தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடி மாடலாக களமிறங்க உள்ள டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக்கில் இடம்பெறப்போகும் முக்கிய வசதிகள் மற்றும் விலை உள்பட பல்வேறு விபரங்களை தொகுப்பாக அறிந்து கொள்ளலாம். டிவிஎஸ் அப்பாச்சி RR310S ஓசூரில் செயல்படுகின்ற டிவிஎஸ் நிறுவனம் ஜெர்மனி நாட்டின் மிக பிரசத்தி பெற்ற பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்துடன் இணைந்த தயாரித்த முதல் மாடலான பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கினை தொடர்ந்து அதன் அடிப்பையிலே முழுதும் அலங்கரிக்கப்பட்ட அதாவது Full faring செய்யப்பட்ட மாடலாக அப்பாச்சி ஆர்ஆர்310எஸ் களமிறங்க உள்ளது. டிசைன் டிவிஎஸ் அகுலா என 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட மாடல் கான்செப்டை அடிப்படையிலே தற்போது அப்பாச்சி ஆர்ஆர்310எஸ் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் எனும் நேக்டூ ஸ்போர்ட்டிவ் பைக் மாடலின் அடிப்படை தாத்பரியங்கள் மற்றும் உதிரிபாகங்ள் என பலவற்றை பெற்றதாக இந்த மாடல் அமைந்திருக்கும். முன்புறத்தில் இரட்டை…
Author: MR.Durai
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் ஃபேரிங் மற்றும் பவர்ஃபுல்லான மாடலாக வரவுள்ள அப்பாச்சி RR 310S பைக்கின் காப்புரிமை பெறுவதற்காக கோரிய மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அப்பாச்சி RR 310S பரவலாக பல்வேறு முறை சாலை சோதனை ஓட்டத்தில் சிக்கிய அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் மாடல் மிகவும் நேர்த்தியான வடிவ அம்சங்களை பெற்ற அகுலா 310 கான்செப்ட் பைக்கினை பின்னணியாக கொண்டதாகும். 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட்ட டிவிஎஸ் அகுலா 310 கான்செப்ட் அடிப்பையிலான இதில் முன்பக்கத்தில் மிகவும் கூர்மையான அமைப்பினை வெளிப்படுத்தும் வகையிலான எல்இடி முகப்பு விளக்கு, அகலமான விண்ட்ஷீல்டு பெற்றதாகவும் காட்சி தருகின்றது. டிவிஎஸ்-பி.எம்.டபிள்யூ நிறுவனங்களின் கூட்டணியில் உருவான பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் அடிப்படையிலான ஃபேரிங் செய்யப்பட்ட அப்பாச்சி 310 மாடலில் 34 bhp ஆற்றல் மற்றும் டார்க் 28 Nm வெளிப்படுத்தும் 313சிசி எஞ்ஜினே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310…
நிசான் இந்தியா நிறுவனம் நமது நாட்டில் டட்சன் மற்றும் நிசான் பிராண்டுகளில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. நிசான் புத்தாக்க நடவடிக்கைகளில் ஒன்றான நீரை சேமிக்கும் வகையிலான நீரில்லாத வாட்டர் வாஷ் முறையை செயல்படுத்த சிறப்பு முகாமை தொடங்கியுள்ளது. நீரில்லாத வாட்டர் வாஷ் ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 24, 2017 வரை நாடு முழுவதும் உள்ள 148 நிசான் டீலர்களில் சிறப்பு வாட்டர் வாஷ் முகாமை ஹேப்பி வித் நிசான் என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இந்த முகாமில் நீரில்லாமல் கார்களை சுத்தம் செய்வதற்கான நுட்பத்தினை செயல்படுத்துகின்றது. கார் வாஷ் செய்வதற்கான உபகரணங்களை கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இந்த நுட்பத்தினால் கூடுதலான தண்ணீர் அவசியமில்லாமல் கார்களை சுத்தம் செய்யலாம், இந்த நுட்பத்தின் வாயிலாக இந்த 8 நாட்களில் 2.8 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்க இயலும், எனவே இந்ந முறையினால் ஆண்டிற்கு 130 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்கலாம்…
சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கூடுதல் வசதிகளை பெற்றதாக 2017 சுஸூகி ஜிக்ஸெர் SP மற்றும் ஜிக்ஸெர் SF SP விற்பனைக்கு வந்துள்ளது. மூன்று நிற கலவையுடன் பாடி கிராபிக்ஸ் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது. 2017 சுஸூகி ஜிக்ஸெர் SP 2017 ஜிக்ஸெர் SP பேட்ஜ் பதிக்கப்பட்ட புதிய மாடல்களிலும் எஞ்சின் ஆப்ஷன் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. நேக்டூ மற்றும் ஃபேரிங் செய்யப்பட்ட இரு மாடல்களிலும் சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் தரவல்ல 14.8hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்துவதற்கு 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது. முந்தைய ஆண்டின் ஸ்பெஷல் எடிசன் போலவே மிக சிறப்பான நிற கலவையை பெற்றதாக வந்துள்ள இரு மாடல்களிலும் மூன்று விதமான நிற…
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 25 வது GAIKINDO இந்தோனேசியா ஆட்டோ ஷோ அரங்கில் புதிய மிட்ஷூபிசி எக்ஸ்பேண்டர் எம்பிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7 இருக்கைகளை பெற்ற எக்ஸ்பேன்டர் மிக சிறப்பான இடவசதியுடன் கூடியதாக விளங்குகின்றது. மிட்ஷூபிசி எக்ஸ்பேண்டர் எம்பிவி இந்திய சந்தையில் மிட்ஷூபிசி நிறுவனம் பஜெரோ ஸ்போர்ட் மற்றும் மான்ட்ரியோ எஸ்யூவி மாடலை விற்பனை செய்து வரும் நிலையில் இந்தோனேசியா ஆட்டோ கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள புத்தம் புதிய யுடிலிடி ரக மாடலாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ்பேண்டர் மிக உறுதியான கட்டுமானத்தை பெற்றதாக ஆசியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் விற்பனைக்கு கிடைக்க தொடங்க உள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செயப்பட்டு வருகின்ற அவூட்லேண்டர் மற்றும் பஜெரோ ஸ்போர்ட் போன்றவற்றுக்கு இணையான முகப்பு அமைப்பினை பெற்றுள்ள எக்ஸ்பேன்டர் மிக நேர்த்தியான எக்ஸ் வடிவ கிரில் அமைப்பினை வெளிப்படுத்தும் வகையிலான தோற்றத்துடன் எல்இடி முகப்பு மற்றும் பனி விளக்குகளை பெற்றுள்ளது. 4.5 மீட்டர் நீளத்தை பெற்றுள்ள இந்த…
டீசல் விலை குறைவு என்ற மாயை மெல்ல மறைந்து வருவதனை உறுதி செய்யும் வகையில் டீசல் கார் விற்பனை இந்தியளவில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பெட்ரோல் கார்களை விட கூடுதலான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்த வல்ல டீசல் கார்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசுகள் சர்வதேச அளவில் மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியா மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளிலும் டீசல் கார் விற்பனை தொடரந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றது. டீசல் கார் விற்பனை சரிவு கடந்த 2012-2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வாகன விற்பனையில் டீசல் கார்களின் பங்களிப்பு 47 சதவிகிதமாக இருந்த சூழ்நிலையில் 2016-2017 ஆம் ஆண்டின் முடிவில் 27 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. டீசல் கார்கள் விற்பனை சரிவு நிலவரம் 2012-13 வரையிலான காலகட்டத்தில் 47 சதவிகிதமாக, இருந்து வந்த நிலையில் 42 சதவிகிதமாக 2013-14 ஆண்டிலும், 37 சதவிகிதமாக…