக்ஸ் 3 எஸ்யூவி கார் வருகிற 2014 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மஸ்தா சிஎக்ஸ் 3 கார் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் லுக்குடன் சிறப்பான முன் தோற்றத்துடன் உள்ளது. இந்த காரின் முன்புற விளக்குகள் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 3 லிட்டர் ட்ர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். மேலும் 1.6 லிட்டர் டீசல் ட்ர்போ என்ஜினிலும் வரும். மஸ்தா சிஎக்ஸ் 3 சுற்றுசூழலை பாதிக்கும் காரணிகள் குறைவாக இருக்கும்.thanks: caradvice