புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 மோட்டார்சைக்கி்ள் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 Royal Enfield Classic 650 என்ஃபீல்டின் 650cc என்ஜின் கொண்ட ஆறாவது மாடலாகவும், விற்பனைக்கு வந்துள்ள இரண்டாவது கிளாசிக் ஸ்டைல் மாடலாகவும் கிளாசிக் 650 தொடர்ந்து தனது ரெட்ரோ பாரம்பரியத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. குறிப்பாக பிளாக்கிங் க்ரோம், டீல், பர்ன்டிங் தோர்ப் ப்ளூ, மற்றும் வல்லம் ரெட் என 4 விதமான நிறங்களை பெறுகின்றது. இரண்டு எக்ஸ்ஹாஸ்ட் பெற்ற 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான நுட்பவிபரங்கள் மற்ற 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட கூடுதல் எடை பெற்ற மாடலாக அதிகபட்ச எடை 243 கிலோ பெற்று நீளம் 2318 mm, அகலம், 892…
Author: MR.Durai
இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் பல்வேறு பிரீமியம் பைக்குகள் மற்றும் எண்டூரா, மோட்டோகிராஸ் மற்றும் சிறுவர்களுக்கு என ஆறு விதமான டர்ட் ரூ.4.75 லட்சம் முதல் ரூ. 12.96 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 50சிசி முதல் 450சிசி வரையிலான எஞ்சின் பிரிவில் கிடைக்க உள்ளது. KTM 50 SX, KTM 65 SX மற்றும் KTM 85 SX என மூன்று மாடல்களும் இரண்டு ஸ்ட்ரோக் பெற்ற 50சிசி பைக்குகளாகும். இவை சிறுவர்களுக்கு ஏற்ற ஆஃப் ரோடு பிரிவில் வந்துள்ளது. ரூ.4.75 லட்சம் விலையில் KTM 50 SX மாடலில் ஒற்றை சிலிண்டர் 49.9cc இரண்டு ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டு 5.4bhp மற்றும் 5.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஒற்றை கியர் தானியங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ரூ.5.47 KTM 65 X பைக்கில் 64.9cc சிங்கிள்-சிலிண்டர் டூ-ஸ்ட்ரோக் எஞ்சினை பெற்று 10.6bhp பவரை வழங்கி ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரூ.6.69…
மஹிந்திராவின் தார் ராக்ஸ், XUV 3XO, XUV 400 EV என மூன்று கார்களுக்கான பாதுகாப்பு தரம் குறித்த பாரத் கிராஷ் டெஸ்ட் (BNCAP) மூலம் சோதனை செய்யப்பட்டதில் ஐந்து நட்சத்திர ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது. தார் ராக்ஸ் எஸ்யூவி சமீபத்தில் அறிமுகமான ஐந்து கதவுகளை கொண்ட தார் மிக சிறப்பான வரியில் வரவேற்பினை பெற்று இருக்கின்ற நிலையில் பாரத் கிராஸ் டெஸ்டில் இந்த மாடலின் ஆரம்ப நிலை MX3 மற்றும் AX5L என இரண்டு வேரியண்டும் சோதனை செய்யப்பட்டதில் மிகச் சிறப்பான வகையில் பாதுகாப்பு தரத்தினை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக பெற வேண்டிய 32 புள்ளிகளுக்கு 31.09 புள்ளிகளை பெற்றிருக்கின்றது. அதேபோல குழந்தைகள் பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. குறிப்பாக பெறவேண்டிய 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளை கொண்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் உடன் பயன்படுத்தவருக்காக பாதுகாப்பில் கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பும்…
இந்தியாவில் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் தற்பொழுது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்யும் வகையில் மீண்டும் ஒரு டீசரை வெளியிட்டு இருக்கின்றது வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஆக்டிவா எலக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு வேகமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்க துவங்கலாம். குறிப்பாக வரவுள்ள மாடல் ஆக்டிவா 110cc இணையான திறனை வெளிப்படுத்தம் என ஏற்கனவே இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளதால் அநேகமாக ரேஞ்ச் 90 முதல் 120 கிலோமீட்டர் வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும், நிலையில் விலையும் சவாலாக ரூபாய் 1,20,000 முதல் தூங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்ட டீசரில் எல்இடி ஹெட்லைட் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகவும் அதே நேரத்தில் மற்றபடி பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்திய சந்தைக்கு ஹோண்டா நிறுவனம் முதற்கட்டமாக இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே உறுதி…
இந்தியாவில் கியா நிறுவனத்தின் அடுத்த எஸ்யூவி காருக்கு சிரோஸ் (Syros) என்ற பெயர் சூட்டப்பட்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு ஜனவரி 2025 முதல் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் மிகு தாராளமான இட வசதியை பெறும் என்பதில் உறுதியாக தெரிவிக்கப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில் விலையும் சவாலாக துவங்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் தற்பொழுது சொனெட் மற்றும் செல்டோஸ் என இரண்டு எஸ்யூவி கார்களுக்கு இடையில் இந்த மாடல் அறிமுகப்படுத்தும் என கூறப்படுவதனால் அநேகமாக விலை ரூபாய் 10 லட்சத்திற்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடல் பல்வேறு லைஃப் ஸ்டைல் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகின்ற நிலையில் எஞ்சின் தொடர்பாக எந்த விபரமும் வெளியிடப்படவில்லை மேலும் இந்த மாடல் ICE மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் வெர்சனிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முழுமையான விவரங்கள் வரும் வாரங்களில் தெரியவரும். மேலும், விலை தொடர்பான அறிவிப்பு 2025 பாரத் மொபிலிட்டி…
ரூ.6.79 லட்சம் முதல் ரூ. 10.14 லட்சம் வரையிலான விலையில் நான்காம் தலைமுறை 2025 ஆம் ஆண்டிற்கான மாருதி சுசூகி டிசையர் செடான் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் உடனடியாக டெலிவரி துவங்கப்பட உள்ளது. புதிய டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் என இரண்டும் முற்றிலும் மாறுபட்ட டிசைன் அமைப்பினை பெற்று மிக பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள டிசையரில் முன்பக்கத்தில் கிடைமட்டமான கிரிலுடன் மிக நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ள க்ரோம் பட்டை, எல்இடி ஹெட்லைட், கீழ்பகுதியில் பம்பரில் உள்ள ஃபோக் லேம்ப் என மிக நேர்த்தியாக உள்ளது. பக்கவாட்டில் மிக நேர்த்தியான சி பில்லர் பகுதியில் உள்ள ரூஃப் ஸ்லோப்பிங் உடன் மேற்கூறையில் சிங்கிள் பேன் சன்ரூஃப், ஷார்க் ஃபின் ஆண்டனா பெற்று 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீலை பெற்றுள்ளது. பின்புறத்தில் பூட்லிப் ஸ்பாய்லருடன் மிக நேர்த்தியான எல்இடி டெயில்லைட் பெற்றுள்ளது. இன்டீரியரில் டிசையர்…