வரும் ஜனவரி 19ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக எக்ஸ்பல்ஸ் 210 அல்லது ஜூம் 125, ஜூம் 160 உள்ளிட்ட மாடல்களை விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற EICMA 2024 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் புதிய கரீஸ்மா XMR 250, எக்ஸ்ட்ரீம் 250R, எக்ஸ்பல்ஸ் 210 உள்ளிட்ட மாடல்களுடன் எக்ஸ்பல்ஸ் 421 டீசர், மேலும் புதிய மேவ்ரிக் 440 நிறங்கள் மற்றும் ஜூம் 125 அட்வென்ச்சர் மற்றும் ஜூம் 160 அட்வென்ச்சர் மாடல்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி துவங்க உள்ள பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ அரங்கில் ஹீரோ நிறுவனம் புதிதாக சில மாடல்களை சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 2025 டெஸ்டினி 125 விலை அறிவிக்கப்பட உள்ளது. முதன்முறையாக ஜனவரி 19 என தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் வெளிவரவுள்ள டீசர்களின்…
Author: MR.Durai
பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிதாக வந்துள்ள 35 சீரிஸ் மாடலில் 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Bajaj Chetak 35 Series ரெட்ரோ ஸ்டைலிங் அமைப்பினை கொண்டுள்ள சேத்தக் 35 சீரிஸ் மாடலில் உள்ள 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டிலும் பொதுவாக 3.5Kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 73 கிமீ வேகத்தை கொண்டுள்ளது. BLDC வகை மோட்டாரிலிருந்து 3KW தொடர்ந்து வெளிப்படுத்தும், அதிகபட்சமாக 4KW பவர் வெளிப்படுத்துகின்றது. புதிய சேத்தக் 35 மாடல் அதிகபட்சமாக 35 லிட்டர் ஸ்டோரேஜ் வழங்கும் வகையில் பேட்டரி ஃபுளோர் போர்டிற்கு அடியில் மாற்றப்பட்டு மிகவும் பாதுகாப்பான ட்யூப்லெர் சேசிஸ் பெற்றுள்ளது. டாப் மாடலான Chetak 3501 வேரியண்டில் 3.5Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில்…
ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற விடா எலெக்ட்ரிக் பிராண்டின் வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் V2 லைட், V2 பிளஸ், மற்றும் V2 புரோ என மூன்று விதமான வேரியண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Hero Vida V2 முந்தைய விடா வி1 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடா வி2 ஸ்கூட்டரில் V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், தற்பொழுது வி2 லைட் மாடலில் 2.2Kwh, வி2 பிளஸ் வேரியண்டில் 3.44Kwh, மற்றும் வி2 புரோவில் 3.94kwh என மூன்று விதமான ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக மூன்று மாடலிலும் பவர் அதிகபட்சமாக 6kw வெளிப்படுத்தினாலும் தொடர்ச்சியாக 3.9Kw மற்றும் டார்க் 25Nm கொண்டுள்ளது. குறைந்த பேட்டரி திறன் பெற்ற V2 Lite வேரியண்டில் 2.2Kwh பேட்டரி பொருத்தப்பட்டு 100% சார்ஜில் 94 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு…
புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலான நிறங்கள் பெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் பிரபலமான 450X, 450S என இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஸ்கூட்டரின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல் சில வசதிகள் பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், AtherStack 6 மென்பொருள் மேம்பாடு கொண்டிருக்கலாம். மற்றபடி, கூடுதலாக சில நிறங்கள் பெறக்கூடும். தற்பொழுது விற்பனையில் உள்ள 450s ஸ்கூட்டரில் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரு விதமான பேட்டரி பேக் பெற்றதாக உள்ளது. இதில் குறைந்த பேட்டரி திறன் பெற்ற வேரியண்ட் 115 கிமீ என IDC சான்றிதழ் உள்ள நிலையில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 85-90 கிமீ வரை கிடைக்கின்றது. 3.7Kwh பேட்டரி பெற்ற மாடல் 150 கிமீ என IDC சான்றிதழ் உள்ள நிலையில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 120 கிமீ வரை கிடைக்கின்றது.…
ஜனவரி 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 42kWh மற்றும் 51.4kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்று முறையே 390 கிமீ முதல் 473 கிமீ வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் என ARAI மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Executive, Smart, Premium மற்றும் Excellence என நான்கு விதமான வேரியண்ட் பெற்று 8 விதமான ஒற்றை நிறங்கள், இரண்டு டூயல் டோன் நிறங்களுடன் இதில் மூன்று மேட் நிறங்களை பெற்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஓசன் ப்ளூ என்ற நிறத்தில் மேற்கூறை கருப்பு நிறத்தை கொண்டு டாப் வேரியண்டில் அகலமான பனரோமிக் சன்ரூஃப் பெற்றிருக்கும். Hyundai Creta Electric க்ரெட்டா எலெக்ட்ரிக் 51.4kWh பேட்டரி பெறுகின்ற லாங் ரேஞ்ச் மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 473 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என ARAI சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும்…
ஜனவரி 17 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் இந்தியாவின் பிரபலமான க்ரெட்டா அடிப்பட்டையிலான எலெக்ட்ரிக் காருக்கான முதல் டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக க்ரெட்டா இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலாக மாதந்தோறும் 12,000க்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவது குறிப்பிடதக்கதாகும். சமீபத்தில் இந்நிறுவனம் உள்நாட்டிலே பேட்டரி செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து பெற உள்ளதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே வெளிவந்த சில தகவல்களின் மூலம் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரில் 45 kWh மற்றும் 60 kWh பேட்டரி பேக் என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்த காரின் ரேஞ்ச் 300 கிமீ முதல் 550 கிமீ வெளிப்படுத்தலாம். இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முன்னோடியாக உள்ள டாடா மோட்டார்சின் கர்வ் இவி, எம்ஜி இசட்எஸ் இவி, விண்ட்சர் இவி உள்ளிட்ட மாடல்களுடன் மாருதியின்…