2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்க்குளாகிய கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரும் ஒன்று. தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இகோ ஸ்போர்ட் கார் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றது.எஸ்யூவி காராக வெளிவரவுள்ள ஈக்கோஸ்போர்ட் கார் வருகிற 2013 ஆகஸ்ட் மாதத்திற்க்கு முன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் அல்லது மே மாதத்தில் முன்பதிவு தொடங்கலாம். 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை தரும்.கூடுதலான மைலேஜ் கிடைக்கும். ஃபியஸ்ட்டாவில் பொருத்தப்பட்ட அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஈக்கோஸ்போர்ட்டிலும் பொருத்தப்படும்.
Author: MR.Durai
பஜாஜ் நிறுவனம் வருகிற ஜனவரி 7 அன்று புதிய 100 cc பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக் நிச்சியமாக சிறப்பான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.வருகிற 7 ஜனவரி 2013 அன்று அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த 100 cc பைக் மிகச் சிறப்பான விற்பனை வளர்ச்சியை எட்டும் என பஜாஜ் நம்புகிறது. இதுவரை எந்த என்ஜின் விபரங்களையும் வெளியிடவில்லை.
2012 ஆம் ஆண்டின் நிறைவில் கார் தயாரிப்பு நிறுவனங்களில் உலக அளவில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களை கானலாம். இந்த நிறுவனங்களின் விற்பனை உலகில் உள்ள அனைத்து நாடுகளில் விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கதாகும். 1. சுனாமியால் டோயோடா நிறுவனம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து சிறப்பான விற்பனையை அடைந்து வருகிறது. உலக அளவில் 9.9 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டையை விட 26% உயர்ந்துள்ளது.2. சில வருடங்ளுக்கு முன் முதன்மையான இடத்தை இழந்த ஜிஎம் நிறுவனம் தொடர்ந்து முன்னேறி வருகின்றது. உலக அளவில் 9.3 மில்லியன் வாகனங்களை விற்று 2 ஆம் இடத்தில் உள்ளது. முதலிடத்தை மீண்டும் கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.3. மூன்றாவது இடத்தில் வோக்ஸ்வேகன் உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் காரின் விலை விபரத்தினை அறிவித்து உள்ளது. ரிட்ஸ் AT கார் 52 மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாகஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.என்ஜின் 1.2 லிட்டர் K12M மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் சக்தி 87PS ஆகும். இது பழைய என்ஜினே ஆகும். மேலும் டீசல் வகையில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கிடையாது. இது சற்று வீழ்ச்சியாக அமையலாம்.ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மைலேஜ் 17.16kmpl . மேன்வல் ட்ரான்ஸ்மிஷன் மைலேஜ் 18.5kmpl.பெட்ரோல் வகையில் உள்ள சிறப்பம்சங்கள் VXi and VDi trim like immobiliser, fog lamps front and rear, light off and key off reminder, rear spoiler, side body moulding மேலும் சில…விலை 6.15 லட்சம்(ex-showroom delhi),6.26 லட்சம்((ex-showroom chennai)
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியாவின் போலோ R கோப்பைக்கான ரேஸ் 2013யில் நடைபெற உள்ள நிலையில் ரேஸ் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பதிவு செய்யலாம்.ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய முகவரி போலோ R.
பல பயன் தரும் வாகனங்ளை அறிமுகம் செய்வதில் பல ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் முனைந்து வருகின்றது. அந்த வகையில் ஜிஎம் நிறுவனத்தின் செவர்லே இந்தியப் பிரிவு விரைவில் என்ஜாய் `காரினை அறிமுகம் செய்ய உள்ளது.என்ஜாய் கார் MPV வகையினை சேர்ந்தது. MPV என்றால் Multi-Purpose Vehicle(பல பயன் தரும் வாகனம்). MPV வாகனங்கள் சிறப்பான இடவசதி மேலும் பல பயன்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.சமீபத்தில் நிசான் எவில்லா, சைலோ மற்றும் குவேன்டோ கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்க்கு சவாலாக என்ஜாய் விளங்கும்.செவர்லே என்ஜாய் 7 சீட்களை கொண்ட காராகும். முதலில் டீசல் வகை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின் ஃபியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசலுக்கு இதன் சக்தி 76PS. மேலும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் வெளிவரலாம்.இதன் சக்தி 95PS ஆகும்.என்ஜாய் காரில் ABS,EBD, சேப்டி பெல்ட், முன்புறம் காற்றுப்பை என பல பாதுகாப்பு வசதிகள் உள்ளது. 2013 ஆம் வருடத்தின் மத்தியில் வெளிவரலாம். விலை…