சூப்பர் பைக் பிரியர்களுக்கு விருப்பமான மாடலாக விளங்கும் கேடிஎம் டியூக் 200 , டியூக் 250 மற்றும் ஆர்சி 200 பைக்குகளின் விலை தமிழ்நாட்டில் குறைக்கப்பட்டு புதுச்சேரியில் மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் டியூக் விலை – ஜிஎஸ்டி ஜிஎஸ்டிக்கு பிறகு கேடிஎம் டியூக் 200, டியூக் 250 மற்றும் ஆர்சி 200 பைக்குகள் விலை தமிழகத்தில் ரூ. 3,677 முதல் ரூ.4,449 வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டியூக் 250சிசி பைக் ரூ.4,449 வரை தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது. கேடிஎம் டியூக் 200, டியூக் 250 மற்றும் ஆர்சி 200 விலை விபரம் பின் வருமாறு ;- டியூக் 200 – ரூ. 1,46,303 டியூக் 200 – ரூ. 1,75,923 ஆர்சி 200 – ரூ. 1,75,027 டியூக் 390 – ரூ. 229,682 ஆர்சி 390 – ரூ. 2,34,503 (தமிழ் நாடு எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல்) நாடு முழுவதும் பல்வேறு…
Author: MR.Durai
நிசான் இந்தியா நிறுவனத்தின் கார்கள் , எஸ்யூவி மற்றும் டட்சன் பிராண்டு கார்களுக்கு அதிகபட்சமாக 3 சதவிகிதம் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. டெரானோ எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்சமாக விலை குறைக்ககப்பட்டுள்ளது. நிசான் கார்கள் நிசான் நிறுவனம் இந்தியாவில் மைக்ரா, மைக்ரா ஏக்டிவ் , சன்னி மற்றும் டெரானோ எஸ்யூவி போன்ற மாடல்களுடன் ஜிடி-ஆர் சூப்பர் கார் மாடலையும் விற்பனை செய்து வருகின்றது. தங்களது மாடலில் ஜிஎஸ்டி வரிக்கு பிறகு அதிகபட்சமாக 3 சதவிகிதம் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக டெரானோ எஸ்யூவி காரின் விலை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு மாநிலம் மற்றும் டீலர்கள் வாரியாக மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டட்சன் கார்கள் நிசானின் பட்ஜெட் பிராண்டு மாடலான டட்சன் கார்களின் விலையும் ஜிஎஸ்டி வரவினால் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் டட்சன் பிராண்டில் ரெடி-கோ, கோ கோ ப்ளஸ் போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்து நிசான்…
இசுசூ மோட்டார் இந்தியா நிறுவனம் எக்ஸ்-ஷோரூம் விலையில் 6 % 12% வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பிறகு MU-X விலையில் 12 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இசுசூ கார்கள் இசுசூ நிறுவனத்தின் MU-X எஸ்யூவி மாடலின் விலை ரூ. 22,38,358 எக்ஸ்ஷோரூம் சென்னை விலையாக குறைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய வரி வதிப்பை விட 8 % குறைப்பாகும். சராசரி நாடு முழுவதும் 6 % முதல் 12 % வரை 7 இருக்கை பெற்ற MU-X எஸ்யூவி விலை குறைக்கப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் ரக பிக்கப் டிரக் மாடலின் விலையை 6 சதவிகிதம் வரை குறைத்துள்ளதால் இசுசூ D-MAX V-Cross தற்போது ரூ. 12,67,111 சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. வர்த்தக ரீதியான பிக்கப் டிரக மாடல்களான D-MAX S-CAB மற்றும் D-MAX போன்றவற்றின் விலையை குறைத்துள்ளதால் D-MAX S-CAB ரூ. 801,418 மற்றும் D-MAX ரூ. 681,004 என்ற விலையில் எக்ஸ்ஷோரூம்…
இந்தியாவில் ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரிக்கு பிறகு ஆட்டோமொபைல் துறையில் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் ஸ்கோடா நிறுவனம் ரூ. 2.4 லட்சம் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஸ்கோடா கார்கள் செக் குடியரசை மையமாக கொண்டு செயல்படுகின்ற ஸ்கோடா இந்தியா நிறுவனம் ஜிஎஸ்டி வரி விதிப்பை தொடர்ந்து கார்களின் விலையை குறைத்துள்ளது. குறிப்பாக ஆக்டாவியா மற்றும் சூப்பர்ப் போன்ற மாடல்களின் விலையை குறைத்துள்ளது. ரேபிட் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வரும் ஜூலை 13ந் தேதி களமிறங்க உள்ள 2017 ஸ்கோடா ஆக்டாவியா காரின் விற்பனையில் உள்ள வெளியேறுகின்ற மாடலுக்கும் விலை குறைப்பை ரூ. 1.75 லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளது. சூப்பர்ப் காரின் விலையை அதிகபட்சமாக ரூ.2.40 லட்சம் வரை குறைத்துள்ளது. ரேபிட் மாடலுக்கு உன்டான விலை குறைப்பு குறித்து அடுத்த சில நாட்களில் வெளியாகலாம். நாட்டின் முன்னணி…
இஸ்ரேல் நாட்டில் மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நமது நாட்டின் பிரதமர் மோடி அவர்களுக்கு இஸ்ரேல் போன்ற வறண்ட தேசங்களில் கடல்நீரை குடிநீராக மாற்றும் கல்-மொபைல் (Gal-mobile) ஜீப் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது குறித்து இங்கே காணலாம். கல்-மொபைல் வாகனம் இஸ்ரேல் நாட்டில் அமைந்துள்ள ஹைஃபாவில் உள்ள ஓல்கா கடற்கரையில் இந்திய பிரதமருக்கு கடல்நீரை குடிநீராக்கும் வாகனத்தின் செயல்விளக்கம் குறித்து அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்நாயுஹுவை அவர்களும் இணைந்து பார்வையிட்ட படங்கள் மற்றும் தகவல்கள் குறித்து அறிந்துகொள்ளலாம். இஸ்ரேல் போன்ற வறட்சி மிகுந்த தேசங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் கடல்நீர் முக்கிய பங்காற்றி வருகின்றது. மேலும் இந்த வாகனங்கள் பூகம்பம், வெள்ளம், குடிநீர் பற்றாக்குறை அதிகமுள்ள பகுதிகளுக்கு இந்த வாகனத்திலிருந்து நீரை எடுத்துச் செல்வதற்கு மிகுந்த துனை புரியும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாகனத்தில் உள்ள இயந்திரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 20,000 லிட்டர் வரை…
உலகளவில் 500 பைக்குகள் மட்டுமே தயாரிக்க உள்ள டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா ரூ. 1.12 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த பைக் தற்போது விவேக் ஒப்ராய் எனும் இந்தியர் வாங்கியுள்ளார். டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா உலகின் சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா பைக்கினை கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த டுகாட்டி நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது முதல் பைக்கினை விற்பனை செய்துள்ளது. சூப்பர் பைக் ஆர்வலரான விவேக் ஒப்ராய் என்பவர் தனது காரேஜில் புதிதாக டுகாட்டி வரிசை பைக்குகளில் விலை உயர்ந்த கார்பன் ஃபைபர் பாடியால் கட்டமைக்கப்பட்ட இலகு எடை மற்றும் 215bhp பவரை வெளிப்படுத்தும் பைக்கை வாங்கியுள்ளார். இந்த பைக்கின் சிறப்பம்சங்களை காணலாம். 500 பைக்குகளில் தற்போது இவர் வாங்கியுள்ள பைக்கின் எண் 209 ஆகும். டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா சிறப்பம்சங்கள் கார்பன் ஃபைபர்…