Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வரும் டிசம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹோண்டா அமேஸ் காரின் டிசைன் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், வெளிப்புற தோற்றம் மற்றும் டிசைன் மாற்றங்கள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் விற்பனையில் கிடைக்கின்ற சிவிக் காரை அடிப்படையாக கொண்டாலும் மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. புதிய அமேஸ் காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டும் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமாக கிடைக்க உள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை இந்த முறை எதிர்பார்க்கலாம். தாய்லாந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள டிசைனில் மிக நேர்த்தியான தேன்கூடு கிரில் வழங்கப்பட்டு எல்இடி புராஜெக்டர் விளக்கு உள்ளது. மற்றபடி பக்கவாட்டு தோற்றத்தில் தற்பொழுது உள்ள மாடலில் இருந்து சிறிய மாறுபாடுகளுடன்,…

Read More

ஓபென் நிறுவனத்தின் புதிய ரோர் EZ எலெக்ட்ரிக் பைக் மாடல் ரூ.89,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. ரோர் இசட் மாடலில்  LFP நுட்பத்தை பயன்படுத்தி 2.6kWh, 3.4kWh மற்றும் 4.4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. அனைத்து பேட்டரி விருப்பங்களும் 7.5kW மோட்டார் மூலம் 52Nm டார்க் வெளியீட்டை வழங்கும் நிலையில் Rorr EZ மாடல் அதிகபட்சமாக 95kmph வேகத்தில் பயணிக்கவும், பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தில் 3.3 வினாடிகளில்  எட்ட முடியும். மற்றபடி, இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடலில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் கொண்ட 17-இன்ச் அலாய் வீல்களை பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 4.4Kwh பேட்டரி கொண்ட டாப் வேரியண்டின் IDC வழங்கியுள்ள ரேஞ்ச் 175 கிமீ  ஆக உள்ள நிலையில் இந்நிறுவனம் வழங்கியுள்ள உண்மையான ரேஞ்ச் ஈக்கோ…

Read More

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் Watts AHEAD என டீசரில் குறிப்பிட்டு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. மாடலின் பெயர் மற்றும் முக்கிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் குறிப்பாக ஏற்கனவே சில தகவல்களை ஹோண்டா வெளியிட்டு இருந்த நிலையில் தற்பொழுது வரவுள்ள மாடல் அனேகமாக ஆக்டிவா பிராண்டிலேயே எலக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இந்திய சந்தைக்கு இரண்டு மாடல்களை ஆரம்ப கட்டத்தில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டு இருக்கின்ற நிலையில் ஒன்று பேட்டரியை ஸ்வாப் செய்யும் வகையிலான நுட்பத்தை கொண்ட மாடல் மற்றொன்று பேட்டரி நீக்க இயலாத வகையிலான ஃபிக்சட் மாடலாக அமைந்திருக்கும் இவற்றில் இரண்டையும் இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது. மேலும் இவற்றின் ரேஞ்ச் அனேகமாக 100 முதல் 150 கிலோமீட்டர் நிகழ் நேரத்தில் வெளிப்படுத்தும்…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய அறிமுகம் அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் 421 மாடல் வருகின்ற 2025 ஆம் ஆண்டின் மத்தியில் அல்லது துவக்க மாதங்களில் இந்த மாதங்களில் அறிமுகம் குறித்தான முக்கிய விபரங்கள் மற்றும் முழுமையாக காட்சிப்படுத்த 2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் எதிர்பார்க்கலாம் அதற்கு முன்பாக தற்பொழுது டீசர் EICMA 2024ல் வெளியாகி இருக்கின்றது. குறிப்பாக ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் டேக்கர் ரேலியில் தொடர்ந்து மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருகின்ற நிலையில் இந்த ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து தற்பொழுது 250cc எக்ஸ்ட்ரீம் , கரீஸ்மா XMR , எக்ஸ்பல்ஸ் 210 போன்ற மாடல்களை EICMAவில் காட்சிப்படுத்தியுள்ளது. வெளியாகியுள்ள டீசரில் 421சிசி ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடல் ஆனது அதிகபட்சமாக பவர் 45 முதல் 48 ஹெச்பி வரை பவர் வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் டார்க் 45 Nm வரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த…

Read More

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புதிய கைலாக் (Kylaq) காம்பேக்ட் எஸ்யூவி காரின் அறிமுகத்தை இன்று மேற்கொள்ள உள்ளது. விற்பனைக்கு ஜனவரி 2025 இல் பாரத் மொபிலிட்டி ஷோவில் மூலம் அறிமுகம் செய்ய உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்ற MQB A0 IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஏற்கனவே ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா மற்றும் குஷாக், அதேபோல ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டஸ் மற்றும் டைகன் போன்ற மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கைலாக் மாடலின் 4 மீட்டருக்கு குறைவாக அமைந்துள்ளதால் மிக கடுமையான போட்டியாளர்களை இந்திய சந்தையில் எதிர்கொள்ளுகின்றது. தற்பொழுது வரை வெளிவந்த விபரங்களின் படி ஒற்றை 115 PS மற்றும் 178 Nm டார்க் வெளிப்படுத்தும் 999சிசி டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. 3,995மிமீ நீளம், 2,566மிமீ வீல்பேஸ், மற்றும் 189மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ள…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற வீடா எலக்ட்ரிக் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வீடா Z மாடல் இந்தியா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சந்தைகளுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வீடா Z எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் கொடுக்கப்பட்டிருக்கின்ற பேட்டரி 2.2Kwh முதல் 4.4Kwh வரை வழங்கப்பட்டு இது ஸ்வாப்பிங் முறையில் மிக இலகுவாக மாற்றிக் கொள்ளும் முறை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலகுவாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலின் ரேஞ்ச் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விபரங்கள் தற்பொழுது வெளியிடப்படவில்லை, உடனடியாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும், வருகின்ற 2025 ஆம் ஆண்டில் தொடக்க மாதங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இந்த மாடல் விற்பனைக்கு வெளியாகியுள்ள நிலையில் இந்திய சந்தையிலும் கிடைக்க உள்ளது. ஃபேமிலி சாய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போல் அமைந்திருக்கின்ற இந்த வீடா இசட் மாடலை பொருத்தவரை பல்வேறு பாகங்கள் விற்பனையில் உள்ள…

Read More