ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய கோன் கிளாசிக் 350 ஆரம்ப விலை ரூபாய் 2.35 லட்சம் முதல் துவங்குகிறது. அடிப்படையில் கிளாசிக் 350 பைக்கினை தழுவியதாக பாபர் ரக ஸ்டைல் மாடலாக பல்வேறு கஷ்டமைஸ் மாற்றங்களை பெற்று மிக நேர்த்தியாக இளைய தலைமுறையினர் மற்றும் கஸ்டமைஸ் பிரியர்களுக்கு விரும்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. நான்கு விதமான நிறங்களை பெறுகின்ற இந்த மாடல் ஆனது கலர்ஃபுல்லான பாடி கிராபிக்ஸும் கூடுதலாக சேர்க்கப்பட்டு டாப் வேரியண்டில் சற்று மாறுபட்ட ராயல் என்ஃபீல்டு லோகோ கொடுக்கப்பட்டிருக்கின்றது. கோன் கிளாசிக் 350 பைக் மாடலிலும் வழக்கமான J-series 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்றாலும் பின்புறத்தில் 16 அங்குல வீலினை பாபர் பைக் பெறுகின்றது. இந்த…
Author: MR.Durai
மோட்டோவெர்ஸ் 2024ல் ஸ்கிராம் 411 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 பல்வேறு மாறுதல்களை பெற்று மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அடிப்படையான டிசைனில் மாற்றங்கள் இல்லை என்றாலும் எஞ்சின் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் முந்தைய மாடலை விட சக்தி வாய்ந்ததாகவும் அதே நேரத்தில் நெடுந்தொலைவு பயணம் மேற்கொள்வோர்களுக்கும் ஏற்றதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. Royal Enfield Scram 440 முந்தைய ஸ்கிராம் 411cc எஞ்சினுக்கு பதிலாக தற்பொழுது 443cc எஞ்சினாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக எஞ்சின் போர் அளவினை 3மிமீ உயர்த்திய காரணத்தால் 443சிசி எஞ்சினாக மாறி உள்ள புதிய ஸ்கிராம் 440 அதிகபட்சமாக 25.4hp பவரை 6,250rpm-லும், 34Nm டார்க் 4,000rpmல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மாற்றியமைக்கப்பட்டுள்ள கியர்பாக்ஸ் மூலம் இலகுவான கிளட்ச் பயன்பாடு மற்றும் புதிய எஞ்சின் சார்ந்த அதிர்வுகள், இறைச்சல் குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய 411சிசி மாடல் 24.3hp பவரினை 6,500rpmலும் மற்றும்…
இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனம் பிரீமியம் எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்து வருகின்ற C5 ஏர்கிராஸ் காரில் ஆரம்ப நிலை Feel மாடல் ரூபாய் 36 லட்சத்து 91 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நீக்கப்பட்டு டாப் வேரியண்டான சைன் மட்டும் தற்பொழுது விற்பனையில் கிடைக்க தொடங்கியுள்ளது. C5 ஏர்கிராஸ் காரில் இந்திய சந்தையில் லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 177 எச்பி பவர் மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும். 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது. ஆண்டு இறுதி சலுகைகளின் ஒரு பகுதியாக, சி5 ஏர்கிராஸ் காருக்கு ரூ. 1.75 லட்சம் வரை தள்ளுபடியை சிட்ரோயன் வழங்குகிறது. இருப்பினும், இவை வரையறுக்கப்பட்ட MY2023 மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும்.
மஹிந்திராவின் பிரபலமான எக்ஸ்யூவி 700 மாடல் ஆனது ரூபாய் 30,000 முதல் 50,000 வரை வேரியண்ட் வாரியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பாக ஆரம்ப நிலை வேரியண்டுகளில் பெரிதாக விலை உயர்வு இல்லை என்றாலும் டாப் வேரியண்டில் விலை உயர்வு உள்ளது. விலை உயர்வைத் தவிர மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. எஞ்சின் ஆப்ஷனிலும் எந்த மாற்றமும் கிடையாது. சில மாதங்களுக்கு முன்பாக 2.20 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி700 காரில் 197hp பவர் மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுதும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. மேனுவல் மாடல் 153 hp பவர், 420 Nm டார்க் உடன் அடுத்து 6 வேக ஆட்டோமேட்டிக் 182 hp பவர், 450 Nm டார்க் ஆனது 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என இருவிதமான பவர் ஆப்ஷனை கொண்டுள்ளது.…
நவம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா e ஸ்கூட்டர் மாடல் தொடர்பாக வந்துள்ள டீசரில் 104 கிமீ ரேஞ்ச் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது இரண்டு நீக்கும் வகையிலான பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை பெறுவது உறுதியாகியுள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் கிடைக்கின்ற CUV e: எலெகட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் வரவுள்ள மாடல் என ஏறக்குறைய தற்பொழுது வரை ஹோண்டா வெளியிட்டுள்ள டீசர்கள் மூலம் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஐரோப்பா உட்பட இங்கிலாந்தில் 2x Swap 48V / 1.3kWh பேட்டரி பேக்கினை பெற்று அதிகபட்சமாக உண்மையான ரேஞ்ச் 70 கிமீ வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டு விற்பனையில் உள்ள நிலையில் இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடலில் 7 அங்குல கிளஸ்ட்டரில் 104 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் 100 % சார்ஜிங்கில் என தெரிய வந்திருக்கின்றது. ஒரு வேளை இந்திய சந்தைக்கான மாடலின் பேட்டரி திறன் கூடுதலாக இருக்கலாம்…
குறைந்த உயரம் உள்ளவர்களும் ஓட்டும் வகையில் பல்வேறு மாறுதல்களுடன் மிகச் சிறப்பான ஸ்டைலிங் மற்றும் நிறங்கள் என கவர்ச்சிகரமாக வந்துள்ள ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) பாபர் விற்பனைக்கு நவம்பர் 23ஆம் தேதி மோட்டோவெர்ஸ் 2024 அரங்கில் விலை அறிவிக்கப்பட உள்ளது. அடிப்படையில் கிளாசிக் 350 பைக்கில் இருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்கள் பெற்றிருந்தாலும் கூட ஸ்டைலிங் சார்ந்த விஷயங்களில் மட்டுமல்லாமல் சில மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் கவனமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக ரேவ் ரெட், டிரிப் டீல், பர்பிள் ஹெஸ், மற்றும் ஷேக் பிளாக் என நான்கு வித வண்ணங்களை பெற்று மிக நுணுக்கமான கஸ்டமைஸ் பாடி கிராபிக்ஸ் நிறத்திற்கு ஏற்ப மாறுபட்டுள்ளது. கிளாசிக் 350 vs கோன் கிளாசிக் 350 வித்தியாசங்கள் என்ன..? இரண்டு பைக்கிற்கும் இடையில் இருக்கை உயரம் மாறுபட்டுள்ளது. குறிப்பாக கிளாசிக் 350 மாடல் 805 மிமீ ஆக…