இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eVX கான்செப்ட் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உற்பத்தி நிலை மாடல் அனேகமாக நவம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் விற்பனைக்கு விலை அறிவிக்கப்படலாம். அதனை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் அர்பன் எலெக்ட்ரிக் காரை தனது மாடலாக விற்பனைக்கு இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் இறுதி மற்றும் சர்வதேச சந்தைகளில் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டொயோட்டா, சுசூகி மற்றும் டைகட்சூ இணைந்து தயாரிக்கும் 27PL எலெக்ட்ரிக் ஸ்டேக்போர்டு ஆர்க்கிடெக்சர் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட மிக நேர்த்தியாக இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வளரும் நாடுகளுக்கும் அதே நேரத்தில் சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டு செல்வதற்கும் இந்த…
Author: MR.Durai
இந்தியாவில் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதான மேம்படுத்தப்பட்ட டைகர் 1200 மாடல் விற்பனைக்கு ரூபாய் 19.39 லட்சம் முதல் ரூபாய் 21.28 லட்சம் வரை வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட சிறப்பான வகையில் அதிர்வுகள் குறைந்த என்ஜின் மற்றும் அமரும் இருக்கைகள் போன்றவை எல்லாம் மேம்படுத்தப்பட்டதாக உள்ளது. 1,160cc இன்ஜின் தொடர்ந்து 9,000rpm-ல் 150hp பவர் மற்றும் 7,000rpm-ல் 130Nm வரை டார்க் உற்பத்தி செய்கிறது, ஆனால் இந்த முறை உள்ளிருக்கும் எஞ்சின் பாகங்களான கிரான்க்ஸாஃப்ட், ஆல்டர்னேட்டர் மற்றும் பேலன்சர் ஷாஃப்ட் ஆகியவற்றில் மாற்றங்களை பெறுகிறது. புதிய மாடலை விட கிளட்ச் மிக இலகுவாக மாற்றும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வண்டி நிறுத்தும் பொழுதும் இலகுவாக கிரவுண்ட் கிளியரன்ஸை கையாளும் வகையில் சஸ்பென்ஷன் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது மேலும், ஃபுட்பெக் நிலையை மாற்றுவதன் மூலம் ஜிடி ப்ரோ மற்றும் ஜிடி எக்ஸ்ப்ளோரரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்னரின் செய்யும்பொழுது மிக…
நவம்பர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டிசையர் காரின் தோற்ற அமைப்பு மற்றும் முக்கிய விபரங்கள் ஆனது கசிந்துள்ளது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது இந்த கார்கள் டீலர்ளுக்கு வர துவங்கியுள்ளதால் உடனடியாக டெலிவரியும் 11ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்பட உள்ளது. ஸ்விஃப்ட் காரில் இருந்து மாறுபட்ட தோற்ற அமைப்பினை முன்புறத்தில் வெளிப்படுத்தும் இந்த மாடலானது மிகவும் நேர்த்தியான மற்றும் அதே நேரத்தில் பிரீமியமான எல்இடி விளக்குகளை கொண்டிருக்கின்றது. மேலும், இதனுடைய ஸ்டைலிங் எலமெண்ட்ஸ் என பல்வேறு மாறுபாடுகளை கொண்டிருப்பதனால் மிகவும் ஸ்டைலிஷ் ஆக ஒரு ஸ்போட்டிவ்வான தோற்றத்தை பெறுகின்றது. பின்புறத்தில் இந்த மாடலில் மிக நேர்த்தியான எல்இடி டெயில் விளக்குகள் ஆனது Y வடிவில் கொடுக்கப்பட்டிருக்கின்றது, குரோம் ஸ்டிரிப் இணைக்கப்பட்டு, மேற்கூரையில் சார்ப் ஃபின் ஆண்டனா கொடுக்கப்பட்டிருக்கின்றது. இன்டீரியரில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் காரை போலவே அமைந்திருந்தாலும் சிறிய அளவிலான மாறுதல்கள் மற்றும்…
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய இன்டர்செப்டார் பியர் 650 ஸ்கிராம்பளர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் நவம்பர் 5ஆம் தேதி EICMA 2024ல் விலை அறிவிக்கப்பட்டு உடனடியாக டெலிவரி தொடங்கப்பட உள்ளது. Royal Enfield Interceptor Bear 650 என்ஃபீல்டு நிறுவனத்தின் 650சிசி இன்ஜின் பெற்ற பிரிவில் ஐந்தாவது மாடலாக வந்துள்ள புதிய பியர் 650 ஸ்கிராம்பளர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு கூடுதலாக 4.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இன்டர்செப்டார் உட்பட மற்ற 650சிசி பைக்குகளில் இருந்து வித்தியாசத்தை வழங்கும் வகையில் இரண்டு புகைப்போக்கிகளுக்கு பதிலாக ஒற்றை புகைப்போக்கி கொடுக்கப்பட்ட காரணத்தால் டார்க் உயர்ந்துள்ளது. 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 184 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற பியர் 650 பைக்கின் எடை 216 கிலோ கிராம் கொண்டு முன்பக்கத்தில்…
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 125சிசி சந்தையில் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி, பல்சர் 125, பல்சர் N125 மற்றும் பல்சர் NS125 என நான்கு மாடல்களின் நுட்ப விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம். 125சிசி பைக் சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிக சிறப்பான வளர்ச்சியை தற்போது பதிவு செய்து வருகின்றது குறிப்பாக இந்நிறுவனத்தின் பல்சர் பைக் மற்றும் சிஎன்ஜி பைக்குகள் அமோகமான வரவேற்பினை பெற்று வருகின்றது. குறிப்பாக ஹீரோ மற்றும் ஹோண்டா என இரண்டு நிறுவனங்களுக்கும் மிகுந்த சவாலினை இந்த பிரிவில் ஏற்படுத்தி வருகின்றது. Bajaj Freedom 125 CNG உலகின் முதல் சிஎன்ஜி பைக் என அறியப்படுகின்ற பஜாஜ் ஆட்டோவின் ஃபிரீடம் 125 பைக் மாடல் 2 கிலோ சிஎன்ஜி மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் கொண்டு மொத்தமாக சுமார் 330 கிமீ பயண தொலைவினை வழங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 கிலோ சிஎன்ஜி…
பொது போக்குவரத்து சாலைகளிலும், ஆஃப் ரோடு சாகசங்களுக்கும் ஏற்ற KLX 230 மாடலை கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலைப் பற்றி முழுமையான விவரங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனம் ஏற்கனவே பல்வேறு ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. அவையெல்லாம் பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படாமல் குறிப்பிட்ட மூடப்பட்ட டிராக்குளில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. கேஎல்எக்ஸ் 230 மோட்டார்சைக்கிளில் 2-வால்வுகளுடன், 233cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 18.1hp பவர் 8,000rpm-லும் 18.3Nm டார்க் ஆனது 6,400rpmல் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. லைம் க்ரீன் மற்றும் கிரே என இரு நிறங்களை பெற்று முன்பக்கத்தில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டு 240 மிமீ பயணிக்கும் அளவுடன் 21 அங்குல…