Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

தொடர்ந்து டீசர்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் பஜாஜ் ஆட்டோவின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பல்சர் ஆர்எஸ் 200 பைக் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூடுதலான பாடி கிராபிக்ஸ் மற்றும் முழுமையான புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது பெற்று பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், இசை கட்டுப்பாடு, மற்றும் கால், எஸ்எம்எஸ் அலர்ட் பல்வேறு வசதிகளை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்எஸ் 200 பைக்கில் 24 bhp பவரை வழங்கும் 199.5cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.7Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். டிசைன் அமைப்பில் பெரிதாக மேம்பாடுகள் இருக்குமா என்பது குறித்து எந்த தகவலும் தற்பொழுது இல்லை மற்றபடி வசதிகளில் சில மாறுபட்டதாக அமைந்திருக்கலாம்…

Read More

அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹீரோவின் 421சிசி என்ஜின் பெற்ற எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கான டிசைனை காப்பரிமை பெற்றுள்ள நிலையி்ல் அனேகமாக 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற EICMA 2024 டீசர் வெளியான பொழுது வெளிவந்த தகவலில் 421சிசி ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடல் ஆனது அதிகபட்சமாக பவர் 45 முதல் 48 hp வரை பவர் வெளிப்படுத்துவதுடன் டார்க் 45 Nm வரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளிவந்துள்ள காப்புரிமை தொடர்பான படத்தின் மூலம் ஸ்போக்டூ வீல் பெற்று இரட்டை பயன்பாட்டிற்கான டயருடன் முன்புறத்தில் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் பெற்று மிக குறைவான வகையிலான பேனலை பெற்று உயரமான தோற்றத்தினை கொண்டுள்ள நிலையில், மேல்நோக்கிய எக்ஸ்ஹாஸ்ட் கொண்டிருக்கின்றது. முழுமையான விபரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஹீரோ மோட்டோகார்ப்…

Read More

சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே பெற்று 2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் OBD2B இணக்கமான எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.1,19,481 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான மாடலாக தொடர்ந்து யூனிகார்ன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 2025 மாடலில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டு கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சர்வீஸ் டூ இண்டிகேட்டர், ஈகோ இண்டிகேட்டர் போன்ற பல தகவல்களைக் காட்டுகிறது. கூடுதலாக, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டைப் பெறுகிறது. சமீபத்தில் வெளியான எஸ்பி125, எஸ்பி160 மற்றும் ஆக்டிவா 125 போல டிஎஃப்டி கிளஸ்ட்டர் மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறவில்லை. 2025 யூனிகார்ன் மாடலில் HET நுட்பத்துடன் கூடிய OBD2B ஆதரவினை பெற்ற 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13 hp பவர், 14.58 NM டார்க் ஆனது 5,20rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.…

Read More

ஹோண்டா டூ வீல்ர் இந்தியா நிறுவனத்தின் புதிய 2025 ஆம் ஆண்டிற்கான SP160 பைக்கில் கூடுதலாக 4.2TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புதிய OBD2B விதிமுறைக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.1,21,951 முதல் ரூ.1,27,956 (எகஸ்ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி125 என இரண்டு மாடல்களில் இடம்பெற்றிருப்பதனை போன்றே புதிய 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. எஸ்பி160 பைக்கில் தொடர்ந்து HET நுட்பத்துடன் கூடிய OBD2B ஆதரவினை பெற்ற 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13 hp பவர், 14.8 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. முந்தைய மாடலை…

Read More

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி என மூன்று நிறுவனங்களும் எதிர்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள வாகனங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட அடிப்படையான தொழில்நுட்பங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்துட்டுள்ளன. இதில் மிட்சுபிஷி இணைவது குறித்தான இறுதி முடிவு மட்டும் ஜனவரி 2025 இறுதிக்குள் அறிவிக்க உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடுமையான சவால் இணைந்து வருகின்றன குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை சமாளிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் கூட்டமைப்பில் இணைய தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா மற்றும் சுசுகி இணைந்து பல்வேறு மாடல்களை ரீபேட்ஜ் இன்ஜினியரிங் மூலம் பகிர்ந்து கொண்டு அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிலையில் மூன்று ஜப்பானிய நிறுவனங்களும் இணைந்து மிகப்பெரிய மாற்றத்தை ஆட்டோமொபைல் துறையில் ஏற்படுத்த உள்ளன. அதே நேரத்தில் சீனாவின் போட்டியை சமாளிக்கவும் இந்த…

Read More

ஹோண்டா நிறுவனம் 125சிசி சந்தையில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய SP125 மாடலை ரூ.91,771 முதல் ரூ.1,00,284 வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், எல்இடி ஹெட்லைட், TFT கிளஸ்ட்டர் உள்ளிட்டவை முக்கிய மாற்றங்களாக அமைந்துள்ளது. 2025 Honda SP125 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரில் RoadSync Duo கனெக்ட்டிவிட்டி வசதி டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் பெற்றுள்ளது. இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், பேர்ல் சைரன் ப்ளூ, இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் என 5 விதமான நிறங்களை பெற்றுள்ள ஹோண்டா எஸ்பி125யில் தொடர்ந்து OBD2B ஆதரவினை பெற்ற 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பாடி…

Read More