பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 35 சீரீஸ் மூலம் 3.5Kwh பேட்டரி பெற்று 153 கிமீ ரேஞ்ச் வழங்கும் புதிய 3501 மற்றும் 3502 என இரு மாடல்கள் விற்பனைக்கு ரூ.1,20,000 முதல் 1,27,243 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக குறைந்த விலை சேத்தக் 3503 என்ற மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.
அடிப்படையான டிசைன் ஏற்கனவே விற்பனையிலிருந்து சேத்தக் போல அமைந்து இருந்தாலும் கூட பல்வேறு மாற்றங்கள் பெற்றிருக்கின்றது. புதிய சேத்தக் ஸ்கூட்டரின் ஃபிரேம் உட்பட அடிப்படையான பேட்டரி இருப்பிடம், மோட்டார் உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது 35 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக வீல்பேஸ் 25mm வரை அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 1350mm ஆகவும் இருக்கையின் நீளம் 80mm வரை உயர்ந்துள்ளது.
3.5Kwh பேட்டரி பொருத்தபட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆக தொடர்ந்து உள்ள நிலையில் சிங்கிள் சார்ஜில் 153 கிமீ கிடைக்கும் எனவும், சார்ஜிங் நேரம் 950 வாட்ஸ் சார்ஜர் பயன்படுதினால் வெறும் 3 மணி நேரம் மட்டுமே 0-80 % பெற தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.
புதிதாக இந்த சேத்தக் ஸ்கூட்டரில் தொடுதிரை அம்சத்துடன் கூடிய TFT கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு ஸ்மார்ட்போன் இணைப்பு, இசைக் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த நேவிகேஷன், ஜியோ ஃபென்சிங் மற்றும் பலவற்றை வழங்குகின்றது.
முந்தைய மாடல்களும் தொடர்ந்து விற்பனையில் உள்ளதால் 6 வேரியண்டுகளில் சேத்தக் கிடைக்கின்றது.
- chetak 3501 – ₹ 1,27,343
- chetak 3502 – ₹ 1,20,000
- chetak 3503 – TBA