Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவில் கியா வெளியிட்டுள்ள 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள சிரோஸ் எஸ்யூவி மாடலில் HTK, HTK (O), HTK+, HTX, HTX+, மற்றும் HTX (O) என மொத்தமாக 6 விதமான வேரியண்டுகளில் உள்ள முக்கிய வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம். பொதுவாக சிரோஸ் அனைத்து வேரியண்டிலும், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில்  6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், முன் பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், வேகத்தை உணரும் ஆட்டோ கதவு பூட்டுகள்,  முன் மற்றும் பின் அனைத்து இருக்கை 3-புள்ளி சீட் பெல்ட்கள் நினைவூட்டல், ISOFIX (பின் ஆங்கர்கள்) போன்றவை உள்ளது. Syros HTK ஆரம்ப நிலை சிரோஸ் HTK வேரியண்டில் 1.0 பெட்ரோல் உடன் 6 வேக மேனுவல் பெற்று, ஹாலஜென் ஹெட்லேம்ப் 15-இன்ச் ஸ்டீல் வீல் உடன் வீல் கவர் சுறா…

Read More

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள எஸ்யூவி சந்தையில் சற்று உயரமான வடிவமைப்பினை பெற்ற டிசைனில் வந்துள்ள கியா சிரோஸ் மாடலில் லெவல்-2 ADAS உட்பட 30 அங்குல டிரின்டி பனரோமிக் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யபட்டுள்ளது. சிரோஸ் அல்லது சைரா என்றும் அழைக்கப்படுகிற கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு தீவுக்கூட்டத்தின் பெயரினை சூட்டியுள்ளது. Kia Syros 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனை பெற்றுள்ள சிரோஸ் பவர் மற்றும் டார்க் விபரம் பின் வருமாறு;- 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 PS பவர், 178 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச்டிரான்ஸ்மிஷன் உள்ளது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள சிரோஸ் மாடலில் 116 PS பவர், 250 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல்…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டக்கார் ரேலி வெற்றியை கொண்டாடும் வகையில் எக்ஸ்பல்ஸ் 200 4V புரோ வேரியண்டின் அடிப்படையில் டக்கார் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் நாளை முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி விரைவில் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டக்கார் எடிசன் அறிமுகத்தை பற்றி நாம் முதன்முறையாக முன்பே செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டு டிசம்பர் 18, 2024 முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள ஒற்றை கோல்டுஃபிஷ் சில்வர் நிறத்தில் Dakar Edition பேட்ஜ், ஸ்டிக்கரிங், பாடி கிராபிக்ஸ் என அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. அடிப்படையில் சந்தையில் 200 4V புரோ வேரியண்டினை தழுவியதாகவே அமைந்துள்ளது.  ஆயில் கூல்டு 199.6cc கொண்ட 4 வால்வுகளை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 18.8 bhp பவர் 8,500rpm-ல், 17.35 Nm டார்க் 6,500rpm-லும் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. முன்புறத்தில் 276 mm…

Read More

ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் 2024 ஆம் ஆண்டிற்கான FIM உலக ரேலி சாம்பியன்ஷிப் பட்டத்தை ரோஸ் பிரான்ச் (FIM World Rally-Raid Championship W2RC 2024) வென்றதை குறிப்பிடும் வகையில் சிறப்பு எடிசனை வெளியிடும் வகையிலான டீசரை சமீபத்தில் ஹீரோ மோட்டோ ஸ்போர்ட்ஸ் வெளியிட்டு இருக்கின்றது இந்த மாடல் அனேகமாக ஜனவரி 3, 2025-ல் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் EICMA 2024ல் புதிய எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இந்த மாடல் விற்பனைக்கு வர அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்கள் தேவைப்படும் என்பதனால், அதற்கு முன்பாக இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சிறப்பு மாடலை டக்கார் எடிசன் என்ற பெயரில் அனேகமாக ஏற்கனவே சந்தையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200 4V புரோ மாடலின் அடிப்படையில் வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடல் ஆனது பாடி கிராபிக்ஸ் மாற்றங்களை தவிர கூடுதலான சில ஸ்டைலிங் மாற்றங்களை மட்டுமே பெற்று…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் 2025 மாடல் விலை அனேகமாக வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே ஸ்கூட்டரின் முழுமையான விபரங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது டீலர்களுக்கு வர துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜனவரி 1 முதல் இந்த இந்த மாடலை டெலிவரி வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதால் அதற்கு முன்பாக விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பை விட மிக ஸ்டைலிசான தோற்ற அமைப்பினை பெற்று பல்வேறு மேம்பாடுகளுடன் ரெட்ரோ அமைப்பினை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கின்ற  2025 டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-யில் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm-ல் வழங்குகின்றது. மூன்று விதமான வேரியண்டுகளில் சுமார் 5 விதமான நிறங்களை பெற்று டாப் ZX+ மாடலில் காப்பர் நிறத்துடன் எட்ரனல் வெள்ளை, ரீகல் பிளாக்…

Read More

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் மாடலான பஜாஜ் ஆட்டோவின் ஃப்ரீடம் 125 மாடலின் விலை ரூபாய் 10 ஆயிரம் முறை நடுத்தர வேரியண்டின் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே ஆரம்ப நிலை மாடலின் விலை 5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கூடுதலாக நடுத்தர மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது . மற்றபடி டாப் வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. ஃபீரிடம் 125 பைக்கில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 9.5 hp பவர் மற்றும் 9.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர் பாக்ஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. NG04 Disc LED – ₹ 1,09,997 NG04 Drum LED – ₹ 95,002 NG04 Drum only variant – ₹ 89,997 (ex-showroom) ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மொத்த விற்பனை எண்ணிக்கை 40,000…

Read More