ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான ஆக்டிவா வரிசையில் உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற ஆக்டிவா 125 மாடலில் TFT கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்று ரூ. முதல் ரூ. வரையிலான (எக்ஸ்ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 Honda Activa 125 முக்கிய மாற்றங்கள் 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரில் Honda RoadSync ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. OBD2B ஆதரவினை பெற்ற 125சிசி எஞ்சின் பெற்றுள்ளது. 6 விதமான நிறங்களை பெறுகின்றது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் அடிப்படையான டிசைனில் மாற்றங்கள் இல்லை என்றாலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள முன்புறத்தில் பேனல் அமைப்பில் கலர் அமைப்புகள் மற்றும் பிரவுன் கலரில் கொடுக்கப்பட்ட சீட் மற்றும் உட்புற பேனல்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கருப்பு, கிரே மெட்டாலிக், கிரவுண்ட் கிரே, ப்ளூ, ரெட் மெட்டாலிக், மற்றும் வெள்ளை என 6 விதமான நிறங்களை பெற்று DLX, H-Smart என இரண்டு விதமான வேரியண்ட் பெறும் நிலையில் ஹெச்-ஸ்மார்ட் வேரியண்டில் ரிமோட் மூலம்…
Author: MR.Durai
125சிசி சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஹோண்டா நிறுவனத்தின் 2025 SP125 பைக்கில் டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. துவக்க நிலை டிரம் பிரேக் வேரியண்டில் வெறும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மட்டும் பெற்று இருக்கின்ற நிலையில் டாப் வேரியண்டில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் உடன் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களை பெறுவது உறுதியாகி உள்ளது. SP125 எஞ்சின் பவர் மற்றும் டார்க் தொடர்பில் எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது. மேலும் முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு மேம்பாடுகளான நிறங்கள் மற்றும் ஸ்டைலிசான பாடி கிராபிக்ஸ் பெற உள்ளது. அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்தும் 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பெற்று, ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட முழுமையான எல்இடி லைட் பெற்று, பின்புறத்தில் புதிய எல்இடி லைட் ஆனது மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது அதே நேரத்தில் மற்ற அம்சங்களில் பெரிதாக எந்த மாற்றங்களும் கிடையாது.…
வரும் ஜனவரி 17ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாரா அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் முதன்முறையாக வெளியாகி 2025 ஆட்டோ எக்ஸ்போ அல்லது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ அரங்கில் இந்திய சந்தைக்கு காட்சிக்கு வரவுள்ளது. ஏற்கனவே e Vitara மாடல் இத்தாலி நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடலும் அதே அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் பேட்டரி ஆப்ஷனை பெற்றிருப்பது உறுதியாகி இருக்கின்றது. Heartect-e பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலில் FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டார் …
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 35 சீரீஸ் மூலம் 3.5Kwh பேட்டரி பெற்று 153 கிமீ ரேஞ்ச் வழங்கும் புதிய 3501 மற்றும் 3502 என இரு மாடல்கள் விற்பனைக்கு ரூ.1,20,000 முதல் 1,27,243 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக குறைந்த விலை சேத்தக் 3503 என்ற மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. அடிப்படையான டிசைன் ஏற்கனவே விற்பனையிலிருந்து சேத்தக் போல அமைந்து இருந்தாலும் கூட பல்வேறு மாற்றங்கள் பெற்றிருக்கின்றது. புதிய சேத்தக் ஸ்கூட்டரின் ஃபிரேம் உட்பட அடிப்படையான பேட்டரி இருப்பிடம், மோட்டார் உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது 35 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக வீல்பேஸ் 25mm வரை அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 1350mm ஆகவும் இருக்கையின் நீளம் 80mm வரை உயர்ந்துள்ளது. 3.5Kwh பேட்டரி பொருத்தபட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆக தொடர்ந்து உள்ள நிலையில் சிங்கிள் சார்ஜில் 153 கிமீ கிடைக்கும்…
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் டூரர் ரக மாடலான கவாஸாகி நிறுவனத்தின் நிஞ்சா 1100SX பைக்கில் 136hp பவரை வழங்கும் 1,099cc எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.13.94 லட்சத்தில் துவங்குகின்றது. ஜனவரி 2025 முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. 1000SX மாடலை விட மாறுபட்ட பவரை வெளிப்படுத்துகின்ற புதிய 1100SX பைக்கில் லிக்யூடு கூல்டு 1,099cc இன்-லைன் நான்கு சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 136hp பவரை 9,000rpm-லும், 113Nm டார்க் ஆனது 7,600rpm-லும் வெளிப்படுத்துகின்ற நிலையில் இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மெட்டாலிக் டையப்லோ கருப்பு என்ற நிறத்தினை பெறுகின்ற இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட் பெற்று, டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு பெறுகின்றது. மேலும் இதில் க்ரூஸ் கண்ட்ரோல், விரைவு ஷிஃப்டர், இழுவைக் கட்டுப்பாடு, என்ஜின் பிரேக் கட்டுப்பாடு, IMU ஆகியவை உள்ளது. ப்ரீலோட், ரீபௌண்ட் மற்றும் கம்ப்ரஷன் அட்ஜஸ்ட்டிபிலிட்டி கொண்ட அப்சைடு டவுன் ஃபோர்க் கொண்ட நிஞ்ஜா 1100SX…
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ ஜனவரி 17 முதல் 22 வரை பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதுவரை ஆட்டோ எக்ஸ்போ என அழைக்கப்பட்டு வந்த மோட்டார் கண்காட்சி இனி பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ என்ற பெயரிலே அழைக்கப்பட உள்ளது. இந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் வாகன நிறுவனங்கள் மட்டுமல்லாமல் கட்டுமானம் சார்ந்த நிறுவனங்களும், பேட்டரி தொடர்பான நுட்பங்களை வழங்கும் நிறுவனங்களும் வழக்கம் போல வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களும், டயர் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவை வழங்கும் நிறுவனங்கள், ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் மிதிவண்டி தயாரிப்பாளர்கள், மற்றும் நகரங்களுக்கான விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்களில் குறிப்பாக மாருதி சுசூகி, டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார், ஹூண்டாய் இந்தியா, மஹிந்திரா, ஹீரோ மோட்டோ கார்ப் பிஎம்டபிள்யூ, சுசூகி மோட்டார்சைக்கிள், டிவிஎஸ் மோட்டார்,…