உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் Flying Flea எலெக்ட்ரிக் பைக் இன்றைக்கு EICMA அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இந்த எலக்ட்ரிக் பைக் வடிவம் தொடர்பான காப்புரிமை படங்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது சோதனையோட்டத்தில் ஈடுபடுகின்ற படமும் வெளியாகி இருக்கின்றது குறிப்பாக வழக்கமாக பயன்படுத்தப்படுகின்ற டெலஸ்கோபிக் மற்றும் அப்சைட் டவுன் ஃபோர்க் பயன்படுத்தப்படாமல் வித்தியாசமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பு கிரிடெர் ஃபோர்க் (Grider Fork) உள்ளது. மற்றபடி மற்ற என்ஃபீல்டு பைக் களில் உள்ளதை போன்ற வட்ட வடிவ எல்இடி லைட் கிளஸ்டர் போன்றவை பெற்று வழக்கமான டர்ன் இன்டிகேட்டர் விளக்குகளை கொண்டிருக்கின்றது. கால்களுக்கு பிரேக் லிவர் மற்றும் கிளட்ச் லிவர் எதுவும் கொடுக்கப்படவில்லை, அதற்கு பதிலாக மாற்ற எலெக்ட்ரிக் பைக் போலவே சிங்கிள் ஸ்பீடு மோட்டார் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும். தற்பொழுது உரை இந்த…
Author: MR.Durai
மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற டிசையர் காரின் 2025 மாடல் நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் நாளை நவம்பர் 4 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ளது. முன்பே டீலர்களை வந்தடைய துவங்கியுள்ளதால் விலை அறிவிக்கப்பட்ட மறுநாளே டெலிவரி துவங்கப்பட உள்ளது. டிசையருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்பட உள்ள நிலையில் டீலர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவினை மேற்கொள்ளலாம். சமீபத்தில் வெளியான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றிருக்கின்ற 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனில் பவர் 69bhp மற்றும் 102Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட உள்ளது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என…
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 125cc சந்தையில் ஸ்போர்டிவ் ரைடுக்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற 2025 பல்சர் N125 பைக் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 Bajaj Pulsar N125 துவக்கநிலை சந்தையில் ஸ்போர்ட்டிவ் அனுபவத்தினை பெறும் வகையில் இளம் வயதினருக்கு ஏற்ற மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் ஆட்டோவின் பல்சர் என்125 மாடலில் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அமைப்புடன் 7 விதமான நிறங்கள் வழங்கப்பட்டு எல்இடி ப்ளூடூத் டிஸ்க் மற்றும் எல்இடி டிஸ்க் என இருவிதமான வேரியண்டை கொண்டதாக அமைந்துள்ளது. E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் ISG உடன் தயாரிக்கப்பட்டுள்ள புதிய 124.58cc என்ஜின் இரண்டு வால்வு அதிகபட்சமாக 8,500rpm-ல் 12 bhp பவர், 11 NM டார்க் ஆனது 6,000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. டைமன்ட் டைப் ஃபிரேம் கொண்டுள்ள பல்சர்…
இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஆக்டிவா பெயரில் 110சிசி ICE மாடலுக்கு இணையான செயல்திறன் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாகவும் விளங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. தற்பொழுது சந்தையில் உள்ள 110cc பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும், அதே நேரத்தில் போட்டியாளர்களான ஓலா, ஏதெர், டிவிஎஸ், பஜாஜ் சேட்டக், வீடா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுடன் நிலையான பேட்டரி (Fixed Battery Tech) கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹோண்டா இந்திய சந்தையின் துவக்கநிலை மற்றும் அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் சந்தையில் கூட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்காத நிலையில், எலெக்ட்ரிக் வாகன சந்தையில் உள்ள போட்டியாளர்கள் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை வழங்கி வரும் நிலையில் ஆக்டிவா எலெகட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கண்டிப்பாக பெற்றிருக்கும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வளரும் நாடுகளுக்கு உருவாக்கப்பட்டு வருகின்ற ஆக்டிவா…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் லினக்ஸ் மற்றும் ஏக்ரோ என இரு டர்ட் பைக் கான்செப்ட் கடந்த முறை EICMA அரங்கில் காட்சிக்கு வந்த நிலையில் தற்பொழுது உற்பத்தி நிலை மாடல் நவம்பர் 4ஆம் தேதி EICMA கண்காட்சியில் வெளியிடப்பட்டு விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் ஹீரோ வீடா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள டீசர் மூலம் புதிய டர்ட் அட்வென்ச்சர் மாடல்கள் விற்பனைக்கு வரக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மிக சுவாரஸ்யமான லினக்ஸ் மாடல் 3kw பேட்டரியுடன் 15kW (20.4hp) பவரை வெளிப்படுத்தலாம். அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் பெற்று முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 18 அங்குல வீல் பெறக்கூடும். கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட 3 முதல் 9 வயது சிறுவர்களுக்கான வீடா ஏக்ரோ எலெக்ட்ரிக் டர்ட் மாடலில் குறைந்த திறன் பேட்டரி மூலம் குழந்தையின் உயரத்திற்கு ஏற்ப இலகுவாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான…
பூமியில் இருந்து நிலவுக்கு பயணித்து திரும்பிய தொலைவுக்கு இனையாக சுமார் 8,00,000 கிமீ சோதனை ஓட்டத்தின் மூலம் நிறைவு செய்துள்ளதாக ஸ்கோடா தெரிவித்துள்ள புதிய கைலாக் காம்பேக்ட் எஸ்யூவி வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு ஜனவரி 2025-ல் வெளியிடப்பட உள்ளது. கடும் போட்டிகளுக்கு இடையே நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட சந்தைக்கான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சார்பாக இந்தியாவிலே உருவாக்கப்பட்ட MQB A0 IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற புதிய கைலாக் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். MQB A0 IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடல்களான குஷாக், ஸ்லாவியா இதன் மற்ற மாடல்களான ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் டைகன் ஆகியவை ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கைலாக் தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளது. 115 PS மற்றும் 178 Nm டார்க் வெளிப்படுத்தும் 999சிசி டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக…