Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஆக்டிவா எலெக்ட்ரிக் எப்படி இருக்கும் தெரியுமா..? ஹோண்டா சொன்ன தகவல்.!

by MR.Durai
1 November 2024, 9:12 pm
in Bike News
0
ShareTweetSend

honda activa e scooter concept sc.e

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஆக்டிவா பெயரில் 110சிசி ICE மாடலுக்கு இணையான செயல்திறன் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாகவும் விளங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.

தற்பொழுது சந்தையில் உள்ள 110cc பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும், அதே நேரத்தில் போட்டியாளர்களான ஓலா, ஏதெர், டிவிஎஸ், பஜாஜ் சேட்டக், வீடா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுடன் நிலையான பேட்டரி (Fixed Battery Tech) கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா இந்திய சந்தையின் துவக்கநிலை மற்றும் அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் சந்தையில் கூட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்காத நிலையில், எலெக்ட்ரிக் வாகன சந்தையில் உள்ள போட்டியாளர்கள் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை வழங்கி வரும் நிலையில் ஆக்டிவா எலெகட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கண்டிப்பாக பெற்றிருக்கும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வளரும் நாடுகளுக்கு உருவாக்கப்பட்டு வருகின்ற ஆக்டிவா எலெக்ட்ரிக் ஜப்பானில் உள்ள ஹோண்டாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹோண்டாவின் ஆக்டிவா எலெகட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகலாம்.

Related Motor News

QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா

தமிழ்நாட்டில் ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் QC1 எலெக்ட்ரிக் விற்பனைக்கு எப்பொழுது வரும்..!

ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

102 கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா ஆக்டிவா e: ஸ்கூட்டரின் சிறப்புகள்

எலெக்ட்ரிக் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இன்று வெளியாகிறது..!

104 கிமீ ரேஞ்சு.., பேட்டரி ஸ்வாப்பிங் உடன் ஆக்டிவா e: ஸ்கூட்டரை வெளியிடும் ஹோண்டா

Tags: Honda Activa Electric
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

vida vx2 go 3.4 kwh

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan