மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகின்ற கோல்டுஸ்டார் 650 அடிப்படையில் ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் B65 என்ற பெயரில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு மார்ச் 2025ல் இந்தியாவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட என்ஃபீல்டின் பியர் 650 பைக்கினை எதிர்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஒற்றை சிலிண்டர் 650சிசி எஞ்சின் உட்பட பல்வேறு மெக்கானிக் பாகங்கள் அனைத்தும் கோல்டுஸ்டார் 650ல் இருந்து பெற்றுள்ளது. 652சிசி ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் அதிகபட்ச பவரை 6500RPM-ல் 45 Hp , 4000RPM-ல் 55 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரோட்ஸ்டெர் பைக்கிலிருந்து மாறுபட்ட ஸ்கிராம்பளர் வகைக்கு ஏற்ப முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்று பின்புறத்தில் 17 அங்குல வீல் கொண்டு ஆஃப் ரோடு சாலைகளில் பயன்படுத்தும் வகையில் பைரேலி…
Author: MR.Durai
ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 அடிப்படையில் புதிதாக பாபர் ரக ஸ்டைல் மாடல் Goan கிளாசிக் 350 என்ற பெயரில் நவம்பர் 23ஆம் தேதி மோட்டோவெர்ஸ் 2024 அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்தியாவில் பாபர் ரக ஸ்டைல் மாடல்கள் பெரிய அளவிலான வரவேற்பினை பெறவில்லை என்றால் ஏற்கனவே ஜாவா நிறுவனத்தின் பெராக் மற்றும் 42 பாபர் போன்ற மாடல்கள் விற்பனையில் உள்ள நிலையில் இந்த இரு மாடல்களுக்கும் சவாலினை ஏற்படுத்த முடியும் கிளாசிக் 350 பைக்கின் அடிப்படையிலான கோன் கிளாசிக் 350 மாடல் U வடிவ சற்று மேல் நோக்கிய ஹேண்டில் பார், வெள்ளை நிறத்துடன் கூடிய டயர், வயர் ஸ்போக்டூ வீல், ஒற்றை இருக்கை ஆப்சன் பெற்றிருந்தாலும் கூடுதலாக இரண்டு இருக்கைகளை இலகுவாக பொருத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஜே சீரியஸ் இன்ஜின் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது அடிப்படையில் கிளாசிக் 350, மற்றும்…
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற மேக்னைட் எஸ்யூவி காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் தற்பொழுது பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தென் ஆப்பிரிக்க சந்தைக்கு 2,700 கார்கள் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2020 முதல் மேக்னைட் எஸ்யூவி மாடலின் ஏற்றுமதியை துவங்கிய நிசான் இந்தியா நிறுவனம் சுமார் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கூடுதலான கார்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்துள்ளது இந்தியாவில் எவ்வளவு கார்களை மாதம் தோறும் விற்பனை செய்கின்றதோ அதே அளவில் பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்த நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றது குறிப்பாக இந்திய சந்தையில் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலாக தொடர்ந்து இருந்து வந்த நிலையில் தற்பொழுது தான் கூடுதலாக எக்ஸ்-ட்ரையில் மாடலை அறிமுகம் செய்திருந்தது. 2025 ஆம் ஆண்டின் மத்தியில் இந்நிறுவனம் டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி மற்றும்…
இத்தாலியை தலைமை இடமாக கொண்டுள்ள பிர்க்ஸ்டன் பிராண்ட் ஆனது தற்பொழுது சீனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. பிரிக்ஸ்டன் நிறுவனம் இந்தியாவில் மோட்டோஹாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தற்பொழுது 4 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. 500சிசி பிரிவில் அறிமுகம் விலையின் ஆரம்ப விலை ₹4, 74,000 முதல் துவங்கி அதிகபட்சமாக ரூபாய் 9 லட்சத்து 11 ஆயிரம் முறை விற்பனை செய்யப்படுகின்றது. Brixton Crossfire 500X ரூ.4,74,000 விலையில் துவங்குகின்ற ரெட்ரோ ரோடுஸ்டெர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிராஸ்ஃபயர் 500X மாடலில் 486 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சின் அதிகபட்சமாக 47.6 ஹெச்பி பவர் மற்றும் 43 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக இந்த மாடல் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களுடன் முழுமையான எல்இடி லைட் மற்றும் டிஸ்க் ப்ரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் பெற்று இருக்கின்றது. Brixton Crossfire 500XC கிராஸ்ஃபயர் 500X…
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற அப்பாச்சி ரக பைக் வரிசையில் இடம் பெற்று இருக்கின்ற 160 சிசி இன்ஜின் பெற்ற மாடலின் நான்கு வால்வு கொண்ட வேரியண்டில் தற்பொழுது கூடுதலாக அப்சைட் டவுன் ஃபோர்க்கானது கோல்ட் நிறத்தில் பெற்று மிகச் சிறப்பான கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான மூன்று நிறத்தைக் கொண்டிருக்கின்றது. அப்பாச்சி 160 பைக்கின் தோற்ற அமைப்பிலும் மற்றபடி வசதிகளிலும் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை கூடுதலாக அப்சைட் டவுன் ஃபோர்க் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. TVS Apache RTR 160 4V gets USD Fork ஏற்கனவே இந்த பைக்கில் 6 வேரியண்டுகள் உள்ள நிலையில் கூடுதலாக 7வது வேரியண்ட் சேர்க்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்ட மாடலை விட ரூ.520 மட்டுமே கூடுதலாக அமைந்துள்ளது. இந்த மாடல் சந்தையில் உள்ள பல்சர் என்160, பல்சர் என்எஸ்160, எக்ஸ்ட்ரீம் 160R 4V, மற்றும் SP160 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது. 159.7cc…
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஸ்கிராம்பளர் ரக பியர் 650 பைக்கின் விலை ரூ.4.03 லட்சம் முதல் ரூ.4.25 லட்சம் வரை உள்ள நிலையில் மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 2025 Royal Enfield Bear 650 குறைவான ஆஃப்ரோடு தொடர் ஹைவே பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுள்ள பியர் 650 மாடலில் தொடர்ந்து ராயல் என்ஃபீல்டின் 650சிசி ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற 650சிசி பைக்குகளை போல இரட்டை புகைப்போக்கி பெறாமல் 2-1 முறைக்கு எக்ஸ்ஹாஸ்ட் மாற்றப்பட்டுள்ளதால் கூடுதல் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47.4 hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச எடை 216 கிலோ ஆக உள்ள bear 650 மாடலின் நீளம் 218 mm, அகலம், 855 mm மற்றும் உயரம் 1160 mm பெற்றுள்ள…