பொதுப் போக்குவரத்து சாலைகளில் பயணிக்ககூடிய அட்வென்ச்சர் டர்ட் பைக் மாடலை ஹஸ்குவர்னா பாய்னியர் என்ற பெயரில் 5.5kwh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு சுமார் 137 கிமீ ரேஞ்ச் (WMTC) வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 பிப்ரவரி முதல் சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பாய்னியர் டர்ட் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 5.5 kwh பேட்டரி மூலம் 11 kW மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 19.2 kW வரை, 12000 rpm-லும், டார்க் 37.6NM வரை வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ ஆக வரையறுக்கப்பட்டு பைக்கின் எடை 112 கிலோ ஆக உள்ளது. பேட்டரியை நீக்கும் வகையில் வழங்கப்பட்டாலும் ஸ்பேனர் மூலம் 10 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சார்ஜிங் நேரம் (0-100%) 660 W சார்ஜர் மூலம் 8 மணி நேரமும், சார்ஜிங் நேரம் (0-100%) விருப்பமான 3,3 kW பவர் சார்ஜர்…
Author: MR.Durai
2024 EICMA கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நடுத்தர சந்தைக்கான புதிய அட்வென்ச்சர் ரக மாடல் எக்ஸ்பல்ஸ் 440 மற்றும் புதிய எஞ்சின் பெற்ற எக்ஸ்பல்ஸ் 210 என இரு மாடல்களும் அறிமுகமாகிறது. இதுதவிர, மேவ்ரிக் 440 அடிப்படையில் ஸ்கிராம்பளர் 440, மற்றும் ஸ்போர்ட்டிவ் XTunt 2.5R , ஃபேரிங் ஸ்டைல் புதிய கரீஸ்மா XMR ஆகிய மாடல்களும் இன்றைக்கு வெளியாக உள்ளது. ஹீரோ வீடா எலெகட்ரிக் பிரிவின் சார்பாக லினக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான ஏக்ரோ என இரண்டு டர்ட் பைக்கினை வெளியிட உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் எக்ஸ்பல்ஸ் 210 மாடலில் புதிய கரீஸ்மா XMR எஞ்சினை பெறுவது உறுதியாகியுள்ளது. TFT கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சத்துடன் புதிய 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில்…
ராயல் என்ஃபீல்டின் பிளேயிங் பிளே எலெக்ட்ரிக் மூலம் C6 முதல் மாடலாக வரவுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்கிராம்பளர் வகையில் S6 மாடல் டீசராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மாடல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. வழக்கமான ஃபோர்க்கிற்கு பதிலாக வித்தியாசமான கிரிடெர் ஃபோர்க் பயன்படுத்தப்படும் FF C6 போல அல்லாமல் ஸ்கிராம்பளர் வகையாக வரவுள்ள FF S6 மாடலின் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் ஸ்போக்டூ வீல், செயின் டிரைவ், TFT கிளஸ்டர் உடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் பெற் உள்ளது. தற்பொழுது வரை பேட்டரி தொடர்பான தகவல்கள் ரேஞ்ச் மற்றும் நுட்ப விபரங்கள் போன்ற எவ்விதமான அடிப்படையான தொழில்நுட்பம் சார்ந்த விபரங்களை ராயல் என்ஃபீல்டு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபிளையிங் ஃபிளே சி6 மாடல் 2025 ஆம் ஆண்டில் இறுதி அல்லது 2026 ஆம்…
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஃபிளையிங் ஃபிளே (Flying Flea) எலெகட்ரிக் பிராண்டின் கீழ் முதல் C6 என்ற பெயரில் துவக்க நிலை சந்தைக்கு நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் நுட்பவிபரம் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. எலெகட்ரிக் வாகனத்தின் அறிமுகத்தின் பேசிய ராயல் என்ஃபீல்டு தலைவர் சித்தார்த் லால் பேசுகையில், எலெக்ட்ரிக் டூ வீலர்கள் குறிப்பிட்ட அளவிலான மிக குறைந்த ரேஞ்ச் மட்டும் வெளிப்படுத்தும் சந்தைக்கு ஏற்ப மட்டுமே தயாரிக்க முடியும், மற்றபடி, நீண்ட தொலைவுக்கு சாத்தியமில்லை அல்லது குறிப்பிட்ட தொலைவுக்கு ஒருமுறை சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். எனவே, தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு ICE மாடல்களை தயாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். C6 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலின் ஃபிரேம் ஃபோர்ஜ்டூ அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, முன்புறத்தில் கிரிடெர் ஃபோர்க் (Grider Fork) உள்ளது. எல்இடி லைட்டிங்கையும் மற்றும் இலகுவான எடையை வழங்கும் magnesium கொண்டு நேர்த்தியான பேட்டரி…
இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் eVX முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலுக்கு இவிட்டாரா என பெயரிடப்பட்டு 49kwh அல்லது 61kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் ஆனது வழங்கப்படுகின்றது சர்வதேச அளவில் ஐரோப்ப சந்தையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுசூகியின் Heartect-e பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலில் FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டார் உள்ளது. BYD…
வரும் நவம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகின்ற விழாவில் மஹிந்திராவின் INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட BE 6e மற்றும் XEV 9e என இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. XEV மற்றும் BE எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ள XEV மற்றும் BE என இரண்டு பிராண்டுகளிலும் தலா ஒன்று என இரண்டு மாடல்கள் வரவுள்ளது. இதில் முதல் மாடலாக வரவுள்ள XEV 9e ஏற்கனவே கான்செப்ட் நிலையில் XUV.e9 என அறியப்பட்டு வந்தது. அடுத்தப்படியாக, BE (Born Electric) என்ற பிராண்டில் முன்பாக BE.05 என காட்சிப்படுத்திய கான்செப்ட் ரக மாடல் விற்பனைக்கு BE 6e என வெளிடப்பட உள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.20 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது. மஹிந்திரா XEV 9e மிகவும் தாராளமான இடவசதியுடன் பல்வேறு ஸ்டைலிஷான அம்சங்களை பெற்ற XEV 9e…